என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tanjore Big Temple"
- மாமன்னன் ராஜராஜசோழன் 1,038-வது சதயவிழா தஞ்சை பெரியகோவிலில் நடைபெற்றது.
- சதயவிழாக் குழு சார்பில் மாமன்னன் ராஜராஜன் விருது வழங்கும் விழா நடந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜசோழன் 1,038-வது சதயவிழா தஞ்சை பெரியகோவிலில் 2 நாட்கள் அரசு விழாவாக நடைபெற்றது.
நேற்று மாலை நடன நிகழ்ச்சி, தேவார இன்னிசை, நாட்டியாஞ்சலி, நாத சங்கம், மற்றும் சதயவிழாக் குழு சார்பில் மாமன்னன் ராஜராஜன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார்.
சதய விழாக்குழு தலைவர் செல்வம் வரவேற்றார்.
விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு பேசினார்.
விழாவில் மாமன்னன் ராஜராஜன் விருதினை மதுரை செந்தமிழ் கல்லூரி முன்னாள் முதல்வர் தட்சிணாமூர்த்தி, தஞ்சை டாக்டர் செல்வராஜ், முன்னாள் வேளாண்மை இணை இயக்குனர் பழனியப்பன், புலவர் கோபாலகிருஷ்ணன் ஆகிய 4 பேருக்கு விருதுகள் வழங்கபட்டன.
இதில் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, சதய விழாக்குழு துணைத்தலைவர் மேத்தா, வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரன், சுற்றுலா அலுவலர் நெல்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் உதவி ஆணையர் கவிதா நன்றி கூறினார்.
- தஞ்சை பெரிய கோவில் நந்தி சிலையில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது.
- அதனை சரிெசய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர்,
தஞ்சாவூர் பெரிய கோவில் உலக அளவில் பேசப்படும் ஒரு அற்புதமான பொக்கிஷமாக விளங்குகிறது.
கோவிலின் சிறப்பை கண்டு வியந்து போன யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.
இந்திய தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட பகுதியாக பெரிய கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை அறிவித்து கண்காணித்து வருகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் மிகப்பெரிய நந்தியெம்பெருமான் சிலை அமைந்துள்ளது.
இந்த நந்தி சிலையில் நேற்று திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் இதனை கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர். மாதம் இரு முறை பிரதோஷ வழிபாடு நடக்கும் நந்தி சிலையில் ஏற்பட்ட விரிசல்களை மத்திய தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும்.
மிகவும் பிரசித்தி பெற்ற நந்தி மண்டபத்தின் மேற்புற சுவரில் வரையப்பட்ட ஓவியங்கள் பழமை அடைந்துள்ளதால் அதனையும் சரிசெய்ய வேண்டும் என் பக்தர்கள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்