search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The lorry collided with the omni bus"

    • கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து 25 பேர் ஆம்னி பஸ்சில் சுற்றுலா சென்று விட்டு நள்ளிரவில் ஊருக்கு திரும்பினர். இந்த ஆம்னி பஸ்சை சூளகிரிைய சேர்ந்த டிரைவர் மோகன் என்பவர் ஓட்டி வந்தார்.
    • சுற்றுலாவுக்கு சென்று விட்டு திரும்பிய ஆம்னி பஸ் அதிகாலை 4 மணி அளவில் லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இதனால் ஆம்னி பஸ் முன்பகுதி அப்பளம் போல் நொருங்கியது.

    சேலம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து 25 பேர் ஆம்னி பஸ்சில் சுற்றுலா சென்று விட்டு நள்ளிரவில் ஊருக்கு திரும்பினர். இந்த ஆம்னி பஸ்சை சூளகிரிைய சேர்ந்த டிரைவர் மோகன் என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த நிலையில், கோவையில் இருந்து இரும்பு கம்பி லோடு ஏற்றிக்கொண்டு சேலம் மாவட்டம் வழியாக வந்து கொண்டிருந்த லாரி திடீெரன பழுதானது. இதனால் லாரியை ஓடி வந்த தூத்துக்குடியை சேர்ந்த டிரைவர் ரமேஷ்குமார் என்பவர் லாரியை உத்தம சோழபுரம் கரபுரநாதர் கோவில் அருகே சாலையோரம் நிறுத்திவிட்டு பழுதை சரி செய்து கொண்டிருந்தார்.

    ஆம்னி பஸ் மோதியது

    அப்போது சுற்றுலாவுக்கு சென்று விட்டு திரும்பிய ஆம்னி பஸ் அதிகாலை 4 மணி அளவில் லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இதனால் ஆம்னி பஸ் முன்பகுதி அப்பளம் போல் நொருங்கியது. அப்போது அதிகாலை என்பதால் பஸ்சில் இருந்த சுற்றுலா பயணிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். விபத்து நிகழ்ந்ததும், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதில் டிரைவர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு கை, கால், முகம் உள்ளிட்ட இடங்களில் அடிபட்டு இருந்தது. வலி தாங்க முடியாமல் அவர்கள் அலறி துடித்தனர்.

    ஆஸ்பத்திரியில் அனுமதி

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். மேலும் கொண்ட லாம்பட்டி போலீசாருக்கு இது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து, காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தினால் பயணிகள் பதட்டத்துடன் காணப்பட்டனர். காயம் அடைந்த பயணிகளை தவிர மற்றவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×