search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sudden suffocation"

    • லட்சுமிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
    • பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே லட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி 2-வது மெயின் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (29). கட்டிட தொழிலாளி. இவரது தாய் லட்சுமி (48). ராஜேந்திரனின் தங்கை ரேவதி. அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி ரேவதி தனது குழந்தைக்கு பால் காய்ச்சுவதற்காக சமையல் அறைக்கு சென்று லைட் போடுவதற்காக சுவிட்சை போட்டுள்ளார்.

    அப்போது ஏற்கனவே சமையல் கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டிருந்ததால் லைட் சுவிட்சை போட்டவுடன் சமையல் அறை முழுவதும் தீப்பிடித்துள்ளது.

    இதனால் அலறி துடித்த ரேவதியை காப்பாற்ற சென்ற அவரது தாய் லட்சுமி, உறவினர் கணேசன் ஆகியோர் மீதும் தீப்பிடித்தது.

    உடனடியாக அக்கம்ப க்கத்தினர் 3 பேரையும் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் உயர் சிகிச்சை க்காக 3 பேரும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த லட்சுமி, கணேசன் ஆகியோர் சிகிச்சை முடிந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினர்.

    ரேவதி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் லட்சுமிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

    உடனடியாக அவரை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே லட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×