search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூண்டு வைத்து பிடிப்பு"

    சீர்காழி நகராட்சி பகுதியில் சாலைகளில் சுற்றித் திரிந்த தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி உட்பட்ட 24 வார்டுகளிலும் சாலைகளில் அதிக அளவில் நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் இரவு நேரங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்தி வருவதாலும், கடிப்பதாலும் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    சாலையில் சுற்றித்திரியும் நாய்கள் திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்படும் சம்பவங்கள் நடந்து வந்தன. இதனால் சாலைகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடிக்க வேண்டும், நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் நகர்மன்ற கூட்டத்தில் 24 வார்டு உறுப்பினர்களும் வலியுறுத்தினர்.

    இதனை தொடர்ந்து சீர்காழி நகர மன்றத் தலைவர் துர்கா பரமேஸ்வரி அறிவுறுத்தலின்படி இன்று சீர்காழியில் தெரு  நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நாய்கள் பிடிக்கும் பணி தொடங்கியது. சீர்காழி புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், பிடாரி வடக்கு வீதி, தெற்கு வீதி, தென் பாதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரிந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட நாய்கள் வலை வைத்து பிடித்து கூண்டு வாகனத்தில் ஏற்றப்பட்டது.

    பிடிபட்ட நாய்கள் அனைத்தும் மயிலாடுதுறை கொண்டு செல்லப்பட்டு அங்கு கால்நடை மருத்துவர் மூலம் கருத்தடை செய்யப்பட்டு பின்னர் பிடிக்கப்பட்ட பகுதிகளில் விடப்படும் என்ன மிருகவதை தடுப்பு ஆய்வாளர், முரளிதரன் தெரிவித்தார். பொது விலங்குகள் நல அமைப்பை சேர்ந்த அன்பழகன், தூய்மை பணி மேற்பார்வையாளர் அலெக்ஸ். இதனை சீர்காழி மக்கள் வரவேற்றுள்ளனர்.

    ×