என் மலர்
நீங்கள் தேடியது "லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்"
- காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகினார்.
- பேட்டிங் செய்யலாம், பந்து வீசக் கூடாது என அறிவுறுத்தல்.
ஐபிஎல் 2025 சீசன் வருகிற 22-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. 10 அணிகளிலும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அணியில் உள்ள அனைத்து வீரர்களும் ஒருங்கிணைந்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான மிட்செல் மார்ஷ் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.
முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி மற்றும் அதற்கு முன்னதாக நடைபெற்ற இலங்கை தொடரில் இருந்து விலகினார்.
இதனால் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் காயத்தில் இருந்து குணமடைந்து, பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக மருத்துவ அனுமதியை பெற்றுள்ளார்.
ஆனால் பேட்டிங் மட்டும்தான் செய்ய வேண்டும். பந்து வீசக்கூடாது, முதுகுப் பகுதிக்கு அதிக அழுத்தம் கொடுக்கும் வகையில் பீல்டிங் செய்யக் கூடாது என அறிவிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் இம்பேக்ட் பிளேயராக மிட்செல் மார்ஷ் விளையாட முடியும். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், டேவிட் மில்லர், பூரண் ஆகிய நட்சத்திர பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
பந்து வீசவில்லை என்றாலும் லக்னோ அணிக்கு மிடில் ஆர்டர் வரிசையில் மிட்செல் மார்ஷல் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
மிட்செல் மார்ஷ் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சொதப்பியதால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் பிக்பாஷ் லீக்கில் ஒரேயொரு போட்டியில் மட்டும் விளையாடினார். பின்னர் காயத்தின் தன்மை தீவிரமானதால் இலங்கை மற்றும் சாம்பியன்ஸ் டிராபில் இருந்து விலகினார்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் வருகிற 18-ந்தேதி மிட்செல் மார்ஷ் இணைய உள்ளார்.
- ஐ.பி.எல். தொடரில் முதல் முறையாக விளையாட இருக்கிறார்.
- இங்கிலாந்தின் மார்க் வுட்-க்கு மாற்றாக சேர்க்கப்படுகிறார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் 2024 ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது உறுதியாகிவிட்டது. அந்த வகையில், ஷமர் ஜோசப் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாட இருப்பதாக அந்த அணி அறிவித்து இருக்கிறது. இவர் இங்கிலாந்தின் மார்க் வுட்-க்கு மாற்றாக லக்னோ அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஷமர் ஜோசப் தனி ஆளாக நின்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் ஆர்டரை முழுமையாக தகர்த்த ஷமர் ஜோசப் இரண்டாவது இன்னிங்ஸ்-இல் 68 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி கப்பாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி காரணமாக ஷமர் ஜோசப் உலகளவில் பிரபலமான வேகப்பந்து வீச்சாளராக மாறினார். முதல் முறையாக ஐ.பி.எல்.-இல் களமிறங்கும் ஷமர் ஜோசப்-க்கு லக்னோ அணி சார்பில் ரூ. 3 கோடி வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக ஐ.பி.எல். சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "2024 டாடா இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி மார்க் வுட்-க்கு மாற்றாக ஷமர் ஜோசப்-ஐ தேர்வு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இவர் லக்னோ அணியில் ரூ. 3 கோடி விலையில் இணைகிறார்," என குறிப்பிடப்பட்டுள்ளது.
- இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
- காயம் காரணமாக கடைசி நான்கு போட்டிகளில் இருந்து விலகினார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல். ராகுல் ஐபிஎல் கிரிக்கெட்டில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் அந்த அணியின் கேப்டன் ஆவார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. காயம் குறித்து வெளிநாட்டு நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனால் கடைசி நான்கு டெஸ்ட் போட்டிகளில் அவர் பங்கேற்வில்லை.
பெங்களூருவில் உள்ள பிசிசிஐ கிரிக்கெட் அகாடமியில் உடற்திறன் சார்ந்த பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். ஐபிஎல் போட்டி வருகிற 22-ந்தேதி தொடங்கும் நிலையில் நாளை லக்னோ அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 21 அல்லது 22-ந்தேதிதான் அணியுடன் இணைவார் எனத் தெரிகிறது. இன்று பெங்களூருவில் இருந்து அவர் லக்கோ அணியில் இணைவதற்காக புறப்படமாட்டார் எனத் தெரிகிறது.
