search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tourist place"

    • தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருகிறது.

    களக்காடு:

    களக்காடு புலிகள் காப்பகத்திற்குள்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. வனத்துறையினரால் சுற்று சூழல் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டுள்ள தலையணையில் ஓடும் தண்ணீர் மூலிகைகளை தழுவியபடி அதிக குளுமையுடன் ஓடி வருவதால் அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் தலையணைக்கு வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக கோடை வெயிலின் தாக்கத்தால் தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்தது. தொடர் வறட்சியால் கடும் வெப்பம் நிலவியது. மேலும் வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத் தீ விபத்துகளும் ஏற்பட்டு வந்தன. இதற்கிடை யே தலைய ணையில் பராமரிப்பு பணிகளும் தொடங்கின. இதையடுத்து களக்காடு தலையணை கடந்த மாதம் 15-ந் தேதி முதல் மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

    இதனிடையே கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருகிறது. மழையினால் தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து தலையணைக்கு செல்லவும், குளிக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டது.

    இந்நிலையில் வெள்ளம் தணிந்ததால் இன்று காலை தலையணை நீர்வீழ்ச்சி திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்து ள்ளனர். 23 நாட்களுக்கு பிறகு தலையணை திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகம் முழுவதும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை போன்ற வெளி மாவட்டங்களில் பணி செய்து வருபவர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் வந்துள்ளார்கள்.
    • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தைப் பொங்கலுக்கு மறுநாள் காணும் பொங்கலாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சுற்றுலா தலங்கள் அதிக அளவில் குவிந்தனர்.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை போன்ற வெளி மாவட்டங்களில் பணி செய்து வருபவர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் வந்துள்ளார்கள்.

    இன்று மாட்டுப்பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தைப் பொங்கலுக்கு மறுநாள் காணும் பொங்கலாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சுற்றுலா தலங்கள் அதிக அளவில் குவிந்தனர்.

    களக்காடு தலையணை, அகஸ்தியர் அருவி, பாபநாசம் கோவில், சொரிமுத்து அய்யனார் கோவில், கடனா, ராமநதி அணைகள் மற்றும் குற்றால அருவிகளில் இன்று பொதுமக்கள் குடும்பத்துடன் குவிந்தனர். அவர்கள் வீட்டில் சமைத்த உணவுகளை சுற்றுலா தலங்களுக்கு எடுத்து சென்று அங்கு குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு காணும் பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர்.

    இதேபோல் நெல்லை மாநகர் பகுதிகளில் உள்ள மாவட்ட அறிவியல் மையம், தாமிரபரணி ஆற்றங்கரையோரங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இன்று அதிக அளவு மக்கள் கூட்டம் காணப்பட்டது.

    பொங்கல் பண்டியையொட்டி இன்று பல்வேறு இடங்களிலும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப் பட்டது. காணும் பொங்கலை யொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    சுற்றுலா தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இன்று போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    ×