என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "thadagam area"
- ரங்கநாதன் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை தடாகத்தை அடுத்த பன்னிமடை தர்மராஜா கோவில் வீதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 52). இவர் கணுவாய் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று ரங்கநாதன் வழக்கம்போல வேலைக்கு சென்றார். அங்கு அவர் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கிருந்த ஏணி ஒன்றை எடுத்து மாற்றி வைத்தார். அதில் அந்த ஏணி அங்கிருந்த மின் வயர் மீது பட்டது.இதில் மின்சாரம் தாக்கி ரங்கநாதன் தூக்கி வீசப்பட்டார்.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் பலத்த காயம் அடைந்த ரங்கநாதனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
பின்னர் இதுகுறித்து தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அண்ணனுடன் மோட்டார்சைக்கிளில் சென்றபோது பரிதாபம்
- அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தனர்
கோவை :
கோவை ஆனைகட்டி பனப்பள்ளியை சேர்ந்தவர் முருகன் (வயது 44). விவசாயி. இவரது மகன்கள் பாலகிருஷ்ணன் (23), கதிர்வேல் (16).
கதிர்வேல் அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று பாலகிருஷ்ணன் தனது தம்பியை அைழத்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் கோவை ஆலமரமேட்டில் இருந்து ஆனைகட்டி ரோட்டில் சென்றார்.அப்போது தடாகம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. நிலைதடுமாறி அண்ணன்-தம்பி இருவரும் சாலையில் விழுந்தனர். இதில் கதிர்வேலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டாது.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர். அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு கதிர்வேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பி விபத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இதேபோன்று வடக்கிபா ளையம் பகுதியில் நடந்து சென்ற பொள்ளாச்சியை சேர்ந்த நஞ்சன் (80) என்பவரும், வட வள்ளியில் நடந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த ராமசாமி (70) என்பவரும் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தனர்.
கோவை தடாகம் பகுதியில் சுற்றித்திரிந்த சின்னதம்பி காட்டுயானையை வனத்துறையினர் கடந்த 25-ந்தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிபட்ட யானையின் கழுத்தில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தி பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் உள்ள வரகளியாறு அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.
அங்கு சில நாட்கள் சுற்றிய காட்டுயானை கடந்த 31-ந்தேதி நள்ளிரவு ஆழியாறு அருகே உள்ள கோட்டூர் மலையாண்டிப்பட்டினம் என்ற ஊருக்குள் நுழைந்தது. பொள்ளாச்சி வனத்துறையினர் யானையை கோபால்சாமி மலையில் விரட்டி விட்டனர்.
மறுநாள் 1-ந்தேதி மலை மற்றும் காடு, தோட்டங்களை கடந்து உடுமலை மைவாடி ரெயில் நிலையம் அருகே உள்ள புதருக்குள் யானை நின்றது. 80 கி.மீட்டர் தூரத்துக்கும் மேல் நடந்து வந்த யானை பசி மற்றும் தூக்கத்தால் மயங்கியது. வனத்துறையினர் தண்ணீர் மற்றும் உணவு கொடுத்தனர். அதன்பின்னர் யானைக்கு மயக்கம் தெளிந்தது.
யானை ஊருக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர். சின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனை எதிர்த்து விலங்குகள் நல ஆர்வலர் அருண் பிரசன்னா வழக்கு தொடர்ந்தார். சின்னதம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை என்று தமிழக அரசு கோர்ட்டில் கூறியது.
இந்நிலையில் யானையை விரட்ட வந்த கும்கி கலீமும், சின்னதம்பியும் நண்பர்களாகி விட்டன. கரும்பு உள்ளிட்ட உணவு பொருட்களை மாறி மாறி ஊட்டி மகிழ்ந்தன.
யானையின் இந்த திடீர் மாற்றம் குறித்து அறிந்த கால்நடை டாக்டர் மனோகரன் சம்பவ இடத்துக்கு சென்று யானையின் நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். காட்டுயானையை வேறு இடத்துக்கு மாற்றினால் ஆவேசமாக இருக்கும். சின்னதம்பி குழந்தைபோல் மாறியது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது என்றார்.
மாவட்ட வன அலுவலர் தீலிப், உடுமலை ரேஞ்சர் தனபால், அமராவதி ரேஞ்சர் முருகேசன், தலைமை வன அதிகாரி கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். மீண்டும் சின்னதம்பிக்கு பிடித்த இடமான தடாகம் பகுதியிலேயே விட ஆலோசனை நடத்தினர்.
கும்கிகள் கரும்புடன் நடந்தால் அதனை பின் தொடர்ந்து சின்னதம்பியும் செல்லும் என்று யானை நிபுணர்கள் கூறுகிறார்கள். இன்று 5-வது நாளாக கிருஷ்ணாபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும் மைவாடி ரெயில் நிலையத்துக்கும் இடையே சின்னதம்பி நிற்கிறது. அதன் போக்கிலேயே விட்டுபிடிக்க வனத்துறையினர் காத்திருக்கிறார்கள்.
பொதுமக்கள் வாழைப்பழம், மக்காச்சோள கதிர்களை கொண்டு வந்து பார்த்து வருகிறார்கள். கொண்டு வந்த தின்பண்டங்களை வன ஊழியர்களிடம் கொடுக்கிறார்கள். அவர்கள் சின்னதம்பிக்கு கொடுக்கிறார்கள். சின்னதம்பி ஆசை ஆசையாக வாங்கி உண்கிறது.
சின்னதம்பியை இன்னும் ஒருவாரம் இதே பகுதியில் வைத்து அதன் உடல் நலம் மற்றும் மன நிலை நல்ல நிலைக்கு திரும்பிய பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவோம் என்று வனத்துறை அதிகாரி கூறினர்.
சர்க்கரை ஆலையின் பின்புறம் சின்னதம்பி முகாமிட்டுள்ளதால் அதன் பாதுகாப்பு கருதி அது நடமாடும் பகுதியில் தேங்கிய கழிவு நீரை நிர்வாகம் மோட்டார் மூலம் வெளியேற்றியது. #ChinnaThambiElephant
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்