என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Thirukalyana program at Chennimalai"
- காலை சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து முருகன் வள்ளி தெய்வானை சமேதராக உற்சவமூர்த்தி புறப்பாடு தொடங்கி மலை கோவிலை அடைந்தது
- இன்று காலை சென்னிமலை முருகன் கோவில், திண்டல் முருகன் கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடை பெற்றது.
சென்னிமலை:
சென்னிமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் கடந்த 26-ந் தேதி காலை கந்த சஷ்டி விழா தொடங்கியது.
அன்று காலை சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து முருகன் வள்ளி தெய்வானை சமேதராக உற்சவமூர்த்தி புறப்பாடு தொடங்கி மலை கோவிலை அடைந்தது.
பின்னர் யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து மகா பூர்ணாகுதியும், பின்னர் உற்சவர் மற்றும் மூலவர் ஆபிஷேகம் நடைபெற்றது.
தொடந்து மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் நூற்றுக்கனக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் வள்ளி தெய்வானைக்கு அபிஷேகம் நடைபெற்றது.
இந்த அபிஷேகம் மற்றும் யாக பூஜைகள் தொடந்து நேற்று மதியம் வரை ஐந்து நாட்களும் தினசரி சிறப்பு அபிஷேகம் நடந்தது.
நேற்று மதியம் மலை கோவிலில் சூரனை வதம் செய்வதற்காக சக்திவேல் வாங்கும் வைபோகம் நடந்தது. இதில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவச்சாரியார் முருகப்பெருமானிடம் சிறப்பு பூஜைகள் செய்து சக்தி வேலினை ஒப்படைத்தார்.
அதை தொடர்ந்து சாமி புறப்பாடு தொடங்கி படி வழியாக இரவு முருகப்பெ ருமான் சமேதராக மலை அடிவாரத்தில் எழுந்தருளி இரவு 8.30 மணிக்கு சிறப்பு வானவேடிக்கை மற்றும் சிறப்பு மேளதாளத்துடன் சூரனைவதம் செய்யும் சூரசம்ஹாரவிழா நிகழ்ச்சி தொடங்கியது.
சென்னிமலை நான்கு ராஜ வீதிகளில் நடைபெற்ற இந்த சூரன்வதம் செய்யும் நிகழ்சியை ஆயிரக்கா ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பயபத்தியுடன் கண்டுகளித்தனர்.
இதில் மேற்கு ராஜ வீதியில் ஜெகமகாசூரன் வதம் செய்தும், வடக்கு ராஜ வீதியில் சிங்கமுகசூரன் வதமும், கிழக்கு ராஜ வீதியில் வானுகோபன் வதமும், தெற்கு வீதியில் சூரபத்மனை முருகப்பெரு மான் இறுதியாக வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடந்தது.
அதன் பின்பு முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக கைலாசநாதர் கோவிலில் எழுந்தருளினார்.
இதேபோல் திண்டல் மலை முருகன் கோவிலிலும் நேற்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களிலும் நேற்று சூரசம்ஹாரம் விழா நடைபெற்றது.
இன்று காலை சென்னிமலை முருகன் கோவில், திண்டல் முருகன் கோவில்களில் திருக்க ல்யாண நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புஞ்சை புளியம்பட்டியில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சூரசம்ஹாரம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டும் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
விழாவையொட்டி நேற்று குதிரை, வீரபாகு சூரன் போன்ற வாகனங்கள் சத்தி மெயின் ரோடு மாரியம்மன் கோவில் வழியாக வந்துபவானி சாகர் சாலை வழியாக சென்று கோவிலை அடைந்தது.
பின்னர் இரவு முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று காலை முருகப்பெருமானின் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்