என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tea master drowned in"
- தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரிய வந்தது.
- பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பவானி:
சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, குட்டப்பாடி பகுதியை சேர்ந்தவர் விஜய் காளிதாஸ் (33). டீ மாஸ்டர்.
இவர் பவானி வர்ணபுரம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் மனைவி சில்பா மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார். பவானி வரதநல்லூர் பிரிவில் தனது அக்கா நடத்தி வரும் ஆவின் பாலகத்தில் டீ மாஸ்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் மனைவி சில்பா தனது தாய் வீட்டிற்கு கோவை சென்றார். 3 நாட்களும் விஜய் காளிதாஸ் குடித்துவிட்டு கடைக்கு வேலைக்கு செல்லாமல் மோட்டார் சைக்கிளில் செல்லும் பொழுது கீழே விழுந்து உடம்பில் காயம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று தனது அக்கா கணவரிடம் காவிரி ஆற்றிற்கு சென்று குளித்துவிட்டு வருவதாக கூறிச்சென்ற விஜய் காளிதாஸ் வெகு நேரம் ஆகியும் வராத நிலையில் அவர் குளிக்க சென்ற வரதநல்லூர் மயான அருகிலுள்ள காவிரி ஆற்றிக்கு சென்று பார்க்கும் பொழுது அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரிய வந்தது.
இச்சம்பவம் தொடர்பாக பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.