search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Union Budget 2024"

    • பட்ஜெட்டில் ரயில்வே குறித்து ஒரு வரிகூட குறிப்பிடாதது கண்டனத்திற்குரியது.
    • பட்ஜெட்டில் தமிழ்நாடு உட்பட பெரும்பாலான மாநிலங்கள்புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.

    2024- 25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

    மத்திய அரசின் இந்த பட்ஜெட் அறிவிப்பை மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2024-25 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சிகளின் தயவோடு நடத்தப்படும் ஆட்சி என்பதனால் பீகாருக்கும் ஆந்திரப்பிரதேசத்துக்கும் மட்டும் சிறப்புத் திட்டங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு உட்பட பெரும்பாலான மாநிலங்கள்புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.

    தமிழ்நாடு அரசின் முக்கிய கோரிக்கைகளான வெள்ள நிவாரண நிதி, இரண்டாம் கட்டமெட்ரோ ரயில் திட்டம், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பும் சொல்லப்படவில்லை.

    ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவில் விலைவாசி கட்டுக்குள் இருப்பதாகக்கூறியுள்ளார். உண்மை நிலை அப்படியானதாக இல்லை என்பதனை மக்கள் அனைவரும் உணர்ந்திருக்கின்றனர்.

    இந்த நிதிநிலை அறிக்கை அனைவரையும் உள்ளடக்கியது என்று பேசியுள்ள நிதி அமைச்சர் சிறுபான்மையினர் முன்னேற்றத்திற்கான அறிவிப்புகளையும் நிதி ஒதுக்கீட்டையும் அறிவிக்கவில்லை என்பது வருத்தத்துக்குரியது. அதே போல் பட்டியல் இன மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான முன்னேற்றம் குறித்தும் அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை.

    காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையையும் இடைக்கால நிதிநிலை அறிக்கைகளையும் வெட்டி ஒட்டி இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி கூறியிருப்பதையும் புறந்தள்ள முடியாது.

    ரயில்வே துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை இருந்ததை ஒழித்த மோடி அரசு இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலையில் ரயில்வே குறித்து ஒரு வரிகூட குறிப்பிடாதது கண்டனத்திற்குரியது

    இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பை முறையாக நடத்தாமல் போதிய புள்ளிவிவரங்கள் இல்லாமல் வெறும் கற்பனை விவரங்களைச் சொல்லி மக்களை ஏமாற்ற ஒன்றிய அரசு முயல்கிறது. மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை காற்று ஊதப்பட்ட பலூன் போன்றது தான்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • இது மோடி அரசை காப்பாற்றுவதற்கான பட்ஜெட் என காங்கிரஸ் தலைவர் கார்கே குறிப்பிட்டுள்ளார்.
    • நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்கான பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது என்றார் ராகுல் காந்தி.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். காலை 11 மணிக்கு சபை கூடியதும் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

    இந்த பட்ஜெட் நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்கான பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது. கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களை திருப்திப்படுத்தும் விதமாகவே பட்ஜெட் உள்ளது என காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், இது மோடி அரசை காப்பாற்றுவதற்கான பட்ஜெட், வேறு ஒன்றும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில், மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

    இதில், மத்திய பட்ஜெட் பாரபட்சமாக போடப்பட்டுள்ளது என்பதைக் கண்டித்து பாராளுமன்றத்தில் நாளை இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • என்டிஏ நலனுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் இந்தியாவுக்கானது அல்ல- சரத் பவார் கட்சி.
    • இந்த பட்ஜெட் நிர்மலா சீதாராமன் கர்காடகாவிற்கு வெறும் பாத்திரத்தை கொடுப்பதுபோல் உள்ளது- சித்தராமையா

    2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அவர் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களில் உள்ள திட்டங்களுக்கு அதிகப்பட்டியான நிதியை ஒதுக்கினார்.

