என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "US President election"
- தனது வருங்கால கணவருடனான நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொள்ள விரும்புவதாகக் கூறி ஒரு பெண் ஆன்லைனில் விவாதத்தைத் தூண்டியுள்ளார்.
- இரண்டு நாட்களுக்கு முன்பு பகிரப்பட்ட இந்த பதிவு கிட்டத்தட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.
வருங்கால கணவர் அமெரிக்க தேர்தலில் வாக்களிக்க மறுத்ததால் நிச்சயதார்த்தத்தோடு திருமணத்தை முடிக்க விரும்புவதாக பெண் கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று தொடங்கியது. வாக்குப்பதிவு முடிந்ததும் உடனே வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலையில் இருந்த குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தற்போது 277 இடங்கள் வரை வெற்றி பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 226 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இணையத்தில் உலாவும் நேரத்தில் வாக்களிக்கத் தவறியதால், தனது வருங்கால கணவருடனான நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொள்ள விரும்புவதாகக் கூறி ஒரு பெண் ஆன்லைனில் விவாதத்தைத் தூண்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட ரெடிட் பதிவில், அவர்கள் புளோரிடாவில் வசிப்பதாகவும், அவருடைய வருங்கால கணவர் வாக்களிக்க மறுத்துவிட்டார் என்றும் அந்த பெண் விளக்கினார். ஏனெனில் அவருக்கு எந்த வேட்பாளர்களும் பிடிக்கவில்லை. மேலும் எங்கள் உரிமைகளை இன்னும் கட்டுப்படுத்தும் எதிர்காலத்தைப் பற்றி நான் பயப்படுகிறேன் என்று அந்தப் பெண் கூறியுள்ளார்.
மேலும் "எங்கள் அரசியல் கருத்துக்கள் மிகவும் ஒத்தவை. எனவே அவர் இந்த வாக்கைத் தவிர்ப்பதில் ஏன் அலட்சியமாக இருக்கிறார் என்று எனக்குப் புரியவில்லை," என்று அவர் கூறினார். "அவர் வாக்களிக்கவில்லை என்றால் நான் அவருடன் இருக்க முடியாது என்று சொல்வது கொடுமையா?" என்று பதிவிட்டு இருந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு பகிரப்பட்ட இந்த பதிவு கிட்டத்தட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. கமென்ட்ஸ் பிரிவில், சில பயனர்கள் அவரது முடிவை ஆதரித்தாலும், மற்றவர்கள் வாக்களிப்பது தனிப்பட்ட விருப்பம் என்றும் அவர்களின் உறவைப் பாதிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.
- டொனால்டு டிரம்ப் 26,42,585 வாக்குகள் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார்.
- கமலா ஹாரிஸ் 24,42,560 வாக்குகள் பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் இன்று காலை 5.30 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் இருந்து குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் முன்னிலை பெற்று வருகிறார்.
காலை 9 மணி நிலவரப்படி டொனல்டு டிரம்ப் 214 எலக்டோரல் வாக்குகளும், கமலா ஹாரிஸ் 113 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
வெற்றி தீர்மானிக்கக் கூடியதாக ஸிவிங் என அழைக்கப்படும் ஏழு மாகாணங்கள் திகழ்கிறது. இதில் பென்சில்வேனியா மாகாணமும் ஒன்று இந்த மாகாணத்தில் முதலில் கமலா ஹாரிஸ் சுமார் 60 சதவீதம் வாக்குள் பெற்று முன்னிலை பெற்றிருந்தார்.
ஆனால் நேரம் செல்ல செல்ல டொனால்டு டிரம்ப் அவரை முந்தினார். இந்திய நேரப்படி காலை 9.45 மணி நிலவரப்படி டொனால்டு டிரம்ப் 26,42,585 (51.3 சதவீதம்) வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 24,42,560 (47.8 சதவீதம்) வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
73 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் இருவருக்கும் இடையில் இழுபறி நீடித்து வருகிறது. இந்த மாகாணத்தில் 19 எலக்டோரல் வாக்குகள் உள்ளன.
- பென்சில்வேனியாவில் 68 சதவீத வாக்குகள் பெற்று முன்னிலை.
- மிச்சிகனில் 55.7 சதவீதம் வாக்குகளும் பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்புதிவு முடிவடைந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஸ்விங் மாகாணமான அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் இந்த ஏழும்தான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும்.
