என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருமுருகன் மெட்ரிக் பள்ளியில் யோகா பயிற்சி பெற்ற 416 மாணவ- மாணவிகளுக்கு பரிசு- சான்றிதழ்
- இளைஞர் வல்லமையும் என்ற பண்பாட்டுக் கல்வி ஒரு வருட கல்வியாக அளிக்கப்பட்டது.
- பள்ளியின் நிறுவனர் டாக்டர் ஜி.மோகன் தலைமை தாங்கினார்.
திருப்பூர் :
திருப்பூர் நெருப்பெரிச்சல் திருமுருகன் மெட்ரிக் பள்ளியில்வேதாத்திரி மகரிஷியின் யோகமும் இளைஞர் வல்லமையும் என்ற பண்பாட்டுக் கல்வி ஒரு வருட கல்வியாக அளிக்கப்பட்டது. இதில் 416 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் மாணவர்களின் அனுபவ உரை செயல்பாட்டு அறிக்கை சிறப்பாக செய்த மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் பள்ளியின் நிறுவனர் டாக்டர் ஜி .மோகன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் சுதா மோகன் வரவேற்று பேசினார். வாவிபாளையம் அறக்கட்டளை நிர்வாகிகள் பொருளாளர் அசோக்குமார் மற்றும் யோகமும் இளைஞர் வல்லமையும் தலைவர் சுந்தரமுத்து ஆகியோர் பயிற்சி முடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் யோகா ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.