    இந்த நிலையில் மற்ற மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும், சில மாநிலங்களின் பெயர்கள் கூட பட்ஜெட்டில் இடம் பெறவில்லை எனவும் பல மாநிலத் தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

    சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் NCP (SP)

    சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கிளைடே கிராஸ்டோ "நிர்மலா சீதாராமன் பீகார் மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களுக்கான பட்ஜெட்டை மட்டும் தாக்கல் செய்தாரா? பாஜகவுக்கும், என்டிஏ அரசுக்கும் இந்த பட்ஜெட் பீகார் மற்றும் ஆந்திர பிரதேசத்திற்கு ஆதரவாக இல்லை என்றால் அவர்களுடைய அரசு கவிழும் என்பது தெரியும். என்டிஏ நலனுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் இந்தியாவுக்கானது அல்ல.

    உத்தவ் தாக்கரேயின் சிவ சேனா

    உத்தவ் தாக்கரேயின் சிவ சேனா கட்சியின் ஆதித்ய தாக்கரே "பட்ஜெட்டில் அதிகமான நிதியை ஆந்திரா மற்றும் பீகாருக்கு வழங்கி பாஜக அதன் அரசை பாதுகாக்க விரும்புகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் மகாராஷ்டிரா செய்த தவறு என்ன? நாங்கள் வரி வழங்கும் மிகப்பெரிய மாநிலம் இல்லையா? நாங்கள் பங்களித்ததற்கு எதிராக என்ன கிடைத்தது?.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி

    ஜீரோ உத்தரவாதம் இன்றி முற்றிலும் தோல்வியடைந்த பட்ஜெட். தோல்வியடைந்த அரசால் தோல்வியடைந்த நிதி மந்திரியால் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட். வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, உயரும் பணவீக்கம் போன்ற உடனடியை பிரச்சனை சமாளிப்பதற்குப் பதில், அரசை காப்பாற்ற லஞ்சம் கொடுப்பதற்காக பட்ஜெட்டை உருவாக்கியுள்ளது.

    ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாகூர்

    பட்ஜெட்டில் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கான ஏதும் இல்லை. அரசியல் நெருக்கடியால் பீகார் மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு பல திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் அதிகமாக வாழும் மாநிலம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா

    இந்த பட்ஜெட் நிர்மலா சீதாராமன் கர்காடகாவிற்கு வெறும் பாத்திரத்தை கொடுப்பதுபோல் உள்ளது. ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்கள் மட்டும் நிதியை பெற்றுள்ளன. மற்ற மாநிலங்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை, ஏனென்றால் அவர் (பிரதமர் மோடி) பிரதமராக நீடிக்க அந்த இரண்டு மாநிலங்களின் ஆதரவு தேவை.

    பிஜு ஜனதா தள எம்பி. சஸ்மித் பத்ரா

    நாங்கள் இந்த பட்ஜெட்டுக்கு ஆட்சேபனை தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம். ஒடிசாவின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இந்த பட்ஜெட் ஒடிசாவுக்கு எதிரானது.

    • மத்திய பட்ஜெட்டில் பீகாருக்கு ரூ.26,000 கோடி ஒதுக்கீடு.
    • பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான எந்த திட்டமும் இல்லை.

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியது. கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு அடுத்தபடியாக தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களையும் வென்று முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக உள்ளன.

    இந்நிலையில் 2024- 25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

    அப்போது, மத்திய பட்ஜெட்டில் பீகாரில் புதிய சாலைகள் அமைப்பது உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.26,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

    பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான எந்த திட்டமும் இல்லை என்று நேற்று தெரிவித்த மத்திய அரசு தற்போது பீகார் மாநிலதிக்ரு சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

    இந்நிலையில், பட்ஜெட் தொடர்பாக பேசிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், "தேசிய ஜனநாயக கூட்டணியில் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டும் என்று நான் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்தேன். எங்கள் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அல்லது சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று கோரினேன்.

    பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் முன்னரே அது கிடைக்காது என்று பலரும் பேசினார்கள். இப்போது பீகார் மாநிலத்திற்கு சிறப்பு நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது" என்று பேசியுள்ளார்.