நாளைமறுதினம் ஐபிஎல் அணி கேப்டன்கள் போட்டோ எடுப்பதற்கான ஒன்று கூடுவார்கள். எனவே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன்பின் லக்னோ அணியுடன் இணைவார் எனத் தெரிகிறது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வருகிற 24-ந்தேதி தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக களம் இறங்குகிறது. இந்த போட்டி ஜெய்ப்பூரில் நடக்கிறது.
20.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட பேட் கம்மின்ஸ் இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டார்க் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் இணைந்துள்ளார்.
- 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 21-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது.
- இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதிய 4 ஆட்டங்களிலுமே குஜராத் அணியே வாகை சூடியுள்ளது.
17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 21-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதிய 4 ஆட்டங்களிலுமே குஜராத் அணியே வாகை சூடியுள்ளது.
- சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 3 ஆட்டத்திலும் சி.எஸ்.கே. வெற்றி பெற்றது.
- லக்னோ அணி 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.
லக்னோ:
17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 22-ந் தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் உள்ளூர், வெளியூர் என தலா 14 ஆட்டங்களில் மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.
நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 3 ஆட்டத்திலும் சி.எஸ்.கே. (பெங்களூரு 6 விக்கெட் , குஜராத் 63 ரன், கொல்கத்தா 7 விக்கெட்) வெற்றி பெற்றது. வெளியூரில் ஆடிய 3 போட்டியில் ஒன்றில் (மும்பை) வென்றது. டெல்லி, ஐதராபாத்திடம் தோற்றது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை நாளை ( 19-ந் தேதி) எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடக்கிறது.
லக்னோவை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. சி.எஸ்.கே. அணி தொடர்ச்சியாக 2 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தது. இதனால் நாளைய போட்டியில் ஹாட்ரிக் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் சம பலத்துடன் திகழ்கிறது.
பேட்டிங்கில், ஷிவம் துபே (242 ரன்) கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (224), டோனி ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளன.
தொடக்க வீரர் ரவீந்திரா, மிச்சேல், ரகானே ஆகியோர் பேட்டிங்கில் முன்னேற்றம் அடைவது அவசியமாகும். புதுமுக வீரர் சமீர் ரிஸ்விக்கு வாய்ப்பு கொடுத்து முன் வரிசையில் ஆட வைக்க வேண்டும்.
பந்து வீச்சில் முஸ்டாபிசுர் ரகுமான் (10 விக்கெட்), பதிரனா (8 விக்கெட்), ஜடேஜா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
லக்னோ அணி 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி பஞ்சாப் (21 ரன்), பெங்களூரு (28 ரன்) குஜராத் (33 ரன்) ஆகிய வற்றை வென்று இருந்தது. ராஜஸ்தான் (20 ரன்), டெல்லி (6 விக்கெட்), கொல்கத்தா (8 விக்கெட்) ஆகியவற்றிடம் தோற்றது.
லக்னோ ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து 4-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது. அந்த அணியில் கேப்டன் லோகேஷ் ராகுல், நிக்கோலஸ் பூரன், ஸ்டோன்ஸ், யாஸ் தாக்கூர், ரவி பிஷ்னோய் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
இரு அணிகளும் இதுவரை 3 முறை மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றன. ஒரு போட்டி முடிவு இல்லை.
- சேப்பாக்கத்தில் நடைபெறும் 4-வது லீக் ஆட்டம் இதுவாகும்.
- டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் நாளை காலை 10.40 மணிக்கு தொடங்கி நடைபெறும் என சிஎஸ்கே கிரிக்கெட் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 23-ந் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 39-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சேப்பாக்கத்தில் நடைபெறும் 4-வது லீக் ஆட்டம் இதுவாகும்.
சென்னை- லக்னோ மோதலுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் நாளை (சனிக்கிழமை) காலை 10.40 மணிக்கு தொடங்கி நடைபெறும் என சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது. PAYTM மற்றும் www.insider.in ஆகிய இணையதளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை பதிவு செய்து பெறலாம் என்றும், ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4 ஆயிரம், ரூ.6 ஆயிரம் ஆகிய விலைகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.
