என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tamil dream program"
- திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடந்தது.
- சிறப்பு அழைப்பாளர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கோ.பாலசந்திரன் ‘பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
திருச்செந்தூர்:
தமிழ் கனவு தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமை யையும், சமூக சமத்துவத் தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்பு களையும் இளம் தலை முறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையில் மா பெரும் தமிழ் கனவு என்னும் பண்பாட்டு பரப் புரை நிகழ்ச்சி மாவட்டம் தோறும் நடத்து வதற்கு தமிழக முதல்-அமைச்சர் உத்தர விட்டுள்ளார்.
அதன்படி திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடந்தது. திருச்செந்தூர் உதவி கலெ க்டர் புகாரி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கோ.பாலசந்திரன் 'பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்' என்ற தலைப்பிலும், இணைய தலைமுறையும் இட ஒதுக்கீடும் என்ற தலைப்பில் கார்த்திகை செல்வனும் சிறப்புரையாற்றினர்.
இதில், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி, கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி, நாசரேத் மா்கா சியஸ் கல்லூரி, சாயர்புரம் போப் கல்லூரி, தூத்துக்குடி ஜி.யு. போப் கல்வியியல் கல்லூரி, ஸ்ரீவைகுண்டம் குமரகுரு சுவாமிகள் கலை கல்லூரி ஆகிய கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில், பெருமித செல்வன் பெருமித செல்வி விருதுகளும், கேள்வியின் நாயகன், நாயகி விருதுகளும் வழங்கப்பட்டன. கல்லூரி வளாகத்தில் கண்காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. இதில், திருச்செந்தூர் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் சிறுதானியங்கள் மூலம் பாரம்பரிய உணவு, மகளிர் திட்ட மூலம் பனை சார்ந்த பொருட்களும், தூத்துக்குடி தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அகழாய்வு குறித்து புகைப் படங்கள் வைக்கப் பட்டிருந்தன. நிகழ்ச்சிகளை ஆதித்தனார் கல்லூரி தமிழ் துறை தலைவர் கதிரேசன் ஒருங்கிணைத்து வழங் கினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி கலெக்டர் (பயிற்சி) பிரபு, திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், வட்ட வழங்கல் அலுவலர் பாலசுந்தரம், வருவாய் ஆய்வாளர் அமிர்த கண்ணன், கல்லூரி கண்கா ணிப்பாளர் தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி நன்றி கூறினார்.
- தமிழ் இணைய கல்விக்கழகம் சார்பில் சிவகங்கை அரசு கல்லூரியில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடந்தது.
- இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பங்கேற்று பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி அரங்கில் தமிழ் இணைய கல்விக்கழகம் சார்பில் தமிழ்க்கனவு நிகழ்ச்சி கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் பேசியதாவது:-
தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் பெருமையையும் எதிர்கால சந்ததியி னர்களாகிய நீங்கள் அறிந்து கொள்ளும் வகையில் சமூக விழிப்புணர்வையும் பொருளாதார முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழ் மரபும் அதன் நாகரீகம் குறித்தும், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூக பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, பண்டைய கால தமிழர்கள் நாகரீகத்துடன் வாழ்ந்ததற்கான அடையாளங்களை வெளிக்கொணர்கின்ற வகையில் தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்கள் ஆகியவற்றை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கு பெற்றுள்ள மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி புத்தகமும், தமிழ் பெருமிதம் குறித்த குறிப்பேடும் இங்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு, பண்பாட்டிற்கும், எதிர்காலத்திற்கும் வழிகாட்டிடும் வகையில், அடிப்படையாகத் திகழும் இந்நிகழ்ச்சியின் மூலம் சிறந்த சொற்பொழி வாளர்கள் வாயிலாக எடுத்துரைக்கப்படும் கருத்துக்களை உள்வாங்கி, மாபெரும் தமிழ் கனவினை நனவாக்குகின்ற வகையில் மாணவர்கள் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தங்களை சார்ந்தவர்களும் எடுத்துரைத்து, பயன்பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் நாகராஜன், சொற்பொழிவாளர்கள் ராஜா, யாழினி (மருத்துவர்), சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் துரையரசன் மற்றும் ஆசிரியர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- தமிழ் கனவு என்றபெயரிலான பண்பாட்டு பரப்புரை நிகழ்வுகள் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
- 13-ந் தேதி அன்று திருப்பூர் புனித வளனார் மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
திருப்பூர் :
தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் மாபெரும் தமிழ் கனவு என்றபெயரிலான பண்பாட்டு பரப்புரை நிக ழ்வுகள் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. நமது தமிழ் மரபின் வளமையையும், பண்பா ட்டின் செழுமையையும், சமூகசமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டு க்கான வாய்ப்புகளையும் இளம்தலைமுறையினருக்கு கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கல்வி கழகத்தின் சார்பில் இந்த பரப்புரை திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் தமிழ் மரபும் - நாகரிகமும், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப்பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல்ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தொழில்மு னைவுக்கான வாய்ப்புகள் மற்றும் தமிழ்நாட்டின் கல்விப் புரட்சி ஆகிய தலைப்புகளின் கீழ்சொற்பொழிவுகள் நடத்த திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் பண்பாட்டு பரப்புரை நிகழ்வு 13-ந்தேதி அன்று திருப்பூர் புனித வளனார் மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் படிப்போம் நிறைய ! என்ற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா , கற்சிலையும் கட்டடக் கலையும் என்ற தலைப்பில் மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஈரோடு த.ஸ்டாலின் குணசேகரன் ஆகியோர் சிறப்புவி ருந்தினர்களாக கலந்து கொண்டு கருத்துரை ஆற்ற உள்ளனர். எனவே திருப்பூர் மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக நடைபெறவுள்ள மாபெரும் தமிழ்கனவு என்ற பெயரிலான பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தஅனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமாறு கேட்டு க்கொள்ளப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்