search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvarur collector"

    • திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் அமைந்துள்ள இ-சேவை மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • திருவாரூர் பெண்கள் கிளை சிறைசாலையினை பார்வையிட்டு உணவு, கைதிகளின் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தினை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ திடீரென நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் அமைந்துள்ள இ-சேவை மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தினந்தோறும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்தும் கலெக்டர் கேட்டறிந்தார்.

    இ-சேவைமையத்திற்கு வருகை புரிந்தவர்களிடம் மையத்தில் வழங்கப்ப டும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    இ-சேவை மைய ஊழியர்களிடம் பொதுமக்களுக்கு தேவையான பணிகளை உடனடியாக செய்து கொடுக்குமாறு அறிவுறுத்தினார்.

    வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படும் சமூக பாதுகாப்புதிட்டம், வட்டவழங்கல் அலுவலகம், தனி தாசில்தார், நகர நிலவரி திட்ட அலுவலகம் ஆகிய அலுவலகங்களை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

    பொதுமக்களுக்கு தேவையான சேவைகளை உடனடியாக வழங்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து, திருவாரூர் பெண்கள் கிளை சிறைசாலையினை பார்வையிட்டு அங்கு கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு, கைதிகளின் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

    ஆய்வில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    கணவரை மீட்டு தர வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம் மலேசிய பெண் கோரிக்கை மனு அளித்தார்.
    திருவாரூர்:

    கணவனை மீட்டு தர வலியுறுத்தி மலேசியாவை சேர்ந்த துர்காதேவி என்பவர் நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மலேசியாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறேன். திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தனியார் நிறுவன டிரைவராக சிங்கப்பூரில் பணியாற்றினார். அப்போது எங்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊரான பெருகவாழ்ந்தானுக்கு வந்த ராஜ்குமாருக்கு அவரது குடும்பத்தினர் வேறொரு பெண்ணுடன் நேற்று முன்தினம் திருமணம் செய்ய ஏற்பாடு செய்வதாக தகவல் அறிந்தேன்.

    இதனையடுத்து சிங்கப்பூரில் இருந்து ஆன்லைன் மூலம் திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் அளித்தேன். பின்னர் மலேசியாவில் இருந்து புறபட்டு நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட திருமண மண்டபத்துக்கு போலீசாருடன் நேரில் சென்றேன். ஆனால் அங்கு ராஜ்குமார் இல்லை. அவரது உறவினர்கள் மட்டுமே இருந்தனர். அவர்கள் ராஜ்குமாருக்கும், வேறொரு பெண்ணுக்கும் திருமணம் நடந்து விட்டதாக தெரிவித்தனர். எனவே எனது கணவர் ராஜ்குமாரை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை பெற்று கொண்ட மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ், நீதிமன்றத்தின் மூலம் அணுகும்படி துர்கா தேவிக்கு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து இலவச சட்ட உதவி மையத்தை நாடுவதற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டுமென பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசாருக்கு உத்தரவிட்டார். தற்போது இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்்வதற்கான ஏற்பாடுகளை துர்காதேவி ரமீஸ் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews 
    கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை முறையாக பராமரிக்காத தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு கலெக்டர், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். #Dengu
    திருவாரூர்:

    திருவாரூர் காட்டுக்கார தெரு, திருமஞ்சன வீதி, தெற்கு வீதி உள்ளிட்ட நகர் பகுதிகளில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல் ராஜ் இன்று காலை டெங்கு கொசு ஒழிப்பு குறித்து நேரடி ஆய்வு நடத்தினார்.

    அப்போது கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை முறையாக பராமரிக்காத தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு கலெக்டர், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

    மேலும் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைக்க வேண்டும் என்று பள்ளி ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் பார்வையிட்டு தேவையற்ற குப்பைகளை பொது வெளியில் கொட்ட வேண்டாம் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

    பின்னர் திருவாரூர் கலெக்டர் நிர்மல்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை சுற்றுப்புறத்தை முறையாக பராமரிக்காத வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Dengu
    ×