search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Street Meetings"

    • கழக உடன்பிறப்புகள் தெருமுனை கூட்டத்தினை மிகச்சிறப்பாக நடத்திட வேண்டும்.
    • நல்லூர் பகுதி கழக செயலாளர் தலைமையிலும், எனது முன்னிலையிலும் நடைபெறவுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்க ளின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்டம், தெற்கு மாநகரம், நல்லூர் பகுதி கழகம் சார்பில் 8 இடங்களில் தெருமுனை கூட்டம் நல்லூர் பகுதி கழக செயலாளர் மேங்கோ பழனிச்சாமி தலைமையிலும், எனது முன்னிலையிலும் நடைபெறவுள்ளது. இக்கூத்ததில் தலைமைக் கழக பேச்சாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். அதில் நல்லூர் பகுதி 56-வது வார்டு இராஜீவ்காந்தி நகரில் 8-ந்தேதிகரூர் முரளி, 09-ந்தேதி 48-வது வார்டு நல்லூர் மற்றும் ராக்கியாபாளையம் பிரிவில் பவானி கண்ணன், 10ந்தேதி 47-வது வார்டு முதலிபாலையம் பிரிவு கந்திலி கரிகாலன், 11ந்தேதி அன்று 46-வது வார்டு காசிபாளையம் மற்றும் மணியகாரம்பாளையம் ஈரோடு இளையகோபால், 12ந்தேதி அன்று 49-வது வார்டு வள்ளியம்மை நகர், சுப்பிரமணிய நகர் திருப்பூர் கூத்தரசன் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.

    அதுசமயம் மாநகர, பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் தெருமுனை கூட்டத்தினை மிகச்சிறப்பாக நடத்திட வேண்டுமெனவும் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.அடிப்படை தேவைகள் அனைத்தும் உடனுக்குடன் சரி செய்யப்படும் என்றார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி குருவிகுளம் ஒன்றியம் இளையரசேனந்தல் மற்றும் வெங்கடாசலபுரம் ஆகிய பகுதிகளில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு குருவிகுளம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார்.

    மாவட்ட அவைத் தலைவர் பத்மநாபன், மாவட்ட தூய்மை நகரங்களுக்கான துணைச் செயலாளர் ராஜதுரை, ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, சேர்மதுரை, மாவட்ட பிரதிநிதி மனோகரன், கிளைச் செயலாளர்கள் ஆண்ட்ரூஸ், லட்சுமணபெருமாள், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் தலைமை கழக பேச்சாளர் வேங்கை சந்திரசேகர் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கூறுகையில்,

    இந்த பகுதியின் முக்கிய தேவையான குடிநீர் கிடைப்பதற்கு தமிழக அரசு திட்டம் வகுத்துள்ளதாகவும், கூடிய விரைவில் திட்டம் நிறைவேறி தண்ணீர் பிரச்சினை நீங்கும், மேலும் இப்பகுதியில் அடிப்படை தேவைகள் அனைத்தும் உடனுக்குடன் சரி செய்யப்படும் என்றார். இதில் ஒன்றிய கவுன்சிலர் மனோகரன், ஐசக்தவராஜ், பொருளாளர் செல்ல பாண்டியன், ஒன்றிய அவைத்தலைவர் செந்திவேல்கடற்கரை, திருவேங்கடம் முன்னாள் பேரூர் செயலாளர் பவுல்ராஜ், வெங்கடாசலபுரம் செயலாளர் கருப்பசாமி, நக்கமுத்தலம்பட்டி செயலாளர் சூசை, கருப்பசாமி, ஜான் பிரிட்டோ, பிச்சைதலைவன் பட்டி செயலாளர் பாண்டித்துரை, திருமால் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×