என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tripartite Festival"
- திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பேரியக்கம் தொடங்கப்பட்ட நாள்.
- தோழனாகத் திகழ்கிற இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து இன்று தமிழகம் புறப்படும் முன்பு தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அரசுமுறைப் பயணத்தில் ஏறத்தாழ இரண்டு வாரகாலமாக தொடர்ச்சியான பணிகளில் இருந்தாலும், என் உள்ளம் ஒவ்வொரு நொடியும் தமிழ்நாட்டைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறது.
உலகின் முன்னணித் தொழில் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றும் தமிழ்நாட்டின் தொழில் முதலீட்டினைப் பெருக்கி, இளைய தலைமுறையினருக்கான வேலைவாய்ப்பை வழங்கிட வழிவகுக்கின்றன.
முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்பதை வெறும் சொற்களாக இல்லாமல், முழுமையான செயல்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு.
அதை அமெரிக்காவில் வாழும் தமிழர்களும் நன்றாகப் புரிந்துகொண்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்குவதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.
சிகாகோ நகரின் ரோஸ்மாண்ட் அரங்கத்தில் செப்டம்பர் 7-ம் நாள் அமெரிக்கத் தமிழர்களுடனான சந்திப்பு பெரும் உற்சாகத்தை அளித்தது.
அமெரிக்காவில் இருக்கிறோமா, அன்னைத் தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா என்கிற அளவிற்கு, 5000 தமிழர்களுக்கு மேல் திரண்ட ஒரு மினி தமிழ்நாடாக அந்த அரங்கம் அமைந்திருந்தது.
இன-மொழி உணர்வால் அவர்களுக்கு நானும், எனக்கு அவர்களும் உறவாக அமைந்த சிறப்பான நிகழ்வு அது.
அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சிகாகோவில் நடந்த சந்திப்புக்கு வருகை தந்த தமிழர்களும், பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களால் வர இயலாமல் போனவர்களும் தமிழ்நாட்டில் கடந்த மூன்றாண்டு களில் திராவிட மாடல் அரசு நிறைவேற்றியுள்ள சாதனைத் திட்டங்களைப் பாராட்டத் தவறவில்லை.
அவர்களின் பாராட்டுகள், உங்களில் ஒருவனான எனக்கு தமிழ்நாட்டின் நினைவுகளையே மீண்டும் மீண்டும் கிளறின. திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஜனநாயகப் பேரியக்கம் என்றென்றும் தமிழையும் தமிழர்களையும் காக்கின்ற இயக்கமல்லவா!
இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலக் கட்சி, முக்கால் நூற்றாண்டு காலத்தைக் கடந்து, மக்களின் பேராதரவுடன் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதுடன், இந்திய அளவில் கொள்கை வலிமைமிக்க தாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய இயக்கமாகவும் திகழ்கிறதென்றால், அது தி.மு.க. தான்.
செப்டம்பர் 15-இந்த மாபெரும் இயக்கத்தை உருவாக்கித் தந்து, இந்த மாநிலத்தின் உரிமைகளைக் காத்து, தமிழ்நாடு என்று நம் மாநிலத்திற்குப் பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள். செப்டம்பர் 17-கொள்கைப் பேராசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாள்.
அதே நாள்தான், திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பேரியக்கம் தொடங்கப்பட்ட நாள். இந்த மூன்றையும் இணைத்து, முப்பெரும் விழா என்று பெயர்சூட்டி திராவிடத் திருவிழாவாகக் கொண்டாடும் வழக்கத்தை உருவாக்கியவர் நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
வருகிற 17-ந்தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ள பவளவிழா நிகழ்வுகள் குறித்தும், மாவட்டங்கள் தோறும் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் குறித்தும் அமெரிக்காவில் இருந்தபடியே, கழகத்தின் ஒருங்கிணைப்புக் குழுவினருடன் காணொலியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதுடன், மாவட்டக் கழகச் செயலாளர்கள் பலரிடமும் தொடர்ந்து பேசி வருகிறேன்.
ஆகஸ்ட் 16-ஆம் நாள் நடைபெற்ற மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, கழக மாவட்டங்கள் பலவற்றிலும் கழகத்தின் பவள விழாவிற்கான சுவர் விளம்பரங்கள் எழில்மிகுந்த முறையிலே எழுதப்பட்டிருப்பதை காணொலிகளாக நம் கழக நிர்வாகிகள் அனுப்பியிருந்தார்கள். சிறப்பான முறையிலே சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டிருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன்.
தி.மு.க.வின் கடைக்கோடி உறுப்பினரின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் உட்கட்சி ஜனநாயகத்தன்மையின் அடிப்படையில் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்கும் பொது உறுப்பினர்கள் கூட்டம் தொடர்ந்து நடைபெறுவதையும் அறிந்து கொண்டேன்.
வட்ட வாரியாக-கிளைவாரியாக நடைபெற்ற இத்தகைய பொது உறுப்பினர் கூட்டங்கள் பெரும்பாலான கழக மாவட்டங்களில் முழுமையாக நிறைவு பெற்றிருக்கின்றன.
பொது உறுப்பினர்கள் கூட்டங்களில், தொண்டர்களின் ஆழ்மனக் கருத்துகள் அடி வயிற்றிலிருந்து வெளிப்பட்ட குரலாக ஒலித்ததையும், தி.மு.க.வின் தலைவர் என்ற முறையில் நான் கவனிக்கத் தவறவில்லை.
தொண்டர்களின் குரலில் ஒலிக்கும் நியாய உணர்வுக்கு மதிப்பளிக்கத் தலைமை தவறுவதில்லை என்ற உறுதியை உங்களில் ஒருவனாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தி.மு.க.வின் பவள விழா பொதுக்கூட்டம் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற 17-ந்தேதி எழுச்சிகரமாக நடைபெற இருக்கிறது.