- சென்னை அணியை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஓரளவு வலுவாகவே உள்ளது.
- இரு அணிகளும் சரிசம பலத்துடன் மோதுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.
சென்னை:
17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் 39-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சென்னை அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி (பெங்களூரு, குஜராத், கொல்கத்தா, மும்பைக்கு எதிராக) 3 தோல்வி (டெல்லி, ஐதராபாத், லக்னோவுக்கு எதிராக) என 8 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.
லக்னோ ஸ்டேடியத்தில் நடந்த முந்தைய ஆட்டத்தில் இதே லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை சென்னை அணி எதிர்கொண்டது. அதில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதற்கு சுடச்சுட பதிலடி கொடுக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.
சென்னை அணியை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஓரளவு வலுவாகவே உள்ளது. ஆனால் தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா தொடர்ந்து தடுமாறுவது பின்னடைவாக உள்ளது. அவர் பார்முக்கு திரும்பினால் பேட்டிங் வரிசை பலமடையும். இதே போல் 8-வது வரிசையில் இறங்கும் மூத்த வீரர் டோனி 42 வயதிலும் சர்வசாதாரணமாக சிக்சர்களை விரட்டுகிறார். அவர் முன்வரிசையில் ஆடினால் இன்னும் நன்றாக இருக்கும். பந்து வீச்சில் தீபக் சாஹர், துஷர் தேஷ்பாண்டே, முஸ்தாபிஜூர் ரகுமான் பவர்-பிளேயில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியது அவசியமாகும்.
சென்னை அணி உள்ளூர் மைதானத்தில் இந்த சீசனில் ஆடிய 3 ஆட்டங்களிலும் சிக்கலின்றி வெற்றி பெற்றது. அதே ஆதிக்கத்தை தொடருமா? என்பதை பார்க்கலாம்.
லக்னோ அணியும் 4 வெற்றி, 3 தோல்வி என்று 8 புள்ளிகளுடன் உள்ளது. கடந்த ஆட்டத்தில் சென்னை அணி 177 ரன்னை இலக்காக நிர்ணயித்த போதிலும், கேப்டன் லோகேஷ் ராகுல், குயின்டான் டி காக் அரைசதம் அடித்து லக்னோவை எளிதில் வெற்றி பெற வைத்தனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் கூடுதல் நம்பிக்கையுடன் இறங்குவார்கள். இரு அணிகளும் சரிசம பலத்துடன் மோதுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
சென்னை: ரஹானே, ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, சமீர் ரிஸ்வி, மொயீன் அலி அல்லது டேரில் மிட்செல் அல்லது தீக்ஷனா, டோனி, தீபக் சாஹர், துஷர் தேஷ் பாண்டே, முஸ்தாபிஜூர் ரகுமான், பதிரானா.
லக்னோ: குயின்டான் டி காக், லோகேஷ் ராகுல் (கேப்டன்), நிகோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா அல்லது தேவ்தத் படிக்கல், ஆயுஷ் பதோனி, குருணல் பாண்ட்யா, மேட் ஹென்றி, ரவி பிஷ்னோய், மொசின்கான், யாஷ் தாக்குர்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
- யார்க்கர் வீசாமல் நீண்ட காலம் கிரிக்கெட்டில் நீடிக்க முடியாது.
- இதேபோன்ற திட்டத்தை நாங்கள் கொண்டிருந்தோம்.
சென்னை:
17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 39-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சென்னை அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 4-ல் வெற்றியும் 3-ல் தோல்வியும் சந்தித்து புள்ளிபட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. சென்னை அணி உள்ளூர் மைதானத்தில் இந்த சீசனில் ஆடிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. அதே ஆதிக்கத்தை தொடருமா? என்பதை பார்க்கலாம்.
இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் பவுலர்கள் தடுமாறுவதற்கு காரணம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பிராவோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
டி20 கிரிக்கெட்டில் பவுலர்கள் தடுமாறுவதற்கு காரணம், யாக்கர் பந்துகளை தங்களால் வீச முடியாது என நினைத்து, தங்களை ஏமாற்றிக் கொள்வதால்தான். அதனால்தான் சிஎஸ்கேவில் பயிற்சி எடுக்கும்போது ஒவ்வொரு பவுலர்களையும் 12 - 14 யாக்கர் பந்துகளை வீசச் சொல்லுவேன்.
