என் மலர்
நீங்கள் தேடியது "அண்ணா பல்கலைக்கழகம்"
- குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
- தொப்பி அணிந்து தனது முகத்தை மறைத்துக் கொண்டார்.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் நியமித்த 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அந்த குற்றப்பத்திரிகையில் ஞானசேகரன் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. வேறு யாருக்கும் அதில் தொடர்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தான் இருந்ததற்கான தடயம் மற்றும் ஆதாரத்தை மறைப்பதற்காக அவர் தனது செல்போனை பிளைட் மோடுக்கு மாற்றினார். தொப்பி அணிந்து தனது முகத்தை மறைத்துக் கொண்டார்.
பல்கலைக்கழக படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த மாணவியையும், அவரது நண்பரான மாணவரையும் பார்த்த ஞானசேகரன், மாணவரை தாக்கி கல்லூரி அடையாள அட்டையை பறித்தார். பின்னர் அவர்களை வீடியோ எடுத்திருப்பதாகவும், அதை டீன் மற்றும் ஊழியர்களிடம் காண்பிப்பதாகவும் மிரட்டினார். அவர்கள் கெஞ்சியதால் மாணவரை அங்கிருந்து அனுப்பிவிட்டு மாணவியின் செல்போனை பிளைட் மோடுக்கு மாற்ற சொன்னார். பின்னர் மாணவியை ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். அதை வீடியோவாகவும் பதிவு செய்தார். தான் பல்கலைக்கழக அதிகாரி என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக யாரிடமோ போனில் பேசுவதாக நடித்து, "சார், நான் மாணவியை எச்சரித்து போக விடுகிறேன்" என்று கூறியுள்ளார்.
மாணவி பெற்றோரின் செல்போன் எண்களையும் பெற்றுக்கொண்டு தான் அழைக்கும் போதெல்லாம் வரவேண்டும் என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார். மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை செல்போனில் மறைத்து வைத்திருந்ததாகவும், பின்னர் அதை அழித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளன.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஞானசேகரன் பயன்படுத்திய செல்போனின் அழைப்புகளை சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆய்வு செய்தனர். அவர் மாணவியை மிரட்டுவதற்காக யாருடனோ செல்போனில் பேசுவது போல் நடித்து, அவரை 'சார்' என்று சும்மா அழைத்தார். உண்மையில் சார் என்று யாரும் இல்லை' என்று தெரிவித்துள்ளார்.
- முதல் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 10-ந்தேதி தொடங்கியது.
- 4-வது சுற்று கலந்தாய்வு நிறைவு பெற இருக்கிறது.
சென்னை :
என்ஜினீயரிங் படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த செப்டம்பர் மாதம் 10-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 4 சுற்றுகளாக கலந்தாய்வு நடந்து வரும் நிலையில், 4-வது சுற்று நிறைவு பெற இருக்கிறது. இந்த நிலையில் முதல் கட்ட கலந்தாய்வில் இடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கான என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு வகுப்புகள் எப்போது தொடங்கும்? என்பது குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் பி.இ., பி.டெக். (முழு நேரம்) படிப்புகளில் சேர்ந்த மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு முதல் செமஸ்டருக்கான அறிமுக வகுப்புகள் வருகிற 14-ந்தேதியும், பாடங்களுக்கான வகுப்புகள் வருகிற 28-ந்தேதியும் தொடங்குகிறது. இந்த செமஸ்டருக்கான கடைசி வேலைநாள் அடுத்த ஆண்டு (2023) மார்ச் 23-ந்தேதி ஆகும்.