    • பட்ஜெட்டில் ஆந்திர மாநில வளர்ச்சிக்கு ரூ.15,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • பட்ஜெட்டில் பீகார் மாநில வளர்ச்சிக்கு ரூ.26,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியது. கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு அடுத்தபடியாக தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களையும் வென்று முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக உள்ளன.

    இந்நிலையில் 2024- 25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

    அப்போது, மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநில வளர்ச்சிக்கு ரூ.15,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் பீகாரில் புதிய சாலைகள் அமைப்பது உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.26,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

    இவரது இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவளித்துள்ள ஆந்திரா, பீகாருக்கு மட்டும் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் பாராளுமன்றத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் பட்ஜெட் தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் கிண்டலாக பதிவிட்டுள்ளார். அதில், "ஆந்திரா - பீகார் பட்ஜெட் வெளியாகிவிட்டது. மற்ற மாநிலங்கள் மகிழ்ச்சியாக அல்வா சாப்பிடுங்கள்" என்று பட்ஜெட்டை அவர் விமர்சித்துள்ளார்.

    • நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
    • கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களை திருப்திப்படுத்தும் விதமாகவே பட்ஜெட் உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதன்மூலம் அவர் தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார். காலை 11 மணிக்கு சபை கூடியதும் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

    இந்நிலையில், மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

    அதில், இந்த பட்ஜெட் நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்கான பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது. கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களை திருப்திப்படுத்தும் விதமாகவே பட்ஜெட் உள்ளது. சாமானிய இந்தியர்கள் எந்தப் பலனும் இல்லாத வகையில் ஏஏ-வுக்கு (அம்பானி மற்றும் அதானி) பலன் தரும் விதமாக உள்ளது. காங்கிரசின் தேர்தல் அறிக்கை மற்றும் முந்தைய பட்ஜெட்டுகளை காப்பி அடித்துள்ளனர் என பதிவிட்டுள்ளார்.

    மத்திய பட்ஜெட் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்டுள்ள செய்தியில், இது மோடி அரசை காப்பாற்றுவதற்கான பட்ஜெட், வேறு ஒன்றும் இல்லை என தெரிவித்துள்ளார்.

    • மத்திய பட்ஜெட் மக்களுக்கு எதிரானது.
    • ஏழை மக்களின் நலனை கவனத்தில் எடுத்துக் கொள்வில்லை.

    2024-2025 மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பீகார் மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு பல்வேறு திட்டங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை என விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

    இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் வாசித்துள்ளார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் மத்திய பட்ஜெட் அரசியல் சார்புடையது, மக்களுக்கு எதிரான பட்ஜெட், மேற்கு வங்காள மாநிலம் முற்றிலும் ஏமாற்றம் அடைந்துள்ளது. ஏழை மக்களின் நலனை கவனத்தில் எடுத்துக் கொள்வில்லை என மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.

    3 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது. ஆண்டுக்கு ரூ.3 முதல் 7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5 சதவீதம் வரியும், 7 முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கு 10 சதவீதம் வரியும் விதிக்கப்படுகிறது. ரூ.10 முதல் 12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 15 சதவீதமும், ரூ..12 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீதமும், 15 லட்சத்துக்கு மேல் வருமானத்துக்கு 30 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது.

    ஆன்லைன் வர்த்தகத்திற்கு வரி குறைப்பு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்பரேட் வரி 40 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக குறைப்பு, தொழில் முதலீட்டிற்கான ஏஞ்சல் வரி முற்றிலுமாக நீக்கம், அறக்கட்டளைகளுக்கு இதுவரை இருந்த 2 விதமான வரி விதிப்பு முறை இனி ஒரே முறையாக தொடரும், 20 வகையான தாதுக்கள் மீதான சுங்க வரி குறைக்கப்படுகிறது, தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி 6 சதவீதமாக குறைப்பு. பிளாட்டின் மீதான சுங்கவரி 6.4 சவீதமாக குறைப்ப உள்ளிட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தன.

    • இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது.
    • விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் பல அம்சங்கள் பட்ஜெட்டில் உள்ளன.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் 2024- 25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    இந்நிலையில் 2024-25-ம் ஆண்டிற்கான பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களுக்கான பட்ஜெட் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

    * ஏழைகள், நடுத்தர மக்கள் வளர்ச்சி அடைவதற்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    * இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது.

