search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvengadam"

    • தொடர்புடனைய கைதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

    பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பொன்னை பாலுவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி அவரது மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

    சென்னையில் கடந்த 5 ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை வழக்கில் கைதான 11 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் ஒருவரான திருவேங்கடம் நேற்று காலை போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    விசாரணையின் போது மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து திருவேங்கடம் காவலர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதற்கு போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் திருவேங்கடம் சம்பவ இடத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நடந்த ஒரு வார காலத்திற்குள் அதில் தொடர்புடனைய கைதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி இருக்கும் பொன்னை பாலுவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அவரது மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். 

    • 236 மாணவ- மாணவிகள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.
    • சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி முதல்வரும், தாளாளருமான அழகன் என்ற கண்ணன் பாராட்டினர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 236 மாணவ- மாணவிகள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

    மேலும் 228 மாணவ-மாணவிகள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். மாணவி மீனலோசினி 600-க்கு 584 மதிப்பெண்களையும், வர்ஷா 577 மதிப்பெண்களையும், மாணவி ஜோதி காருண்யா, மாணவர் மது காண்டீபன் ஆகியோர் 573 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தனர்.

    கணிதத்தில் 2 பேரும், இயற்பியலில் 2 பேரும், வேதியியலில் 3 பேரும், உயிரியலில் 2 பேரும், கணிப்பொறி அறிவியலில் ஒருவரும் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர்.

    தேர்ச்சி மற்றும் சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி முதல்வரும், தாளாளருமான அழகன் என்ற கண்ணன் மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள், பெற்றோர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.

    ×