search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "strengthens bones"

    • கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
    • மலச்சிக்கல், செரிமான பிரச்சினையை சரிசெய்கிறது.

    முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தின் ஆரோக்கிய சிறப்புகளை பற்றி தெரிந்து கொள்வோம்..!

    பலாப்பழத்தில் புரதச்சத்து, மாவுச்சத்து, ஏ, பி, சி வைட்டமின்கள், கால் சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. பலாவின் இலை, காய், பழம், விதை, பால், வேர் என அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

    பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் சி, ஏ நோய் எதிர்ப்பு சக்தி, கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சினைகளை சரிசெய்கிறது.

    பலா, குடல்களில் ஏற்படும் நோய்களை போக்கி, குடல்களின் இயக்கத்தை மேம்படுத்தும். இதில் உள்ள கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களை உறுதியாக்குவதுடன், எலும்பு தேய்மானம், மூட்டு வலி பிரச்சினை களையும் குணப்படுத்த உதவுகிறது.

     பலாப்பழம், ரத்தத்தில் உள்ள சோடியம் உப்பின் அளவை சரியான அளவில் பராமரித்து உடலின் ரத்த அழுத்த நிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது. இதில் இருக்கும் கரோட்டினாய்டு சத்து, டைப்- 2 நீரிழிவு நோய் வராமல் பாதுகாக்க உதவுகிறது.

    இதில் உள்ள கார்போஹைட்ரேட், உடலில் ஆற்றலை அதிகரிக்கும். பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க கூடியது. மேலும், உடல் உஷ்ணத்தை தணிக்கும். பித்த மயக்கம், கிறுகிறுப்பு, வாந்தி ஆகியவற்றையும் குணமாக்கும்.

    பலாப்பழத்தில் காப்பர் சத்து நிறைந்துள்ளதால் தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்து, தைராய்டு ஹார்மோன் பிரச்சினை ஏற்படுவதைத் தடுக்கிறது. இதிலுள்ள வைட்டமின் பி-6, ரத்தத்தில் உள்ள ஹோமோசிஸ்டின் அளவைக் குறைத்து, இதய பிரச்சினைகளை குணப்படுத்தும். இதில் உள்ள இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் சி சத்துகள், புது ரத்தத்தை உருவாக்குவதோடு, ரத்தசோகை பிரச்சினைகளையும் சரிசெய்கிறது.

    • பச்சிளம் குழந்தைகளுக்கு தினமும் மசாஜ் செய்வது அவசியமானது.
    • எலும்புகளுக்கும் வலு சேர்க்கும்.

    பச்சிளம் குழந்தைகளுக்கு தினமும் மசாஜ் செய்வது அவசியமானது. அது குழந்தைகளின் சருமத்துக்கும், எலும்புகளுக்கும் வலுசேர்க்கும். உடல் எடை, வளர்ச்சிக்கும் வழிவகை செய்யும்.

    * முதலில் குழந்தையின் தலையில் கைகளை வைத்து சிறிது எண்ணெய் தடவி மெதுவாக மசாஜ் செய்ய தொடங்க வேண்டும். கைவிரல்களின் அழுத்தம் மென்மையாக இருக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகளின் எலும்பு பகுதிகளும், இணைப்பு பகுதிகளும் வலிமையாக இருக்காது.

    * மூக்கு, காது மடல்களை மென்மையாக வருடிவிட வேண்டும்.

    * பின்னர் இரு கைகளையும் மார்பு பகுதியில் வணங்குவது போல் குவித்து வைத்து மெதுவாக நீவி விட வேண்டும்.

    * வயிற்று பகுதியில் மசாஜ் செய்யும்போது அடி வயிற்றில் கையை வைத்து கடிகார முட்கள் சுழலுவது போல் மெதுவாக அழுத்திவிட வேண்டும்.

    * மேலும் குழந்தையின் முட்டியையும், பாதங்களையும் பிடித்தபடி வயிற்றை நோக்கி மெதுவாக அமுக்க வேண்டும்.

    * பின்னர் தொடை பகுதியில் இருந்து உள்ளங்கால் வரை நீவி விட வேண்டும்.