அதேபோல் பி.ஆர்க். (முழு நேரம்) படிப்பில் சேர்ந்தவர்களுக்கு அறிமுக வகுப்புகள் 14-ந்தேதியும், பாடங்களுக்கான வகுப்புகள் 28-ந்தேதியும் தொடங்கும் என்றும், இவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 15-ந்தேதி கடைசி வேலைநாளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவருக்கும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் செய்முறை தேர்வும், அடுத்த ஆண்டு ஏப்ரல் 5-ந்தேதி முதல் செமஸ்டர் தேர்வும் தொடங்கி நடைபெறும். முதல் செமஸ்டர் முடிந்து, அதற்கு அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் அடுத்த ஆண்டு மே மாதம் 15-ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 15 நாட்கள் நடக்கும் அறிமுக வகுப்புகளில், மாணவர்கள் தேர்ந்தெடுத்த துறை, கல்லூரி குறித்தும், படிப்புக்கு பின்னர் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள், தொழில் முனைவோராவதற்கான வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்படும்.
- மாண்டஸ் புயல் காரணமாக செமஸ்டர் தேர்வுகள் தடைப்பட்டன.
- தொழில்நுட்ப கல்வி இயக்கம் டிப்ளமோ தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது.
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைப்பட்டது. மேலும் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் டிப்ளமோ தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த 9-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 24-ந் தேதி (சனிக்கிழமை)யும், கடந்த 10-ந் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 31-ந் தேதியும் (சனிக்கிழமை) நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
- ஜனவரி 19 மற்றும் 20ந் தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு
- 2வது முறையாக தேர்வு நடைபெறும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைப்பட்டது. மேலும் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் டிப்ளமோ தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து 9ந் தேதி நடைபெற இருந்த தேர்வு, வரும் 24-ந் தேதி (சனிக்கிழமை)யும், கடந்த 10-ந் தேதி நடைபெற இருந்த தேர்வு வரும் 31-ந் தேதியும் (சனிக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மீண்டும் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் தேதியில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. அதன்படி கடந்த 9ந் தேதி நடைபெற இருந்த தேர்வு, ஜனவரி 19ந் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் கடந்த 10-ந் தேதி நடைபெற இருந்த தேர்வு ஜனவரி 20ந் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆகஸ்டு, செப்டம்பர்-2022-க்கான செமஸ்டர் தேர்வு அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது.
- 30-ந்தேதி முதல் தேர்வு தொடங்கி நடக்கவுள்ளது.
சென்னை :
அண்ணா பல்கலைக்கழகம் அதன் கீழ் உள்ள தொலைதூரப் படிப்புகளில் ஆகஸ்டு, செப்டம்பர்-2022-க்கான செமஸ்டர் தேர்வு அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி, எம்.பி.ஏ., எம்.எஸ்சி., எம்.சி.ஏ. ஆகிய படிப்புகளுக்கான அட்டவணையில் ஞாயிற்றுக்கிழமையில் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 30-ந்தேதி முதல் தேர்வு தொடங்கி நடைபெறுவதாக வெளியிடப்பட்டு இருக்கும் அந்த பட்டியலில், அடுத்த மாதம் (பிப்ரவரி) 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சில தேர்வுகள் நடைபெறும் என்று கூறப்பட்டிருக்கிறது.
அந்தவகையில், அறிவுசார் சொத்து உரிமைகள், சில்லரை தளவாடங்கள், மருத்துவ சுற்றுலா, நீடித்த முதலீடுகள் மற்றும் நிதி முடிவுகள், வணிகத்தின் சட்ட அம்சங்கள், கூறுகள் சார்ந்த தொழில்நுட்பம், மின் வணிகம், தரவுத்தள மேலாண்மை அமைப்பு உள்பட சில பாடப்பிரிவுகளுக்கான தேர்வுகள் அடுத்த மாதம் 12-ந்தேதி நடைபெற இருக்கிறது.
வழக்கமாக படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு, பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வு ஆகியவைகள் தான் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும். ஆனால் தற்போது பட்டப்படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வும் ஞாயிற்றுக்கிழமையில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
- ரூ.641 கோடி மதிப்பீட்டில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் மேற்கொள்ள அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.
- இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவு பெற்று நிலம் மீட்டெடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை:
கொடுங்கையூர் குப்பைக்கொட்டும் வளாகத்தில் சுமார் 252 ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக கொட்டப்பட்டு வரும் சுமார் 66.52 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் ஆறு சிப்பங்களாக பிரிக்கப்பட்டு, தூய்மை இந்தியா திட்டநிதி, மாநில அரசுநிதி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி நிதி பங்களிப்பின் மூலம் பயோ-மைனிங் முறையில் செயல்படுத்தப்படுகிறது.
