search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suyambulingaswamy Temple"

    • இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 1-ந்தேதி தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
    • விழாவையொட்டி நாகர்கோவிலில் இருந்து உவரிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    திசையன்விளை:

    தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் பழைமையும், பெருமையும் நிறைந்தது திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்பு லிங்க சுவாமி கோவில். இங்கு சுவாமி சுயம்புவாக தோன்றி அருள்புரிந்து வருகிறார்.

    வைகாசி விசாக திருவிழா

    இங்கு ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகுசிறப்பாக நடை பெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 1-ந்தேதி தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.

    1-ந்தேதி (வியாழக் கிழமை) அதிகாலை கோவில் நடை திறப்பு, தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை, இரவு சமைய சொற்பொ ழிவு, சுயம்பு லிங்கசுவாமி வரலாறு வில்லிசை, நகைச்சுவை, திரை இசை பட்டிமன்றம் உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடக்கிறது.

    கோவில் நடை திறப்பு

    வருகிற 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) விசாக திருவிழா அதிகாலை கோவில் நடை திறப்பு தொ டர்ந்து பல்வேறு வகை யான சிறப்பு பூஜைகள் திருவாசக முற்றோதுதல், மாலை மங்கள இசை, நாதஸ்வரம் இரவு சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை கச்சேரி, சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து மகர மீனுக்கு காட்சி கொடுத்தல், வாண வேடிக்கை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதா கிருஷ்ணன் செய்து வருகிறார். விழாவையொட்டி நாகர்கோவிலில் இருந்து உவரிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    ×