search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trichy Collector"

    திருச்சி மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கிஷான்அட்டைகள் பெற உரிய விண்ணப்பத்தினை, தகுந்த ஆதாரங்களுடன் இணைத்து அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களில் வருகின்ற 15.2.2022க்குள் அளித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
    திருச்சி:

    கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் கிஷான் கடன் அட்டைகள் வழங்கிட நிலையான இயக்க செயல்முறைகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தில் கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு அவர்களின் நிதி ஆதாரங்களைப் பெருக்கும் விதமாக கிஷான் கடன் அட்டைகள் வழங்கிட, கால்நடை வளர்க்கும் விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வருகிற 15.2.22வரை பெறப்படவுள்ளது.

    அதனடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கிஷான்அட்டைகள் பெற உரிய விண்ணப்பத்தினை, தகுந்த ஆதாரங்களுடன் இணைத்து அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களில் வருகின்ற 15.2.2022க்குள் அளித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இத்தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.
    மே தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் 1-ந்தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார்.
    திருச்சி:

    திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 1-ந்தேதி (புதன் கிழமை) மே தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக்கடைகள் மூடப்பட்டிருக்கும். அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள், எப்.எல்.1,  எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ., எப்.எல்.3ஏஏ., மற்றும் எப்.எல்.11 முதலான ஓட்டல் பார்களிலும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும்.

    எனவே மே தினத்தன்று அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும். 

    இவ்வாறு கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.
    மக்கள் அனைவரும் விபத்தில்லா மற்றும் மாசில்லா தீபாவளியை சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென கலெக்டர் வேண்டுகோள் கொடுத்துள்ளார்.
    திருச்சி:

    திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீமையினை நன்மை வென்றதை நினைவுபடுத்தும் விதமாகவும், நமது கலாசாரத்தையும், மரபையும் வெளிப்படுத்தும் விதமாகவும், இந்தியா முழுவதும் பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு காலை 6 முதல் 7 மணி வரையும், இரவில் 7 முதல் 8 மணி வரையும் அனுமதி வழங்கி உள்ளது.

    தமிழ்நாட்டின் அனைத்து மாநகராட்சிகளிலும், தீபாவளிக்கு முன்பு 7 நாட்களும் தீபாவளிக்கு பின்பு 7 நாட்களும் மொத்தம் 14 நாட்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் காற்றின் தரத்தை அளவீடு செய்யும். மாசில்லா சுற்றுச்சூழலை பேணிக்காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும்.

    இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு, அந்த அந்த பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம். அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மக்கள் அனைவரும் விபத்தில்லா மற்றும் மாசில்லா தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடுவோம். இவ்வாறு அதில் கூறி உள்ளார். #tamilnews
    நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கலெக்டர் ராசாமணி உத்தரவிட்டார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பாக காவல்துறை, மாநகராட்சி, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகிய துறை அதிகாரிகளுடன் மாவட்ட கலெக்டர் ராசாமணி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் ராசாமணி கூறியதாவது:-

    திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி களிலும் சாலை பாதுகாப்பு அமைப்பு தொடங்க வேண்டும். மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கோர்ட்டு உத்தரவுப்படி உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், நீர் நிலை புறம்போக்கில் செங்கல்சூளை, விவசாயம் போன்ற பணிகள் செய்யப்பட்டு இருந்தாலும் அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். 

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள காவிரி நீரை ஏரி, குளங்களில் நிரப்புவதற்கு முழுவீச்சில் செயல்பட வேண்டும். ஏரி, குளங்களில் நீர் நிரப்புவதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். விவசாய பயன்பாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், போலீஸ் துணை கமி‌ஷனர்கள் நிஷா, மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலர்(பொறுப்பு) சங்கரநாராயணன், துணை கலெக்டர் கமல்கிஷோர் உள்பட மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×