என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theni News: cctv camera causes continuous theft"

    போடியில் செயல்படாத சி.சி.டி.வி காமிராக்கள், சிக்கனல்களால் தொடர் திருட்டால் பொதமக்கள் பீதி
    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் குற்ற சம்பவங்கள் மற்றும் சட்ட விரோத செயல்களை தடுக்கும் பொருட்டு நகரின் முக்கிய பகுதியான கட்டபொம்மன் சிலை, வள்ளுவர் சிலை, வ.உ.சி சிலை,  தேவர் சிலை, புதூர் மற்றும் போடி நகரின் முக்கிய பகுதிகளில் காவல் துறை மூலம் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சிறப்பு கண்காணிப்பு காமிராக்கள் மற்றும் சிக்னல்கள்  பொருத்தப்பட்டுள்ளன.

    ஆனாலும் கடந்த 6 மாதத்திற்கு மேலாக பொது இடங்களில் நிறுவப்பட்ட  கண்காணிப்பு கேமராக்கள் மற்றும்  சிக்னல்கள்  செயல்படவில்லை. இதனால் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களிலும் மற்றும் பல்வேறு இடங்களிலும் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் திருடப்பட்டு வருகின்றன.

    திருடப்பட்ட இருசக்கர வாகனங்களை கண்காணித்து திருடர்களை பிடிப்பதற்கு பொது இடங்களில் உள்ள கண்காணிப்பு காமிராக்கள் செயல்படாத காரணத்தினால் அருகில் உள்ள தனியார் கண்காணிப்பு கேமராக்களை நாட வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    மேலும் இங்கு அமைந்துள்ள சிக்னலும் சரிவர செயல்படாததால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கேரளாவிற்கு இப்பகுதியில் அதிக கனரக வாகனங்கள் லோடு ஏற்றி செல்கிறது. மேலும் பள்ளி வாகனங்கள் அதிகளவில் வந்து செல்கிறது.

    தேவர் சிலை அருகில் உள்ள சிக்னல்கள், கேமராக்கள் மற்றும் காவலர் கண்காணிப்பு கூண்டு ஆகியவை தற்போது செயல்பாட்டில் இல்லாததால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது.

    இப்பகுதியை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் உயர் நிலைப்பள்ளிகள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  எனவே இப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா சிக்னல்களை சரி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×