இதில் ஜார்ஜியாவில் டொனால்டு டிரம்ப் முன்னிலை பெற்று வருகிறார். அதேவேளையில் கமலா ஹாரிஸ் பென்சில்வேனியா, மிச்சிகன் மாகாணங்களில் முன்னிலை பெற்று வருகிறார். பென்சில்வேனியாவில் 19 எலக்டோரல் காலேஜ் (Electoral College) வாக்குகள் உள்ளன. மிச்சிகனில் 15 வாக்குகள் உள்ளன. இதில் வெற்றி பெற்றால் கமலா ஹாரிஸ்க்கு 34 வாக்குகள் கிடைக்கும்.
பென்சில்வேனியாவில் இதுவரை 68 சதவீத வாக்குகளும், மிச்சிகனில் 55.7 சதவீதம் வாக்குகளும் பெற்றுள்ளார்.
- டொனால்டு டிரம்ப் 14,16,193 வாக்குகள் (55.3 சதவீதம்) பெற்றுள்ளார்.
- கமலா ஹாரிஸ் 1,128,043 (44.1 சதவீதம்) வாக்குகள் பெற்றுள்ளனர்.
அமெரிக்கா அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு முடிவடைந்த கையோடு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து அதிகமான மாகாணங்களில் டொனால்டு டிரம்ப் முன்னிலை பெற்று வருகிறார்.
அமெரிக்காவில் பல மாகாணங்கள் குடியரசு கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்கும். இவைகள் ரெட் ஸ்டேட்ஸ் (States) என அழைக்கப்படும். அதேபோல் பல மாகாணங்கள் ஜனநாக கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்கும். இவைகள் க்ரீன் ஸ்டேட்ஸ் (States) என அழைக்கப்படும்.
அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் இந்த ஏழு மாகாணங்கள் மாறிமாறி வாக்களிக்கும். இதனால் ஸ்விங் ஸ்டேட்ஸ் என அழைக்கப்படுகின்றன. இங்கு அதிக வாக்குகள் பெறுவர்கள்தான் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் ஜார்ஜியா மாகாணத்தில் டொனால்டு டிரம்ப் முன்னிலை பெற்று வருகிறார். 47 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டதில் டொனால்டு டிரம்ப் 14,16,193 வாக்குகள் (55.3 சதவீதம்), கமலா ஹாரிஸ் 1,128,043 (44.1 சதவீதம்) வாக்குகளும் பெற்றுள்ளனர்.
- டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
- இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்? என்பதுதான் தற்போதைய கோடிக்கணக்கானோரின் கேள்வி. இதற்கான நாள்தான் இன்று. இன்று அமெரிக்காவில் அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மக்கள் வாக்களித்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுப்பதற்கு முன்னதாகவே யார் வெற்றி பெறுவார் என்று பல்வேறு கணிப்புகள் நடத்தப்படுவது உண்டு. சில நேரங்களில் செல்லப்பிராணிகள் அல்லது பூங்காவில் உள்ள மிருகங்கள் ஆகியவற்றை வைத்து கணிப்பது உண்டு.
அப்படித்தான் தாய்லாந்தில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் குட்டி நீர் யானையை வைத்து அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றி யாருக்கு என கணித்துள்ளனர்.
தாய்லாந்தின் உள்ள பூங்காவில் மூ டெங் என்ற குட்டி நீர் யானை உள்ளது. இந்த நீர் யானையை கவரும் வகையில் இரண்டு தர்பூசணி பழங்கள் அலங்கரிக்கப்பட்டு, ஒன்றில் டொனால்டு டிரம்ப் எனப் பெயரிட்டு வைக்கப்பட்டுள்ளது. மற்றொன்றில் கமலா ஹாரிஸ் என பெயரிட்டு தனித்தனியே வைக்கப்பட்டது
Moo Deng, famous baby hippo, predicts Donald Trump will win the election. pic.twitter.com/UqUnRhU0Nr
— The Rabbit Hole (@TheRabbitHole84) November 4, 2024
நீரில் இருந்து வெளியே வந்த குட்டி நீர் யானை நேராக சென்று டொனால்டு டிரம்ப் எனப் பெயர் எழுதப்பட்ட பழத்தை சாப்பிடுகிறது. இதன்மூலம் டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவார் என குட்டி நீர் யானை கணித்ததாக வெளியான வீடியோ வைரலாக பரவி வருகிறது.
