search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirumurugan Matriculation School"

    • குமார்நகர் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றது.
    • சுதா மோகன் மற்றும் ஆசிரியர்கள், சக மாணவர்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு குறுமைய அளவிலான பீச் வாலிபால் போட்டி குமார்நகர் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் திருப்பூர் நெருப்பெரிச்சல் திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

    இதன்படி மாணவர்களுக்கான சூப்பர் சீனியர் பிரிவு போட்டியில் பிளஸ்-2 மாணவர்கள் கிப்ஸன் சாமுவேல், விஜேஷ் ஆகியோர் வெற்றி பெற்று முதலிடமும், ஜூனியர் பிரிவு போட்டியில் 9-ம் வகுப்பு மாணவர்கள் சனோஜ், நிரஞ்சன் ஆகியோர் முதலிடமும், மாணவிகளுக்கான ஜூனியர் பிரிவு போட்டியில் செல்வதர்ஷினி, சாருநேத்ரா ஆகியோர் முதலிடமும் பிடித்தனர்.

    போட்டியின் அனைத்து பிரிவுகளிலும் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ-மாணவிகளையும், பயிற்சி வழங்கிய ஆசிரியர்கள் அருள், செபாஸ்டின் ஆகியோரையும் திருமுருகன் குழும தலைவர் டாக்டர் ஜி.மோகன், பள்ளி தாளாளரும், முதல்வருமான சுதா மோகன் மற்றும் ஆசிரியர்கள், சக மாணவர்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.

    • மாணவர்களின் கல்வியில் பெற்றோரின் பங்கு இருக்க வேண்டும்.
    • 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி பூஜை செய்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் நெருப்பெரிச்சல் திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு பாதபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி நிறுவனர் டாக்டர் ஜி.மோகன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளரும், முதல்வருமான சுதாமோகன் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியின் போது மாணவர்கள்- பெற்றோர்களுக்கு இடையேயான உறவின் மேன்மையை குறித்தும், மாணவர்களின் கல்வியில் பெற்றோரின் பங்கு எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்பது பற்றியும் தாளாளர் சுதாமோகன் சிறப்புரையாற்றினார்.

    400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி பெற்றோர்களின் பாதம் தொட்டு பூஜை செய்தனர். முடிவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    • இளைஞர் வல்லமையும் என்ற பண்பாட்டுக் கல்வி ஒரு வருட கல்வியாக அளிக்கப்பட்டது.
    • பள்ளியின் நிறுவனர் டாக்டர் ஜி.மோகன் தலைமை தாங்கினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் நெருப்பெரிச்சல் திருமுருகன் மெட்ரிக் பள்ளியில்வேதாத்திரி மகரிஷியின் யோகமும் இளைஞர் வல்லமையும் என்ற பண்பாட்டுக் கல்வி ஒரு வருட கல்வியாக அளிக்கப்பட்டது. இதில் 416 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் மாணவர்களின் அனுபவ உரை செயல்பாட்டு அறிக்கை சிறப்பாக செய்த மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவில் பள்ளியின் நிறுவனர் டாக்டர் ஜி .மோகன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் சுதா மோகன் வரவேற்று பேசினார். வாவிபாளையம் அறக்கட்டளை நிர்வாகிகள் பொருளாளர் அசோக்குமார் மற்றும் யோகமும் இளைஞர் வல்லமையும் தலைவர் சுந்தரமுத்து ஆகியோர் பயிற்சி முடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் யோகா ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×