search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "traffic disruptions"

    • சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
    • இதனையடுத்து விவசாயிகள் வா க்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    காவிரியில் நீர் திறக்காத கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு ஆதரவாக சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வ தற்காக விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னை நோக்கி பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். திண்டிவனம் அடுத்த கோனேரி குப்பம் பகுதியில் விவசாயிகளை தடுத்து நிறுத்திய போலீசார், சென்னைக்கு செல்ல அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனை யடுத்து விவசாயிகள் வா க்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இருந்தபோதும் போலீசார் அனுமதி மறுத்ததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கரும்பு மற்றும் நெற்பயிர்களை கையில் பிடித்தபடி சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மறியல் ஈடுபட்ட விவசா யிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், சென்னை போராட்ட த்திற்கு செல்ல அனுமதி அளித்த னர். தொடர்ந்து விவசாயி கள் தங்கள் மறியலை கைவி ட்டனர். விவசாயி களின் இந்த மறியல் காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சா லையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மணிப்பூர் சம்பவத்தை தடுக்க தவறிய மத்திய அரசு

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகர மும்முனை சந்திப்பில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மீரான் ஷா தலைமை தாங்கினார். கிராத் மன்சூர் அஹமத் ஹஜரத் ஓதினார். மாநில நிர்வாகி நவாப் ஜான் அனைவரையும் வரவேற்றார். மாவட்டத் தலைவர் பீர் முகமது முன்னிலை வகித்தார்.

    மாவட்டச் செயலாளர் சாதிக் பாஷா, மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான், எஸ்.டி.பி.ஐ., கட்சி மாவட்டத் தலைவர் முகமது ரபிக், விடுதலை சிறுத்தை ஒன்றிய செயலாளர் தலித் சந்திரன் மற்றும் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மணிப்பூர் சம்பவத்தை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முடிவில் மாவட்டத் துணைச் செயலாளர் ஜாபீர் உசேன் நன்றி கூறினார்.

    • குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • உசிலம்பட்டி-திருமங்கலம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது ஆரியபட்டி ஏ.கண்ணியம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஏ.கண்ணியம்பட்டி கிராமத்திற்கு கடந்த 2 மாதங்களாக குடிநீர் வரவில்லை என்று கூறப்படுகிறது. தங்களது கிராமத்திற்கு குடிநீர் சீராக சப்ளை செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

    மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். இருந்த போதிலும் குடிநீர் வரவில்லை என தெரிகிறது. தற்போது அந்த பகுதியில் கோவில் திருவிழாக்கள் நடந்து வருகின்றன. இந்த சூழலில் குடிநீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு உள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த ஏ.கண்ணியம்பட்டி கிராமமக்கள் இன்று உசிலம்பட்டி-திருமங்கலம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் சாலையின் குறுக்கே அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். பெண்கள் காலிக் குடங்களுடன் சாலையில் அமர்ந்தனர்.

    இதனால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்ல முடியவில்லை. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து, மறியல் போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டனர். கிராம மக்களின் இந்த திடீர் போராட்டத்தால் உசிலம் பட்டி-திருமங்கலம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • எதிர்பாராத விதமாக அறுந்து, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது விழுந்துள்ளது.
    • ஜக்காம் பேட்டையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    மயிலம் அருகே உயர் மின்ன ழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் சிறுவன் உயிரி ழந்த நிலையில், மற்றொரு சிறுவன் படுகாய மடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திண்டிவனம் அடுத்த மயிலம் அருகே உள்ள வேங்கை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் யுவனேஸ்வரன்(4).அதே பகுதியை சேர்ந்த ராஜா மகன் நித்திஷ்(4), உள்ளிட்ட 4 சிறுவர்கள் இன்று காலை வீட்டின் அருகே உள்ள வயல்வெளி பகுதியில் விளையாடிக் கொண்டி ருந்தனர். அப்போது அப்பகுதியில் சென்ற உயர் மின்னழுத்த கம்பி எதிர்பாராத விதமாக அறுந்து, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது விழுந்துள்ளது. இதில் யுவனேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மயிலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் காயமடைந்த நித்திஷ் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் காலை 7.30 மணியளவில் நடைபெற்ற சம்பவம் குறித்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை மின் ஊழிய அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், ஜக்காம்பேட்டையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் சென்று தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது மின்வாரிய ஊழியர்களுக்கும் பொது மக்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஜக்காம் பேட்டையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் மற்றும் மயிலம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • சாலை விரி வாக்கம் பணிகளின் போது குடிநீர் வழங்கும் பைப் லைன் உடைந்து போனதாக கூறப்படுகிறது.
    • தியாகதுருகம்- திருக்கோ விலூர் சாலையில் கஸ்தூரி பாய் நகர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.,

    கள்ளக்குறிச்சி

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் மணலூர் பேட்டை - ரிஷிவந்தியம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது  இந்நிலையில் தியாக துருகம் கஸ்தூரிபாய் நகர் பகுதியில் சாலை விரி வாக்கம் பணிகளின் போது குடிநீர் வழங்கும் பைப் லைன் உடைந்து போனதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 3 நாட்களாக அப்பகு தியில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கடந்த 3 நாட்களாக குடிநீர் விநி யோகம் செய்யப்பட வில்லை  இதனால் ஆத்திர மடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தியாகதுருகம்- திருக்கோ விலூர் சாலையில் கஸ்தூரி பாய் நகர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் 

      போக்குவரத்துகவல் அறிந்த தியாகதுருகம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் விரைந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் தியாகதுருகம்- திருக்கோ விலூர் சாலையில் சுமார் மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஒடிவந்தனர்.
    • ஆற்றில் மாயமான வாலிபர்களை உடனே மீட்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே பேரங்கியூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சதீஷ் (வயது30), செந்தல்(30). இவர்கள் 2 பேரும் நேற்று மாலை பிடாகம் தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்றனர். குளித்து கொண்டிருந்த போது 2 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இதனால் அவர்கள் கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஒடிவந்தனர். அவர்கள் 2 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கிராம மக்களால் மீட்க முடியவில்லை. இதுபற்றி விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையம், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று 2 வாலிபர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் 2 பேரையும் கண்டு பிடிக்கப்படவில்லை. இரவு நேரமாகியும் 2 பேரையும் கண்டு பிடிக்கப்படவில்லை.

    இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவியது. இதனால் அவர்கள் ஆவேசம் அடைந்தனர். இன்று காலை பேரங்கியூர் ஒன்று திரண்டனர். அவர்கள் ஆற்று முகப்பில் உள்ள திருச்சி- சென்னை சாலையில் அமர்ந்த மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. உடனே பஸ் போக்குவரத்து மாற்று வழியாக திருப்பி விடப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செல்வ ராஜ், காமராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபு, ஆனந்தன் ஆகியோர் விரைந்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுருவும் அங்கு விரைந்தார். அப்போது கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். ஆற்றில் மாயமான வாலிபர்களை உடனே மீட்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதுபற்றி அறிந்த தாசில்தார் பாஸ்கரன் விரைந்து சென்று உரிய நட வடிக்கை எடுக்கப்படும். இளைஞர்களை மீட் கும்பணி துரிதப்படுத்தப் படும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து மறி யல் கைவிடப்பட்டது.

    ×