என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Thirukkolaur Vaithamanidhi temple"
- திருக்கோளூர் வைத்தமாநிதி கோவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடி ஏற்றம் நடந்தது.
- இரவு 7 மணிக்கு சுவாமி வைத்தமாநிதி,மதுரகவி ஆழ்வார் மாட வீதி, ரதவீதி புறப்பாடு நடந்தது.
தென்திருப்பேரை:
நவதிருப்பதி தலங்களில் 8-வது தலமான திருக்கோளூர் வைத்தமாநிதி கோவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடி ஏற்றம் நடந்தது. நேற்று 5-ம் திருவிழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு விஸ்வரூபம். 7.30 மணிக்கு திருமஞ்சனம். 8 மணிக்கு உற்சவர் வைத்தமாநிதி மாடவீதி புறப்பாடு நடந்தது. 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், ஹோமம், பூர்ணாகுதி திருவாராதனம், சாத்துமுறை நடந்தது. பின்னர் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மாலை 5 மணிக்கு சாயரட்சை, 5.30 மணிக்கு சுவாமி வைத்தமாநிதி மற்றும் மதுரகவி ஆழ்வார் இருவரும் வாகன குறட்டிற்கு வந்து அலங்காரம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சுவாமி வைத்தமாநிதி கருட வாகனத்திலும், மதுரகவி ஆழ்வார் அன்னவாகனத்திலும் மாட வீதி, ரதவீதி புறப்பாடு நடந்தது.
நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரகு, பாலாஜி, சீனிவாசன், சுந்தரம், ஸ்தலத்தார் திருவாய்மொழி பிள்ளை ஸ்ரீதரன் ஸ்வாமி சடகோபன் ஸ்வாமி, ஆத்தான் கீழத்திருமாளிகை சுவாமி, ராமானுஜன், நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவில் மணிகண்டன், ஆய்வாளர் லோகநாயகி, முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.