search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Students-parents"

    • பள்ளிக்கூட வாசலை மறித்து கால்வாய் கட்டும் பணி நடைபெறுவதால் மாணவர்கள்-பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.
    • நாவினிப்பட்டி ஊராட்சி கவுன்சிலர் சக்திவேல் ஆகியோர் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது மேலூரில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதனையொட்டி சாலையோரம் உயரமான அளவில் சாக்கடை கால்வாய் கட்டப்பட்டு வருகிறது. பள்ளிக்கூட வாசலை மறித்து கால்வாய் கட்டப்படுவதால் மாணவ-மாணவிகள் பள்ளிக்குள் சென்று வர முடியாத நிலையில் உள்ளனர்.

    இது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தனர். பள்ளி நிர்வாகம் ஊராட்சி நிர்வாகத்திற்கும், நெடுஞ்சா லைத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இருந்தபோதும் மாணவர்கள் பணிகள் நடைபெறும் சாக்கடை கால்வாயில் ஏறி, இறங்கி பள்ளிக்குள் சென்று வர முடியாத நிலை தொடர்ந்தது.

    இதை கண்டித்து இன்று காலை பள்ளி முன்பு பெற்றோர்கள், மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறையினர், நாவினிப்பட்டி ஊராட்சி கவுன்சிலர் சக்திவேல் ஆகியோர் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து முற்றுகையிட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    ×