ரூ.641 கோடி மதிப்பீட்டில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் மேற்கொள்ள அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது.
இந்தப் பணிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப வல்லுநர்களை உள்ளடக்கிய திட்ட கண்காணிப்புக் குழுவின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிகள் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவு பெற்று நிலம் மீட்டெடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
- அண்ணா பல்கலைக்கழகம் பெயரில் போலி டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசில் புகாரளிக்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
- ஓய்வு பெற்ற நீதிபதியை ஏமாற்றி, அண்ணா பல்கலைக்கழகத்தையும் ஏமாற்றி உள்ளனர்.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறியிருப்பதாவது:
அண்ணா பல்கலைக்கழகம் பெயரில் இசையமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலு உள்ளிட்டோருக்கு போலி டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசில் புகாரளிக்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
ஓய்வு பெற்ற நீதிபதியை ஏமாற்றி, அண்ணா பல்கலைக்கழகத்தையும் ஏமாற்றி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகம் பெயரில் போலி டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க ஆளுநர் மாளிகையும், அரசும் அறிவுறுத்தி உள்ளன.
இதையடுத்து ஆளுநர் செயலாளர், உயர்கல்வித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அண்ணா பல்கலைக்கழக வளாகம் பழமையும், பெருமையும் புனிதம் வாய்ந்ததாகும்.
- நீதிபதி வள்ளிநாயகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி உள்ளனர்.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் அமைப்பின் சார்பில் பிரபலங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இசை அமைப்பாளர் தேவா, ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், சின்னத்திரை பிரபலமான ஈரோடு மகேஷ், சினிமா டான்ஸ் மாஸ்டர் சாண்டிம் யூடியூப் பிரபலங்களான கோபி, சுதாகர் உள்பட 40 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் கே.கே.நகர் தனசேகரனும் இந்த விருதை பெற்றார். ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளி நாயகம் கவுரவ டாக்டர் பட்டம் மற்றும் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
சினிமா, சமூகப்பணி, அரசியல் பணி ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களை தேர்வு செய்து இந்த விருதுகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ் திரை உலகின் பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேலு சிறந்த பொழுதுபோக்கு பிரிவில் கவுரவ டாக்டர் பட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவர் நிகழ்ச்சிக்கு வராததால் நேரில் சென்று சந்தித்து டாக்டர் பட்டத்தை வழங்கி உள்ளனர்.
இந்த நிலையில் இந்த கவுரவ டாக்டர் பட்டங்கள் அனைத்தும் போலியானவை என்கிற சர்ச்சை எழுந்துள்ளது. இப்படி போலி பட்டம் மற்றும் விருதுகள் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தில் வைத்தே நடைபெற்றிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனை மோசடியான தில்லுமுல்லு செயலாகவே அண்ணா பல்கலைக்கழகம் கருதுகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் இன்று, 'விரிவாக விளக்கம் அளித்தார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
இதுபோன்ற தனியார் அமைப்பினர் ஓட்டல்கள் மற்றும் தனியார் இடங்களில் வைத்தே இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். அண்ணா பல்கலைக்கழத்தில் நடத்துவார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம்.
சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஜனவரி மாதமே வந்து அனுமதி கேட்டுள்ளனர்.
வெளியாட்கள் நடத்தும் நிகழ்ச்சி எந்தமாதிரியான நிகழ்ச்சி என்பதை அலசி ஆராய்ந்த பிறகே அனுமதி வழங்கப்படும். இந்த அனுமதியை 'டீன்' கொடுக்க வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகத்திடம் கடிதம் வாங்கிக்கொண்டு வந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனுமதி கேட்டுள்ளனர்.
