என் மலர்
நீங்கள் தேடியது "மோகன்லால்"
- மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த 'திரிஷ்யம்' மலையாள படம் நல்ல வரவேற்பை பெற்றது.
- இப்படத்தின் 3-ம் பாகம் விரைவில் உருவாகும் என்பதை இயக்குனர் ஜீத்து ஜோசப் தற்போது உறுதிப்படுத்தி உள்ளார்.
மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த 'திரிஷ்யம்' மலையாள படம் ரூ.5 கோடி செலவில் தயாராகி 2013-ல் திரைக்கு வந்து ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செயப்பட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது. பின்னர் 'திரிஷ்யம்' படத்தின் இரண்டாம் பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் வந்து வரவேற்பை பெற்றது.

திரிஷ்யம்
'திரிஷ்யம்' படத்தின் 3-ம் பாகம் வருமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனியும் "திரிஷ்யம் 3-ம் பாகம் உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில் இயக்குனர் ஜீத்து ஜோசப் திரிஷ்யம் 3-ம் பாகம் உருவாகும் என்பதை தற்போது உறுதிப்படுத்தி உள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், ''திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகத்துக்கான கிளைமாக்ஸ் என்னிடம் உள்ளது. அதை வைத்து மூன்றாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளேன். இந்த படம் விரைவில் தயாராகும்" என்றார். இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
- யானை தந்தம் வழக்கில் நடிகர் மோகன்லால் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
- இந்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளது.
கடந்த 2012-ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனையில் நடிகர் மோகன்லால் வீட்டில் நான்கு ஜோடி யானை தந்தங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மோகன்லால் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை திரும்ப பெறுவதாக பெரும்பாவூர் நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்திருந்தது.

மோகன்லால்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அரசின் மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து பெரும்பாவூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகர் மோகன்லால் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், யானை தந்தம் வழக்கில் மோகன்லால் சட்டத்தை மீறவில்லை என்றும் அது இறந்த வளர்ப்பு யானையின் தந்தங்கள் என்றும் கேரள அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோகன்லால்
இதனை கேட்ட கேரள உயர்நீதிமன்றம் ஒரு சாமானியனுக்கு அரசு இப்படி தளர்வு அளிக்குமா? என கேள்வி எழுப்பியதுடன் சட்டம் அனைவருக்கும் சமமாக பொருந்தும் என்றும் மோகன்லால் சாதாரண மனிதராக இருந்திருந்தால் இந்நேரம் சிறையில் இருந்திருப்பார் என்றும் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளது.
- அர்ஜென்டினா-பிரான்சு அணிகள் மோதிய இந்த ஆட்டத்தை ஏராளமானோர் நேரிலும் தொலைக்காட்சி மூலமும் பார்த்து ரசித்தனர்.
- மம்முட்டி, மோகன்லால் புகைப்படம் சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கத்தார் நாட்டில் நேற்று இரவு நடந்தது. அர்ஜென்டினா-பிரான்சு அணிகள் மோதிய இந்த ஆட்டத்தை ஏராளமானோர் நேரிலும் தொலைக்காட்சி மூலமும் பார்த்து ரசித்தனர்.
அர்ஜென்டினா அணி வெற்றி பெற்ற இந்த ஆட்டத்தை நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் நேற்று நேரடியாக பார்த்துள்ளனர். இது சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
- உலக கோப்பை கால்பந்தின் இறுதி போட்டியில் நேற்று அர்ஜென்டினா-பிரான்சு அணிகள் மோதின.
- இந்த ஆட்டத்தை ஏராளமானோர் நேரிலும் தொலைக்காட்சி மூலமும் பார்த்து ரசித்தனர்.
உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கத்தார் நாட்டில் நேற்று இரவு நடந்தது. அர்ஜென்டினா-பிரான்சு அணிகள் மோதிய இந்த ஆட்டத்தை ஏராளமானோர் நேரிலும் தொலைக்காட்சி மூலமும் பார்த்து ரசித்தனர்.

மம்முட்டி - மோகன்லால்
அர்ஜென்டினா அணி வெற்றி பெற்ற இந்த ஆட்டத்தை நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் நேற்று நேரடியாக பார்த்துள்ளனர். இது தொடர்பன புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
- நடிகர் ரஜினி தற்போது நடித்து வரும் திரைப்படம் 'ஜெயிலர்'.
- இப்படத்தில் ரஜினி முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜெயிலர்
ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு பரிசளிக்கும் விதமாக இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளதாகத் தெரிவித்து படக்குழு வீடியோவை வெளியிட்டிருந்தது.

மோகன்லால்
இந்நிலையில் ஜெயிலர் படத்தில் நடிகர் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருவதாக இணையத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதில் மோகன்லால் இணைந்தால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர். இருந்தும் இந்த தகவல் குறித்து படக்குழு தரப்பிலிருந்து இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
- ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் மோகன்லால் இணைந்துள்ளார்.
நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரஜினி - மோகன்லால்
சில தினங்களுக்கு முன்பு ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக இணையதளங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் மோகன்லால் இணைந்துள்ளார் என்ற அதிகாரப்பூர்வமான தகவலை படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஜெயிலர் திரைப்படத்தில் மோகன்லால் இணைந்தது உறுதியானது.

