search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tanda sword"

    • பாலக்காடு கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி மற்றும் ெரயில்வே கேட் மாற்றி அமைத்தல், உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் போன்றவை நடக்கிறது.
    • நேரத்துக்கு செல்லாமல் கால தாமதமாகவே ெரயில் சென்று சேரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    சென்னை - மங்களூரு வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ெரயில், இருமார்க்கத்திலும் வருகிற 8-ந்தேதி வரை தாமதமாக பயணத்தை துவங்கும் என, சேலம் ெரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பாலக்காடு கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி மற்றும் ெரயில்வே கேட் மாற்றி அமைத்தல், உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் போன்றவை நடக்கிறது. இதனால், மங்களூருவில் இருந்து சென்னை செல்லும் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் (எண்:22638) இரவு 11.45 மணிக்கு பதிலாக 2 மணி நேரம், 50 நிமிடம் தாமதமாக அதிகாலை 2.35 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்படும். இதேபோல், மறுமார்க்கமாக, சென்னையில் இருந்து மங்களூருக்கு புறப்படும் ெரயில் (எண்: 22637) மதியம், 1.25 மணிக்கு பதில், 3 மணி நேரம் தாமதமாக மாலை 4.25 மணிக்கு புறப்படும். வருகிற 5, 6, 8-ந்தேதிகளில் ெரயில் இயக்கம் தாமதமாகும். அடுத்தடுத்த நிலையங்களுக்கு அட்டவணையில் உள்ள நேரத்துக்கு செல்லாமல் கால தாமதமாகவே ெரயில் சென்று சேரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    ×