    * அதேபோல் தோள்பட்டையில் இருந்து உள்ளங்கை வரைக்கும் மென்மையாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    * குழந்தையின் மணிக்கட்டை அனைத்து திசைகளிலும் மெதுவாக திருப்பி மசாஜ் செய்து விட வேண்டும்.

    * அதன்பிறகு குழந்தையின் உள்ளங்கால்களில் பெருவிரலை கொண்டு நீவ வேண்டும்.

     * குழந்தையின் கால்களின் பத்து விரல்களையும் உங்கள் பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களை கொண்டு மெதுவாக சொடுக்கு எடுத்து விட வேண்டும்.

    * இறுதியில் குப்புற படுக்கவைத்து விரல் நுனிகளால் குழந்தையின் முதுகெலும்புகளை மேலிருந்து கீழாக மெதுவாக நீவி விட வேண்டும்.

    இவ்வாறு தொடர்ந்து குழந்தைகளுக்கு மசாஜ் செய்து வந்தால் ரத்த ஓட்டம் மேம்படும். செரிமானம் சீராக இருக்கும். மலச்சிக்கல் பிரச்சினையும் வராது.

    • எலும்புகள் வலுப்பெற சுக்கு களி பெரிதும் உதவுகிறது.
    • சுக்கு களி செய்து சாப்பிட்டால் சளி இருமல் குணமாகும்.

    சுக்கில் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள், ஆன்டி இன்பிளமேட்டரி மற்றும் ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் அடங்கியிருக்கின்றன. சுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும். சளி இருமல் என்றால் சுக்கு களி செய்து சாப்பிட்டால் சளி இருமல் குணமாகும்.

    அதுமட்டுமில்லாமல் உடலில் செரிமானப்பிரச்சினையை சீராக்குவதற்கும் இந்த சுக்குகளி உதவுகிறது. மேலும் பாலூட்டும் தாய்மார்கள் கூட இந்த சுக்கு களியை சாப்பிட்டு வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் மந்தம், வாந்தி போன்ற பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வினை அளிக்கும்.

    குழந்தைகளின் எலும்புகள் வலுப்பெற இந்த சுக்கு களி பெரிதும் உதவுகிறது.மேலும் பிரசவமான பெண்களுக்கு கர்ப்பப்பை வலுவாக மாற இந்த களியை செய்து தரலாம். உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கவும் இது உதவுகிறது.

    தேவையான பொருட்கள்

    அரிசி- 1 கப்

    சுக்கு -50 கிராம்

    ஏலக்காய் - ஒரு ஸ்பூன்

    நல்லெண்ணெய்- 100 கிராம்

    கருப்பட்டி வெல்லம் - 200 கிராம்

    செய்முறை:

    அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்துக்கொள்ள வேண்டும். சுக்கு மற்றும் வெல்லத்தை நன்றாக ஈடித்து வைத்து கொள்ள வேண்டும். அதன்பிறகு சுக்கு, ஏலக்காய், அரிசி அனைத்தும் மிக்சியில் நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

    ஒரு அடி கனமான வாணலியில் நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள மாவை கொட்டி கெட்டிதட்டாமல் கைவிடாமல் நன்கு கிளற வேண்டும். மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும். மாவு நன்றாக வெந்த பிறகு அதில் தண்ணீர் சேர்த்து காய்ச்சிய வெல்லக் கரைசலை வடித்து அதனுடன் சேர்க்க வேண்டும்.

    அதன் பிறகு வாணலியில் ஒட்டாமல் வருவதற்கு நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். இந்த கலவை பாத்திரத்தில் ஒட்டாத அளவுக்கு வரும் வரை நன்றாக கிளற வேண்டும். அதன்பிறகு உருண்டையாக திரண்டு வரும் சமயம் அடுப்பை அணைத்து பரிமாறவும். அப்படியே சுடச் சுட சாப்பிட இருமல், நெஞ்சு சளி தீரும். மேலும் பிரசவம் ஆன சமயத்தில் இதை தாய்க்கு கொடுப்பார்கள்.

    ×