search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Take responsibility"

    • திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரியாக இருந்த ஆனந்தன் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    • மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரியாக இருந்த ஆனந்தன் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரியாக அரவிந்த்குமார் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அலுவலக அறையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

    இவர் இதற்கு முன் மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தை உள்ளடக்கிய பூம்புகார் சுற்றுலா அதிகாரியாக இருந்தார். கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட சுற்றுலா அதிகாரியாக ஏற்கனவே பணியாற்றியுள்ளார். திருப்பூர் மாவட்ட சுற்றுலா அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வகித்தபோது, மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டார்.

    திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி அரவிந்த்குமார் கூறும்போது, 'ஆண்டிப்பாளையத்தில் சுற்றுலா வளர்ச்சி பணிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் முதன்மை சுற்றுலா தலங்களாக உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி அணை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும் சுற்றுலா தொழில் ஆபரேட்டர்கள், சுற்றுலா வழிகாட்டிகளுக்கு சுற்றுலா தொழில் மூலம் வாழ்வாதாரம் பெருக்குவதற்கு உரிய அறிவுரைகள் வழங்க கூட்டம் நடத்தப்படும்' என்றார்.

    • பல்லடம் டி.எஸ்.பி., சவுமியா, கடலூருக்கு மாற்றப்பட்டார்.
    • பல்லடம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

    பல்லடம்:

    பல்லடம் டி.எஸ்.பி., சவுமியா, கடலூருக்கு மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக கடலூர் மதுவிலக்கு டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த விஜிகுமார் பல்லடம் டி.எஸ்.பி.,யாக மாற்றப்பட்டு பொறுப்பேற்றார்.

    பல்லடம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக புதிய இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படாததால் பல்லடம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரஸ்வதி கூடுதல் பொறுப்புடன் கவனித்து வருகிறார். 

    • திருப்பூர் மாவட்ட மருத்துவ பணிகள் துறை இணை இயக்குனரான கனகராணி பொறுப்பேற்றுக்கொண்டார்.
    • திருப்பூர் மாவட்ட மருத்துவ பணிகள் துறை இணை இயக்குனராக இருந்த பிரேமலதா தென்காசிக்கு மாற்றப்பட்டார்.

     திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட மருத்துவ பணிகள் துறை இணை இயக்குனராக இருந்த பிரேமலதா தென்காசிக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக கோவை மாவட்டம் பூலுவப்பட்டி மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் முதன்மை மருத்துவ அதிகாரியாக இருந்த கனகராணி, திருப்பூர் மாவட்ட இணை இயக்குனராக பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டார்.திருப்பூர் மாவட்ட மருத்துவ பணிகள் துறை இணை இயக்குனரான கனகராணி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அரசு மருத்துவ அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    ×