என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tk rangarajan mp
நீங்கள் தேடியது "tk rangarajan mp"
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெற்ற 37 பேரால் பலன் இல்லை என்பது தவறான பிரசாரம் என்று டி.கே.ரெங்கராஜன் எம்.பி. கூறியுள்ளார்.
திருச்சி:
தட்சிண ரெயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டி.ஆர்.இ.யு.) என்ற தொழிற்சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் எம்.பி. கலந்து கொண்டார்.
கூட்டம் முடிவில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பயங்கரவாதம், தேசப்பற்று, பாகிஸ்தான் அச்சுறுத்தல் என பாரதீய ஜனதா செய்த பிரசாரத்தை நம்பி மக்கள் அக்கட்சிக்கு வாக்களித்து விட்டனர். அதனால் தான் பாராளுமன்ற தேர்தல் முடிவு எதிர்பார்க்காத வகையில் வந்து உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் மற்ற மாநிலங்களில் இடதுசாரிகளுக்கு தோல்வி ஏற்பட்டு இருப்பது உண்மை தான். இது தேர்தல் ரீதியான தோல்விதான். இயக்க ரீதியான தோல்வி அல்ல. இயக்க நடவடிக்கைகள் மூலம் தேர்தல் தோல்வியை சரிகட்ட முடியும்.
தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் வெற்றி பெற்ற 37 எம்.பி.க்களால் எந்த பலனும் கிடைக்காது என செய்யப்படும் பிரசாரம் தவறானது. இந்த எம்.பி.க்களால் தமிழக மக்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். தவறான பிரசாரம் செய்பவர்களுக்கு தான் பலன் கிடைக்காது.
தமிழகத்தில் குறுவை சாகுபடிக்கு வசதியாக கர்நாடக மாநில அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும். தி.மு.க மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேச இருக்கிறோம். கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற இன்னும் 25 ஆண்டுகள் ஆகலாம். காவிரி நதி நீர் பிரச்சினையை தீர்த்துவிட்டு தான் கோதாவரி இணைப்புக்கு முயற்சி எடுக்கவேண்டும் என்று பிரதமரை சந்திக்கும் போது வலியுறுத்த இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீதிமன்றம்- போலீசாரை விமர்சித்து பேசிய எச்.ராஜாவை கைது செய்யாதது கண்டிக்கத்தக்கது என்று டி.கே.ரெங்கராஜன் எம்பி தெரிவித்துள்ளார். #hraja
திருச்சி:
திருச்சியில் ஓய்வூதியர்கள் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி எம்.பி., டி.கே.ரெங்கராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு மக்கள் விரோத அரசாகவும், வேலை வாய்ப்பு உருவாக்காத அரசாகவும், விவசாயிகளின் நலன் காக்காத அரசாகவும் உள்ளது. பா.ஜ.க. தமிழகத்தில் பெரிய கட்சி கிடையாது. ஆனால் அ.தி.மு.க.வையும், காவல்துறையையும் கைக்குள் வைத்து கொண்டு பெரியார் சிலையை அவமதித்துள்ளது கண்டிக்கத்தக்கது.
சமீபகாலமாக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, நீதிமன்றம், காவல்துறை பற்றி அவதூறாக பேசி வருகிறார். தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சிப்பது தவறு. அவருக்கு ஆதரவாக மாநில அமைச்சர்கள் செயல்படுகின்றனர். எச்.ராஜாவின் கருத்துக்கள் ஜனநாயகத்தை சீர்குலைப்பதாக உள்ளது . இதற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்.
ஆர்ப்பாட்டம் நடத்தினாலே கைது செய்யும் அரசு, கோர்ட்டு, காவல்துறை பற்றி பேசிய எச்.ராஜாவை கைது செய்யாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் நாடு சர்வாதிகார ஆட்சியை நோக்கி செல்கிறது. பெட்ரோல் - டீசல் விலை உயர்வால் பொதுமக்கள், லாரி ஓட்டுனர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விலைவாசி உயர்வால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். எனவே பா.ஜ.க.வுக்கு மாற்றாக காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #hraja
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X