search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SUDDEN DEMONSTRATION"

    • கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் இன்று திடீர் போராட்டம் நடைபெற்றது
    • பல்வேறு கோரிக்ைககளை வலியுறுத்தி

    திருச்சி

    திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், மேகராஜன் முன்னிலையில் சங்கத்தின் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

    தஞ்சை, கடலூர் மாவட்டங்களில் இருந்த ஆரூரான் சர்க்கரை ஆலைகள் 14,144 விவசாயிகள் ரூ.400 கோடிக்கு 2016-ம் ஆண்டு வெட்டிக் கொடுத்த கரும்புக்கு தஞ்சை விவசாயிகள் 7,592 பேருக்கு ரூ.33 கோடிகளும், கடலூர் விவசாயிகள் 6552 பேருக்கு ரூ.12 கோடிகளும் கொடுங்கள் என்று தீர்ப்பாயம் கூறியது. அதையும் ஒரு வருட காலத்தில் 4 தவணையாக கொடுக்கவும், அதிலும் ரூ.100-க்கு ரூ.57 தருவதாக கூறுவது நியாயமா?

    அத்துடன் விவசாயிகள் பெயரில் விவசாயிகள் வங்கிக்கு போகாமல் ரூ.160 கோடிகள் விவசாயிகள் பெயரில் பெற்று ஏமாற்றியதை கண்டித்தும் கடந்த 13 நாட்களாக பாபநாசம் திருமண்டங்குடியில் போராடும் விவசாயிகளை காப்பாற்றுங்கள் என்றும், பிரதமர் மோடி கரும்புக்கு ரூ.8100 கொடுப்பதாக கூறி ரூ.2900 மட்டுமே கொடுக்கிறார். ஆனால் ஆருரான் ஆலை ரூ.1550 கரும்புக்கு தருகிறது.

    இதற்கு ஆலை முதலாளியையும், வங்கி மேலாளரையும் கைது செய்ய வலியுறுத்தியும், கடந்த ஆண்டு அதிக மழையால் அழிந்த பயிர்களுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உதவிட வேண்டுகிறோம்.60 வயதடைந்த விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    காவிரியில் சுமார் 500 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்த நீரில் 10 டி.எம்.சி. தண்ணீரை அய்யாற்றுடன் இணைத்தால் 1 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்வதுடன் 1 கோடி சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலுர், அரியலுர் மக்களுக்கு குடிநீர் கிடைக்கும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்ட நடைபெற்றது.

    ×