யார்க்கர் வீசாமல் நீண்ட காலம் கிரிக்கெட்டில் நீடிக்க முடியாது. டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைப் பெற்ற வீரர்களான லசித் மலிங்கா, பும்ரா அல்லது பத்திரனா, நான் விளையாடியபோது நானே, இதேபோன்ற திட்டத்தை நாங்கள் கொண்டிருந்தோம். முடிந்தவரை அதிக யார்க்கர்களை வீச முயற்சி செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இரண்டு போட்டிகளில் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
- 3-வது போட்டியில் ஒரு ஓவர் வீசிய நிலையில் காயம் காரணமாக வெளியேறினார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக மயங்க் அகர்வால் விளையாடி வருகிறார். இவர் இரண்டு போட்டிகளில் களம் இறங்கி அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். 155 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டினார்.
அதிவேகமாக பந்து வீசினாலும், துல்லியமாக பந்து வீசினார். இதனால் எதிரணி பேட்ஸ்மேன்கள் இவரது பந்தில் ரன்கள் குவிக்க திணறினார். இரண்டு போட்டிகளில் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
ஆனால், 3-வது போட்டியில் ஒரு ஓவர் வீசிய நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். இந்த நிலையில் நாளை மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான போட்டியில் விளையாட அனைத்து வகையிலான டெஸ்டிலும் தேர்ச்சி பெற்று விட்டனர் என லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர்கள் மோர்கல் தெரிவித்துள்ளார்.
புள்ளிகள் பட்டியலில் லக்னோ 9 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றி பெற்று 5-வது இடத்தில் உள்ளது.
- லக்னோ அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வியுடன் 12 புள்ளி பெற்றுள்ளது.
- கொல்கத்தா அணி 10 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை நெருங்கி விட்டது.
ஐபிஎல் தொடரின் 54-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்கின்றன. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
லக்னோ அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வியுடன் 12 புள்ளி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 10 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை நெருங்கி விட்டது. அந்த அணி கடந்த 2 ஆட்டங்களில் டெல்லி, மும்பை அணிகளை அடுத்தடுத்து பதம் பார்த்தது.
இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 3-ல் லக்னோவும், ஒன்றில் கொல்கத்தாவும் வென்றுள்ளன.
- கொல்கத்தா அணியில் சுனில் நரேன் 81 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
- லக்னோ தரப்பில் நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐபிஎல் தொடரின் 54-வது லீக் ஆட்டத்தில் லக்னோ - கொல்கத்தா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சால்ட் - சுனில் நரைன் களமிறங்கினர்.
இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தது. அடுத்து வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி நரைனுடன் சேர்ந்து சிறப்பாக ஆடினார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நரைன் அரை சதம் விளாசினார். தொடர்ந்து ஆடிய நரேன் 81 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த ரஸல் 12 ரன்னிலும் அங்கிரிஷ் ரகுவன்ஷி 32 ரன்னிலும் ரிங்கு சிங் 16 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். இறுதியில் ஷ்ரேயாஸ் அய்யர் ரமன் தீப் சிங் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் குவித்தது. லக்னோ தரப்பில் நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- லக்னோ அணி 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் எடுத்தது.
- கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, ரானா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
லக்னோ:
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரைன் - சால்ட் முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்த நிலையில் அதிரடியாக விளையாடிய சால்ட் 32 ரன்களில் (14 பந்துகள்) ஆட்டமிழந்தார். சுனில் நரைன், லக்னோ பந்து வீச்சை வெளுத்து வாங்கிய 39 பந்துகளில் 81 ரன்கள் அடித்த நிலையில் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார்.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா 6 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் அடித்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் - குல்கர்னி களமிறங்கினர். குல்கர்னி 9 ரன்னில் ஆட்டமிழந்தார். மந்தமாக விளையாடிய கேஎல் ராகுல் 25 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ஹூடா 5 ரன்னிலும் அதிரடியாக விளையாடி ஸ்டோய்னிஸ் 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார். இதனால் லக்னோ அணி 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, ரானா 3 விக்கெட்டுகளையும், ரஸல் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.