இந்த 75 ஆண்டுகாலத்தில், தெற்குதான் வடக்கிற்கு வழிகாட்டுகிறது என்கிற அளவிற்கு தி.மு.க.வின் கொள்கைத் தாக்கம் நாடு முழுவதும் பேசப்படுகிறது. திராவிட மாடல் என்பது இந்திய மாநிலங்கள் பின்பற்றும் கோட்பாடாக மாறியிருக்கிறது.
உலகத்தில் தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களின் நம்பிக்கைக்குரிய இயக்கமாக-அவர்களின் நண்பனாகத் தோழனாகத் திகழ்கிற இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். இதுதான் 75 ஆண்டுகாலப் பயணத்தின் சாதனை.
இந்த வெற்றிப் பயணம் தொடர்ந்திட, 17-ந்தேதி அன்று வரலாற்றுப் பெருவிழாவான கழகத்தின் பவள விழாவில் படையெனத் திரண்டு, கொண்டாடி மகிழ்வோம்.
இது உங்களில் ஒருவனான என்னுடைய அழைப்பு மட்டு மல்ல; இந்த இயக்கத்தை உருவாக்கிய பேரறிஞர் அண்ணாவும், பேணிப் பாதுகாத்து வளர்த்த முத்தமிழறிஞர் கலைஞரும் நம்மை அழைக்கிறார்கள்! அணி திரள்வோம்! பணி தொடர்வோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- அரங்கில் தி.மு.க. சாதனைகள் குறித்து கண்காட்சிக்கும் ஏற்பாடு.
- மு.க.ஸ்டாலின் விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
சென்னை:
பெரியார்-அண்ணா பிறந்தநாள், தி.மு.க. தோற்றுவிக்கப்பட்ட நாள் என ஆண்டுதோறும் தி.மு.க. முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு தி.மு.க. முப்பெரும் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக தி.மு.க.வின் 75-வது ஆண்டு பவள விழா என்பதால் முப்பெரும் விழா கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
இதையொட்டி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பவள விழா ஆண்டை குறிக்கும் விதத்தில் 75 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட உள்ளன. 1 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
விழா அரங்கில் தி.மு.க. சாதனைகள் குறித்து கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் முப்பெரும் விழாவில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
விழாவில் பெரியார் விருது-பாப்பம்மாள், அண்ணா விருது-மிசா ராம நாதன், கலைஞர் விருது-ஜெகத்ரட்சகன், பாவேந்தர் விருது-கவிஞர் தமிழ்தாசன், பேராசிரியர் விருது-வி.பி.ராஜன், மு.க.ஸ்டாலின் விருது-தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆகி யோருக்கு வழங்கப்படுகிறது.
இவை மட்டுமின்றி ஒன்றிய, நகர, பேரூர், பகுதி ஆகியவற்றில் சிறப்பாக செயல்படும் தலா ஒருவருக்கு நற்சான்று பணமுடிப்பு ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது.
பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் ஐ. பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, கனிமொழி கருணாநிதி, அந்தியூர் செல்வராஜ் உள்பட பலர் பேசுகின்றனர். மாவட்டச் செயலாளர் மா.சுமணியன் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
விழா ஏற்பாடுகளை நந்தனம் மைதானத்துக்கு சென்று அமைச்சர் எ.வ. வேலு பார்வையிட்டுளார்.
- தி.மு.க. பவள விழா ஆண்டு
- எஸ்.ஜெகத்ரட்சகனுக்கு கலைஞர் விருது.
சென்னை:
தி.மு.க. பவள விழா ஆண்டையொட்டி செப்டம்பர் 17-ந்தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் தி.மு.க. முப்பெரும் விழா நடைபெறுகிறது.
இந்த விழாவில் விருது பெறுவோர் பட்டியலை தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி பெரியார் விருது-பாப்பம்மாளுக்கும், அண்ணா விருது-அறந்தாங்கி மிசா ராமநாதனுக்கும் வழங்கப்படுகிறது.
கலைஞர் விருது-எஸ்.ஜெகத்ரட்சகனுக்கு வழங்கப்படுகிறது. பாவேந்தர் விருது-கவிஞர் தமிழ்தாசனுக்கும், பேராசிரியர் விருது-வி.பி.ராஜனுக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- மனவளர்ச்சிக்குன்றியோர் சிறப்பு பள்ளளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
- மனித வளத்துறை துணை மேலாளர் ஒ.எஸ்.அறிவு கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் தாங்கள் வாழ்வில் தன்னம்பிக்கை விடாமுயற்சி கல்வி இதன் மூலமே சாதனை செய்ய முடியும் என கூறினார்.
கடலூர்:
நெய்வேலி அருகே எ.குறவன்குப்பத்தில் உள்ள டிவைன் கிராஸ் மனவளர்ச்சிக்குன்றியோர் சிறப்பு பள்ளளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியம் அனைவரையும் வரவேற்றார். நியூலைட் சாரிட்டபுல் டிரஸ்ட் பொருளாளர் முன்னிலை வகித்தார். நியூலைட்சாரிட்டபுல் நிர்வாகி மனநல நிபுணர் சகாயராஜர தலைமை வகித்தார் சிறப்பு விருந்தினராக என்.எல்.சி.இந்தியா நிறுவனத்தின் சுரங்கங்களில் மனித வளத்துறை துணை மேலாளர் ஒ.எஸ்.அறிவு கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் தாங்கள் வாழ்வில் தன்னம்பிக்கை விடாமுயற்சி கல்வி இதன் மூலமே சாதனை செய்ய முடியும் என கூறினார். மேலும் கலைநிகழ்ச்சி விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார். முடிவில் விடுதி காப்பாளர் கென்னடி நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்