மோகன்லால்
மோகன்லால் ஏற்கனவே கமல்ஹாசனுடன் 'உன்னைப்போல் ஒருவன்', விஜய்யுடன் ஜில்லா, சூர்யாவுடன் காப்பான் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மலையாள நடிகர் மோகன்லால் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது யானை தந்தம் கண்டுபிடிக்கப்பட்டது.
- இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன்லால். இவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது யானை தந்தம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

மோகன்லால்
இது தொடர்பான வழக்கு கேரள மாநிலம் பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின் போது யானை தந்தம் வைத்திருக்க தன்னிடம் முறையான சான்றிதழ் இருப்பதாகவும், தந்தத்திற்காக எந்த யானையையும் கொல்லவில்லை எனவும் நடிகர் மோகன்லால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நடிகர் மோகன்லால் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

மோகன்லால்
பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் மோகன்லால் தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டு, நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், இந்த வழக்கின் இறுதி அறிக்கையை பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
- நடிகர் மோகன்லாலிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
- விசாரணை விபரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.
கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாள சினிமா தயாரிப்பாளர்கள், நடிகர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான பிரித்வி ராஜ், தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்றது. இதில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதா? என்ற தகவலை வருமான வரித்துறை அதிகாரிகள் அப்போது வெளியிட வில்லை.
இந்த நிலையில் நேற்று மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சென்றனர். கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற அதிகாரிகள், மோகன்லாலிடம் விசாரணை மேற்கொண்டனர். சுமார் 5 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது. விசாரணை விபரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.
வருமான வரித்துறை அதிகாரிகள் கேரளாவில் ஏற்கனவே சோதனை நடத்திய மலையாள திரைப்பட தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர், நடிகர் மோகன்லாலின் நெருங்கிய நண்பர் ஆவார். மோகன்லால் நடித்த லூசிபர், திரிஷ்யம், புலி முருகன் போன்ற படங்களை இவர் தான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் மோகன்லாலிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி இருப்பது கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மலையாள நடிகர் மோகன்லால் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது யானை தந்தம் கண்டுபிடிக்கப்பட்டது.
- நடிகர் மோகன்லால் தாக்கல் செய்த மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன்லால். இவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது யானை தந்தம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

மோகன்லால்
இது தொடர்பான வழக்கு கேரள மாநிலம் பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின் போது யானை தந்தம் வைத்திருக்க தன்னிடம் முறையான சான்றிதழ் இருப்பதாகவும், தந்தத்திற்காக எந்த யானையையும் கொல்லவில்லை எனவும் நடிகர் மோகன்லால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நடிகர் மோகன்லால் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

மோகன்லால்
பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் மோகன்லால் தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டு, இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், இந்த வழக்கின் இறுதி அறிக்கையை பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.

மோகன்லால்
இந்நிலையில் நடிகர் மோகன்லால் தாக்கல் செய்த மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் யானை தந்தம் வைத்திருந்தது தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
- மோகன்லால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
- தனது பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால், தமிழில் கோபுர வாசலிலே, இருவர், பாப் கான், உன்னைப்போல் ஒருவன், ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய மோகன்லால்
மோகன்லால் பிறந்தநாளான இன்று அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், அவர் தனது பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டு நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
A humble birthday celebration with the blessings of the little angels of Angelz Hut, a shelter home of the HUM Foundation! The project nurtures girls from underprivileged communities, empowering them for a great future.
— Mohanlal (@Mohanlal) May 21, 2023
Thank you for this day, @zonedamuttath
?@ Niranta Airport… pic.twitter.com/IDE7jgISUz
- மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘லூசிபர்’.
- இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘எம்புரான்’ என்ற பெயரில் உருவாகவுள்ளது.
நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் 'லூசிபர்'. இப்படத்தின் மூலம் பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமாகியிருந்தார். இதில் நடிகர் மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.

லூசிபர்
இப்படத்தின் இரண்டாம் பாகம் 'எம்புரான்' என்ற பெயரில் உருவாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாகவும், லடாக், நொய்டா, துருக்கி, ஈராக், ஆஃப்கானிஸ்தான், துபாய் மற்றும் ரஸ்யாவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- இயக்குனர் லிஜோ ஜோஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மலைக்கோட்டை வாலிபன்'.
- இப்படத்தின் டைட்டில் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
மலையாளத்தில் முன்னணி இயக்குனராக இருக்கும் லிஜோ ஜோஸ் 'ஜல்லிக்கட்டு', 'அங்கமாலி டைரிஸ்', 'சுருளி','நண்பகல் நேரத்து மயக்கம்' போன்ற பல படங்களை இயக்கி கவனம் பெற்றார். இவர் தற்போது 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் மோகன் லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், மணிகண்டன் ஆர். ஆச்சாரி, சோனாலி குல்கர்னி மற்றும் ஹரீஷ் பேரடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டைட்டில் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

மலைக்கோட்டை வாலிபன் போஸ்டர்
இந்நிலையில், 'மலைக்கோட்டை வாலிபன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 2024-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. வித்தியாசமான லுக்கில் மோகன்லால் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
The countdown has begun!
— Mohanlal (@Mohanlal) September 18, 2023
Vaaliban is arriving in theatres worldwide on 25th January 2024!#VaalibanOnJan25#MalaikottaiVaaliban@mrinvicible @shibu_babyjohn @achubabyjohn @mesonalee @danishsait #johnandmarycreative #maxlab @VIKME @sidakumar @YoodleeFilms @saregamasouth… pic.twitter.com/8UXJciVVma