மூ டெங் என்ற குட்டி நீர் யானை தீர்க்கதரிசியாக மாறுமா? என்பது தேர்தல் முடிவுக்கு பின்னர்தான் தெரியும்.
2010-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஆக்டோபஸ் இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஜெயிப்பது யார்? என்பதை கணித்து ஆரூடம் கூறியது. அது கணித்தது அப்படியே நடந்தது. இந்த கணிப்பு உலக முழுவதும் பிரபலமாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப்- கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
- அதிபர் தேர்தலில் இறுதிக்கட்ட கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
- இரு வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டன்:
வல்லரசு நாடான அமெரிக்காவில் நாளை மறுநாள் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்கள்.
தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் இருவரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கமலா ஹாரிஸ், ஜார்ஜியாவில் பிரசாரத்தில் ஈடுபட்டார். வடக்கு கரோலினாவில் டிரம்ப் ஆதரவு திரட்டினார்.
இந்த நிலையில் அதிபர் தேர்தலில் இறுதிக்கட்ட கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அயோவா மாகாணத்தில் நடந்த இந்த கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலையில் உள்ளார். அவருக்கு 47 சதவீத ஆதரவு கிடைத்தது. டிரம்புக்கு 44 சதவீத ஆதரவு கிடைத்தது. டிரம்பை விட கமலா ஹாரிஸ் 3 சதவீதம் அதிகம் பெற்றுள்ளார். 2016 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் அயோவா மாகாணத்தில் டிரம்ப் எளிதில் வெற்றி பெற்று இருந்தார். தற்போது அங்கு அவர் பின்தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் மற்றொரு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் டிரம்ப் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இரு வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
- அவேஞ்சர்ஸ் நடிகர்கள் வீடியோ கால் மூலம் ஒன்று கூடினர்.
- அப்போது அமெரிக்க தேர்தலில் கமலா ஹாரிஸ்க்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களம் இறங்கியுள்ளார்.
இருவர்களுக்கும் இடையில் பலத்த போட்டி நிலவி வருகிறது. கருத்துக் கணிப்பில் இழுபறி நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு எலான் மஸ்க் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். கமலா ஹாரிஸ்க்கும் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மார்வெல்ஸின் அவேஞ்சர்ஸ் பட நடிகர்கள் ராபர்ட் டொனி ஜூனியர், ஸ்கார்லெட் ஜோஹான்சன், கிறிஸ் எவன்ஸ், மார்க் ரஃப்ல்லோ உள்ளிட்டோர் கமலா ஹாரிஸ்க்கு ஆதரவு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் விடியோ காலில் இணைந்துள்ளனர். அப்போது அமெரிக்கா அதிபர் தேர்தல் குறித்து விவாதித்தனர். மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில், ஜனநாயகத்திற்கான ஒன்று கூடுவோம், எப்போதும் கமலா. நாங்கள் உங்களோடு நிற்கிறோம்" என கமலா ஹாரிஸ் மற்றும் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் டிம் வால்ஸ் ஆகியோரை டேக் செய்து" மார்க் ரஃப்ல்லோ வீடியோ வெளியிட்டுள்ளார்.
We're back. Let's #AssembleForDemocracy. In the #ElectionEndgame, every vote counts ?️ #VoteBlue! Vote @KamalaHarris @Tim_Walz pic.twitter.com/Xp7YdUEqxa
— Mark Ruffalo (@MarkRuffalo) October 31, 2024
தேர்தல் வருகிற 5-ந்தேதி நடைபெற்றாலும் முன்னதாகவே வாக்களிக்கும் வசதி உள்ளது. ஜோ பைடன் 40 நிமிடங்கள் காத்திருந்தது தனது வாக்கை செலுத்தினார். பல்வேறு மாகாணங்களில் மக்கள் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
- உலகம் முழுவதும் மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்துக்களை கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடன் ஆகியோர் புறக்கணித்துள்ளனர்.