    * திறன் மேம்பாடு, கல்வி உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

    * சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிகாரம் அளிக்கும் வகையிலான பட்ஜெட்.

    * வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை அடையும் பயணத்திற்கு புதிய பட்ஜெட் துணை நிற்கும்.

    * 500 முன்னணி நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு அலவென்சுடன் வேலைவாய்ப்பு பயிற்சி தரும் திட்டம்.

    * முத்ரா திட்டம் மூலம் வழங்கப்படும் கடன் தொகை ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுளள்தால் பெண்கள் பயனடைவர்.

    * புதிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மூலம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடையும்.

    * வீட்டுக்கொரு தொழில் முனைவோரை உருவாக்கும் வகையிலான அம்சங்கள் பட்ஜெட்டில் உள்ளன.

    * கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

    * புதிய பட்ஜெட் மூலம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்கள் பணி வாய்ப்பை பெறுவார்கள்

    * விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் பல அம்சங்கள் பட்ஜெட்டில் உள்ளன.

    * இந்தியா மிகப்பெரிய உற்பத்தி மையமாக மாற புதிய பட்ஜெட் வழிவகுக்கும் என்று கூறினார்.

    • காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் பக்கம் 11-ல் பயிற்சி திட்டத்தையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.
    • ஏஞ்சல் வரியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

    சென்னை:

    மத்திய பட்ஜெட் பற்றி முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    தேர்தல் முடிவுகளுக்கு பிறகு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 2024-ஐ நிதி மந்திரி படித்து இருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சி.

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் பக்கம் 30-ல் குறிப்பிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை கிட்டத்தட்ட ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் பக்கம் 11-ல் பயிற்சி திட்டத்தையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

    ஏஞ்சல் வரியை ஒழிக்க பல ஆண்டுகளாக காங்கிரஸ் கெஞ்சியது. காங்கிரஸ் ஆட்சிக்குவந்தால் ஏஞ்சல் வரி ஒழிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கை பக்கம் 31-ல் குறிப்பிட்டுள்ளோம். இப்போது ஏஞ்சல் வரியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • 2024- 25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
    • பாஜகவுக்கு ஆதரவளித்துள்ள ஆந்திரா, பீகாருக்கு மட்டும் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியது. கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு அடுத்தபடியாக தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களையும் வென்று முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக உள்ளன.

    இந்நிலையில் 2024- 25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

    அப்போது, மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநில வளர்ச்சிக்கு ரூ.15,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் பீகாரில் புதிய சாலைகள் அமைப்பது உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.26,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

    இவரது இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவளித்துள்ள ஆந்திரா, பீகாருக்கு மட்டும் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் பாராளுமன்றத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    • இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன், கல்வியை வழங்க ரூ.1.48 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம்.
    • வேளாண்துறைக்கு வரும் நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்கிறது.

    இதன் முக்கிய நிகழ்வான 2024- 25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெற்றது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

    * பிரதமரின் இலவச உணவு வழங்கும் கரீப் கல்யாண் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது.

    * இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன், கல்வியை வழங்க ரூ.1.48 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம்.

    * நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் 4 கோடி பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டம்.

    * வேளாண்துறைக்கு வரும் நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு.

    * வேலைவாய்ப்புகளை பெருக்கும் வகையில் 9 வகையான முன்னுரிமைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

    * காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படாத பயிர்களை அறிமுகம் செய்ய திட்டம்.

    * பருவநிலையை தாக்குப்பிடித்து வளரும் 102 வகையான புதிய பயிர்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    * 1 கோடி பேரை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
    • பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்து மத்தியில் 3-வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியமைந்துள்ள நிலையில், இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டியது.

    இதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்கிறது.

    இதன் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று நடக்கிறது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

    மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாக ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    இந்நிலையில் 2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து 11 மணி அளவில் பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கலாகிறது.

    ×