என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Urvashi Amirtharaj MLA"
- ஜெனித், ஜோசுவா ஆகிய 2 சிறுவர்கள் பள்ளி படிப்பை தொடர முடியாமல் தவித்தனர்.
- இதனையறிந்த ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. அவர்களது பள்ளி மேற்படிப்பிற்க்கான செலவை ஏற்று 8 வருடமாக கல்வி கட்டணத்தை தனது சொந்த நிதியிலிருந்து செலுத்தி வருகிறார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் ஒன்றியம் தச்சன்விளை கிராமத்தை சேர்ந்த தாய், தந்தையை இழந்த பாட்டி பால்தங்கம் பராமரிப்பில் உள்ள ஜெனித், ஜோசுவா ஆகிய இரு சிறுவர்கள் பள்ளி படிப்பை தொடர முடியாமல் தவித்தனர். இதனையறிந்த ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. அவர்களது பள்ளி மேற்படிப்பிற்க்கான செல வை ஏற்று கடந்த 2014-முதல் 8 வருடமாக கல்வி கட்டணத்தை தனது சொந்த நிதியிலிருந்து செலுத்தி வருகிறார்.
அதில் ஜெனித் பள்ளி படிப்பை முடித்து சென்னை-கிங்ஸ் என்ஜினீ யரிங் கல்லூரியில் இலவச மாக என்ஜினீயரிங் கல்வி பயின்று வருகிறார். இரண்டாவது பேரன் ஜோசுவா திசையன்விளை-லயன்ஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகிறார். இந்த நிலையில் மாணவன் ஜோசுவாவின் கல்வி கட்டணத்திற்க்காக ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. வழங்கிய கல்வி கட்டண வரைவோலையை தச்சன்விளையில் பாட்டி பால்தங்கம், மாணவன் ஜோசுவாவிடம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் துணைத் தலைவர் சங்கர் வழங்கினார்.
அப்போது சாத்தா ன்குளம் வட்டார காங்கி ரஸ் கமிட்டி தலை வர்கள் சக்திவேல் முருகன், பார்த்த சாரதி, முத்து வேல், பிரபு கிருபா கரன், தச்சன்விளை கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் சிவா, முதலூர் யோகபாண்டி, சாத்தான்குளம் நகர மகிளா காங்கிரஸ் தலைவர் ராணி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் சாலமோன்,முத்துராஜ், உதயமணி, மணிகண்டன், அழகேசன், மகாலிங்கம், சித்திரை பழம், ராஜன் ஆகியோர் உடன் இருந்தனர். கல்வி உதவி தொகையை பெற்ற பாட்டிமற்றும் மாணவன் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவித்தனர்.
- சாயர்புரத்தில் நகர காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் கலந்து கொண்டு பள்ளி மாணவ -மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தூத்துக்குடி:
சாயர்புரத்தில் நகர காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நகர தலைவர் ஜெயக்குமார் சந்தோஷ் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் சொரிமுத்து பிரதாபன், ஜெயசீலன் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் கலந்து கொண்டு பள்ளி மாணவ -மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட துணைத் தலைவர் சங்கர், பொருளாளர் எடிசன், ஊடக பிரிவு தலைவர் முத்துமணி, தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் இசைசங்கர், சாயர்புரம் பேரூராட்சி துணைத் தலைவர் பிரியாமேரி, கவுன்சிலர் இந்திரா, வட்டார துணைத் தலைவர் பிச்சை மணி, நிர்வாகிகள் விக்டர் சத்தியதாஸ், சூசைமாணிக்கம், ஜெயசிங் மற்றும் மாணவ- மாணவிகள், பெற்றார்கள் கலந்து கொண்டனர்.
- ஆதிநாதபுரம் ஊராட்சியில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு சுமார் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டது.
- நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவி தொகை க்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
தென்திருப்பேரை:
முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம் பாட்டு திட்டம் 2022-23 திட்டத்தின் கீழ் கேம்பலாபாத்தில் ரூ.38.14 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினை ஸ்ரீவை குண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தொடங்கி வைத்தார். மேலும் தேமாங்குளம் ஊராட்சி மானாட்டூரில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது. ஆதிநாதபுரம் ஊராட்சியில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு சுமார் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவி தொகை க்கான விண்ணப்பங்களும், நெல்லை- திருச்செந்தூர் மெயின் ரோட்டில் பால்குளம் பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் பெற்று கொண்டு ஆவன செய்து கொடுப்பதாக கூறினார்.
