என் மலர்
நீங்கள் தேடியது "Udhayanithi Stalin Birthday"
- உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் ஒரு மாதத்திற்கு கொண்டாடப்படுகிறது.
- மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் ஏற்பாட்டில் 5, 930 பேருக்கு கேக் வழங்கப்படுகிறது.
நெல்லை:
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா ஏழை-எளியோர், முதியோர், ஆதரவற்றோர், மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் ஒரு மாதத்திற்கு நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் கொண்டா டப்படுகிறது.
அதன்படி அவரது பிறந்தநாளான நாளை மறுநாள்(திங்கட்கிழமை) முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கப்பட்ட காலை உணவு திட்டத்தின் கீழ் சாப்பிடும் நெல்லை மத்திய மாவட்டத்திற்குட்பட்ட நெல்லை, பாளை சட்டமன்ற தொகுதிகளில் மாநகராட்சியில் உள்ள 40 பள்ளிகளில் பயிலும் 2,825 மாணவர்க ளுக்கும், மானூர் ஒன்றிய பகுதியில் 59 பள்ளிகளில் 2,621 மாணவர்களுக்கும், பாளை ஒன்றியத்தில் 9 பள்ளிகளில் பயிலும் 484 மாணவர்களுக்கும் என மொத்தம் 5, 930 பேருக்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் ஏற்பாட்டில் கேக் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதனையொட்டி மாண வர்களுக்கு காலை உணவுடன் கேக் வழங்கு வதற்கான பெட்டிகளை மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் அனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மூத்த நிர்வாகி சுப.சீதாராமன், மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் மாலைராஜா, மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் விஜிலா சத்யானந்த், முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மீரான்மைதீன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டை யப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.