இதனால் நிகழ்ச்சியை நடத்துவதற்கு டீன் அனுமதி அளித்துள்ளார். போலியான கவுரவ டாக்டர் பட்டங்களை அண்ணா பல்கலைக்கழகத்தில் வைத்தே நிகழ்ச்சி நடத்தி வழங்கி இருக்கும் சம்பவம் தொடர்பாக கவர்னரின் செயலாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி இதுபோன்ற நிகழ்ச்சிகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இது போன்ற விருதுகலை வாங்கும் பிரபலங்களும் மிகுந்த உஷாராக இருக்க வேண்டும்.
இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அண்ணா பல்கலைக்கழக வளாகம் பழமையும், பெருமையும் புனிதம் வாய்ந்ததாகும். ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளி நாயகம் வழங்கியதாக கூறப்படும் கடிதம் போலியானதாக இருக்கும் என்று கருதுகிறோம். அவர் எழுதி இருக்க முடியாது.
நீதிபதி வள்ளிநாயகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை தினத்தில் யாரும் இல்லாத நேரத்தில் திட்டமிட்டு இந்த நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.
இந்த செயலுக்கு வருந்துகிறோம். கண்டிப்பாக தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கூறும்போது, பட்டமளிப்பு விழாவை நடத்திய தனியார் நிறுவனத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அழைப்பிதழின் பெயரிலேயே விழாவில் பங்கேற்றேன் என்றார்.
- தமிழ் திரை உலகின் பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேலு சிறந்த பொழுதுபோக்கு பிரிவில் கவுரவ டாக்டர் பட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
- போலி டாக்டர் பட்டம் தொடர்பாக விசாரணையில் ஈடுபட்ட அண்ணா பல்கலைக்கழகம், போலீசாரிடம் புகார் அளித்தது.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் அமைப்பின் சார்பில் பிரபலங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இசை அமைப்பாளர் தேவா, ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், சின்னத்திரை பிரபலமான ஈரோடு மகேஷ், சினிமா டான்ஸ் மாஸ்டர் சாண்டி யூடியூப் பிரபலங்களான கோபி, சுதாகர் உள்பட 40 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் கே.கே.நகர் தனசேகரனும் இந்த விருதை பெற்றார். ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளி நாயகம் கவுரவ டாக்டர் பட்டம் மற்றும் விருதுகளை வழங்கி சிறப்பித்தார். சினிமா, சமூகப்பணி, அரசியல் பணி ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களை தேர்வு செய்து இந்த விருதுகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ் திரை உலகின் பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேலு சிறந்த பொழுதுபோக்கு பிரிவில் கவுரவ டாக்டர் பட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவர் நிகழ்ச்சிக்கு வராததால் நேரில் சென்று சந்தித்து டாக்டர் பட்டத்தை வழங்கி உள்ளனர்.
இந்த நிலையில் இந்த கவுரவ டாக்டர் பட்டங்கள் அனைத்தும் போலியானவை என்கிற சர்ச்சை எழுந்துள்ளது. இப்படி போலி பட்டம் மற்றும் விருதுகள் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தில் வைத்தே நடைபெற்றிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
போலி டாக்டர் பட்டம் தொடர்பாக விசாரணையில் ஈடுபட்ட அண்ணா பல்கலைக்கழகம், போலீசாரிடம் புகார் அளித்தது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து இந்த அமைப்பின் இயக்குநர் ஹரிஷ் என்பவர் தலைமறைவாகிவிட்டார். அவரது தொலைபேசி எண்ணும் அணைக்கப்பட்டுள்ளது. அவரை போலீசார் தற்போது தேடி வருகின்றனர்.
- நீதிபதி வள்ளி நாயகத்தின் கடிதத்தை போலியாக தயாரித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பயன்படுத்தி இருப்பதும் அம்பலமானது.
- அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்கிற அமைப்பின் சார்பில் பிரபலங்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழா கடந்த 28-ந்தேதி நடைபெற்றது.