நிகழ்ச்சியில் ஏரல் தாசில்தார் கைலாச குமார சாமி, ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர், ஆழ்வார்திருநகரி வட்டார காங்கிரஸ் தலைவர் கோதண்டராமன், ஶ்ரீவைகுண்டம் வட்டார தலைவர் நல்லகண்ணு, வட்டார செயலாளர் மோகன் ராஜ், தெற்கு மாவட்ட துணைத்தலைவர் இசை சங்கர், மாவட்ட பொருளாளர் எடிசன், மாவட்ட பொதுச் செயலாளர் அலங்கார பாண்டியன், மாவட்ட இளைஞரணி ஜெயசீலன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தாசன், கேமலாபாத் பஞ்சாயத்து தலைவர் சபிதா ஷர்மிளா, துணைத்தலைவரும், ஆழ்வை மத்திய ஒன்றிய தி.மு.க. பொருளாளருமான ஹாஜா உதுமான், ஆழ்வை மத்திய ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் அசாருதீன், கிளை பிரதிநிதி சிந்தா பகர்தீன், ஜமாத் தலைவர் அப்துல் காதர், காண்டிராக்டர் சைமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
- கிராமப் பகுதியில் இருந்து வரும் மாணவிகளுக்கு பஸ் கிடைக்கவில்லை பள்ளிக்கு மாணவர்கள் வராமல் இருந்து விடக்கூடாது என நல்ல எண்ணத்தில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமசாமி வரவேற்றார். இந்து மேல்நிலைப்பள்ளி தலைவர் சந்தான கோபாலன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிச் செயலர் ஆதிநாதன் சிறப்புரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினராக ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் 82 பேருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக அரசினால் வழங்கப்படும் இலவச சைக்கிள்களை கிராம பகுதியில் இருந்து வந்து செல்லும் மாணவ- மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கருதுகிறேன். நீங்கள் படிப்பில் கவனம் செலுத்தி பள்ளியில் முதல் இடம் பெற்று முதல் பட்டதாரியாகவும் இருக்க வேண்டும். கிராமப் பகுதியில் இருந்து வரும் மாணவிகளுக்கு பஸ் கிடைக்கவில்லை பள்ளிக்கு மாணவர்கள் வராமல் இருந்து விடக்கூடாது என நல்ல எண்ணத்தில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதை சிறந்த முறையில் பயன்படுத்தி பள்ளிக்கு தவறாமல் வர வேண்டும். சாதாரண குடும்பத்தில் இருக்கிறோம் என நினைக்காமல் நன்றாக படித்து முன்னேற வேண்டும். உங்கள் குடும்பம் முன்னேற படிப்பில் கவனம் செலுத்தி நன்றாக படித்து நல்ல பதவிக்கு வர வேண்டுமென ஆசைப்படுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் சங்கர், ஆழ்வார் திருநகரி வட்டார தலைவர் கோதண்டராமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தாசன், ஆழ்வார் திருநகரி பேரூராட்சி தலைவி சாரதா பொன்னி இசக்கி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் காங்கிரஸ் எடிசன், சுரேஷ், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆதிநாதன், தி.மு.க. நகர செயலாளர் கோபிநாத், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி பாலசந்திரன்,
இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் ஜெயசீலன், ஊடகப்பிரிவு முத்து மணி, ஸ்ரீவைகுண்டம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெபஸ் பிளஸ்வின், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் இசை சங்கர், ஆழ்வை வட்டார பொருளாளர் விஜய் கரன், ஊடகப்பிரிவு மரியராஜ், நாசரேத் நகர காங்கிரஸ் நிர்வாகி கெர்சோம் கிறிஸ்டியான், ஆல்வின், வட்டார செயலாளர் ஆறுமுகநயினார், வட்டார செயலாளர் சேகர், வட்டார இளைஞர் அணி செயலாளர் சண்முகம், உள்பட பலர் கலந்து கொண்டனர். முதுகலை ஆசிரியர் ராஜா நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்