search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "to the collector on 22nd"

    • காமாட்சிபுரம், தம்மரெட்டி பாளையம் ஆகிய ஊராட்சி களின் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.
    • ஐகோர்ட்டு உத்தரவிட்ட தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்,

    சென்னிமலை, 

    கீழ்பவானி பாசன விவசாயிகள் கூட்டம் சென்னிமலை அடுத்துள்ள ஒரத்துப்பாளையம் அணை அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒரத்துப்பா ளையம் பழனிசாமி தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு இயற்கை வாழ்வுரிமை இயக்க அமைப்பாளர் மே.கு.பொடாரன் மற்றும் திருப்பூர் மாவட்டம், காங்கயம் ஒன்றியத்தை சேர்ந்த மறவபாளையம், காமாட்சிபுரம், தம்மரெட்டி பாளையம் ஆகிய ஊராட்சி களின் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், கீழ்பவானி விவசாயிகள் சங்க தலைவர் செ.நல்லசாமி, தமிழக விவசாயிகள் சங்க செயலாளர் செங்கோ ட்டையன், கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் மு.ரவி ஆகியோர் கலந்து கொண்டு கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக பேசினார்கள்.

    பின்னர், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பது குறித்து ஐகோர்ட்டு உத்தரவிட்ட தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும், அரசாணை எண் 276-ல் திருத்தம் செய்து சட்ட பாதுகாப்பு வழங்குவதுடன் பழைய கட்டுமான பணிகளை மட்டுமே செய்ய வேண்டும் என்றும், புதிய கட்டுமான பணிகளுக்கு எதிராக அறவழி போராட்டம் நடத்துவது என்றும்,

    பவானிசாகர் அணை முதல் கடைமடையான மங்களப்பட்டி வரை குடிநீரை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து கீழ் பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க கூடாது என தனித்தனியே மனு எழுதி வருகிற 22-ந் தேதி (திங்கட்கிழமை) அன்று காலை 10 மணிக்கு ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    இந்தக் கூட்டத்தில் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாசனப்பகுதி விவசாயிகளான ஆண்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் சொக்கநாதபாளையம் கலைவாணி பாஸ்கர் நன்றி கூறினார். 

    ×