இசை அமைப்பாளர் தேவா, சினிமா டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ், சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளரான ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலங்களான கோபி சுதாகர் உள்ளிட்ட 40 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டமும் விருதும் வழங்கப்பட்டது. நடிகர் வடிவேலுவும் இந்த விருது வழங்கும் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவர் விழாவுக்கு செல்லாத நிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நேரில் சென்று வடிவேலுவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளி நாயகம் பங்கேற்று கவுரவ டாக்டர் பட்டம் மற்றும் விருதுகளை வழங்கினார். இந்த நிலையில்தான் இந்த பட்டங்கள் அனைத்தும் போலியானது என்கிற அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதையடுத்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் அளித்த பேட்டியில் மோசடியான முறையில் விழாவை நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். நீதிபதி வள்ளி நாயகத்தின் கடிதத்தை போலியாக தயாரித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பயன்படுத்தி இருப்பதும் அம்பலமானது.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை கே.கே.நகரை சேர்ந்த ஹரிஸ் என்பவர்தான் போலி கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கிய விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார்.
சர்வதேச ஊழல் தடுப்பு மனித உரிமை ஆணையத்தின் இயக்குனராக உள்ள அவர்தான் வடிவேலுவுக்கு நேரில் சென்று பட்டம் வழங்கி பாராட்டும் தெரிவித்து இருந்தார். இதைதொடர்ந்து ஹரிஸ் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஐ.பி.சி. சட்டப் பிரிவுகள் 406, 420, 426, 468, 469, 471, 488 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போலி கவுரவ டாக்டர் பட்டம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து ஹரிஸ் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. ஹரிசை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதற்கிடையே மாம்பலம் போலீசில் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளி நாயகம் அளித்த புகாரின் பேரிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த புகாரிலும் ஹரிஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ஹரிசை கைது செய்த பின்னர் போலி பட்டமளிப்பு விழா விவகாரத்தில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பதை கண்டுபிடித்து அனைவரையும் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
- அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- ஹரிஷ் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்கிற அமைப்பின் சார்பில் பிரபலங்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழா கடந்த 28-ந்தேதி நடைபெற்றது.
இசை அமைப்பாளர் தேவா, சினிமா டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ், சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளரான ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலங்களான கோபி சுதாகர் உள்ளிட்ட 40 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டமும் விருதும் வழங்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளி நாயகம் பங்கேற்று கவுரவ டாக்டர் பட்டம் மற்றும் விருதுகளை வழங்கினார்.
இந்த நிலையில்தான் இந்த பட்டங்கள் அனைத்தும் போலியானது என்கிற அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை கே.கே.நகரை சேர்ந்த ஹரிஷ் என்பவர்தான் போலி கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கிய விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். சர்வதேச ஊழல் தடுப்பு மனித உரிமை ஆணையத்தின் இயக்குனராக உள்ள அவர்தான் வடிவேலுவுக்கு நேரில் சென்று பட்டம் வழங்கி பாராட்டும் தெரிவித்து இருந்தார்.
இதைதொடர்ந்து ஹரிஷ் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஐ.பி.சி. சட்டப் பிரிவுகள் 406, 420, 426, 468, 469, 471, 488 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் போலி டாக்டர் பட்டம் வழங்கிய அமைப்பின் இயக்குனர் ராஜூ ஹரிஷின் முன்ஜாமின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
- ஹால் டிக்கெட்டுகளை tancet.annauniv.edu/tancet என்கிற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
- டான்செட் தேர்வு மார்ச் 25-ம் தேதி காலை, மதியம் என இரண்டு பிரிவுகளாக நடைபெறும்.
சென்னை:
எம்.பி.ஏ, எம்.சி.ஏ போன்ற படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கு (TANCET), நாளை ஹால்டிக்கெட் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நாளை காலை 11 மணி முதல் ஹால் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.
இதேபோல் எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.ப்ளான் ஆகிய படிப்புகளுக்கான CEETA நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்டுகளையும் நாளை முதல் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டுகளை tancet.annauniv.edu/tancet என்கிற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
டான்செட் தேர்வு மார்ச் 25-ம் தேதி இரண்டு பிரிவுகளாக நடைபெறும். காலையில் 10 மணி முதல் 12 மணி வரையிலும், மதியம் 2:30 மணி முதல் மாலை 4:30 மணி வரையிலும் தேர்வு நடைபெறும்.