- இஸ்ரேல் முதல் உக்ரைன் வரையிலான நமது சொந்த தெற்கு எல்லையை சீரழித்து விட்டனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில தினங்கள்தான் உள்ளன. குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தனது ஆதரவாளர்கள் இடையிலான பிரசார நிகழ்ச்சியில் ஜனநாயக கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸை கடுமையாக தாக்கு பேசி வருகிறார்.
இந்த நிலையில் தனது தீபாவளி மேசேஜ்-ல் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் இந்துக்களை புறக்கணித்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவலில் "உலகம் முழுவதும் மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்துக்களை கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடன் ஆகியோர் புறக்கணித்துள்ளனர். அவர்கள் இஸ்ரேல் முதல் உக்ரைன் வரையிலான நமது சொந்த தெற்கு எல்லையை சீரழித்து விட்டனர். இருந்தபோதிலும் நாம் அமெரிக்காவை மீண்டும் வலிமையானதாக ஆக்குவோம். வலிமை மூலம் அமைதியை மீண்டும் கொண்டு வருவோம்.
வங்கதேசத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் மற்ற சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெற்றுகாட்டுமிராண்டித் தனமாக வன்முறைக்கு எனது கடுமையான கண்டத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய அதிகாரித்திற்கு கீழ் இப்படி ஒரு நம்பவம் நடைபெற்று இருந்திருக்காது" எனத் தெரிவித்துள்ளார்.
வங்கதேச வன்முறை தொடர்பாக முதன்முறையாக டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
- இந்திய-அமெரிக்கர்களில் அதிகளவில் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு அளிப்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குடியரசுக் கட்சிக்கான ஆதரவில் ஒரு சிறிய முன்னேற்றம் உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 5-ந்தேதி நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள். இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கமலா ஹாரிசுக்கு இந்திய வம்சாவளியினர் 62 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக புதிய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோவ்மென்ட் நிறுவனம், யூகோவ் நிறுவனத்துடன் இணைந்து 2024 இந்திய-அமெரிக்க மனப்பாங்குகள் என்ற தலைப்பில் புதிய கருத்துக்கணிப்பை நடத்தியது.
இந்த கருத்துக்கணிப்பில் பதிவு செய்யப்பட்ட இந்திய-அமெரிக்க வாக்காளர்களில் 62 சதவீதம் பேர் கமலா ஹாரிசுக்கு வாக்களிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர், டிரம்பிற்கு 32 சதவீதம் பேர் வாக்களிக்க உள்ளனர். இந்திய-அமெரிக்கர்களில் அதிகளவில் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு அளிப்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் குடியரசுக் கட்சிக்கான ஆதரவில் ஒரு சிறிய முன்னேற்றம் உள்ளது.
இந்திய-அமெரிக்க பெண்களிடம் கமலா ஹாரிசுக்கு 67 சதவீதம் பேரும், டிரம்பிற்கு 22 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்திய-அமெரிக்க ஆண்களில் கமலா ஹாரிசுக்கு 53 சதவீதமும், டிரம்பிற்கு 39 சதவீதமும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் 52 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் வசிக்கின்றனர்.
- அமெரிக்காவில் பொதுமக்களும் தேர்தல் நாளுக்கு முன்பே நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ தங்களது வாக்கை செலுத்தும் வசதி உள்ளது.
- அமெரிக்காவில் தற்போது 16 கோடியே 10 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என தேர்தல் கமிஷன் தரவுகள் கூறுகின்றன.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் போட்டியிடுகிறார்.
இந்தியாவை பொறுத்தவரையில் தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் என குறிப்பிட்ட சிலர் மட்டுமே தேர்தல் நாளுக்கு முன்பு தபால் மூலம் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். மற்றபடி பொதுமக்கள் அனைவரும் தேர்தல் கமிஷன் அறிவித்த நாளிலேயே வாக்களிக்க முடியும்.
ஆனால் அமெரிக்காவில் பொதுமக்களும் தேர்தல் நாளுக்கு முன்பே நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ தங்களது வாக்கை செலுத்தும் வசதி உள்ளது.
வேலை, உடல்நல பிரச்சினைகள் அல்லது பயணம் போன்ற தேர்தல் நாளில் வாக்களிப்பதில் தடைகளை எதிர்கொள்பவர்களுக்கு இது நடைமுறை தீர்வை வழங்குவதோடு மட்டுமல்லாமல், செயல்முறையை அணுகக்கூடியதாக மாற்றுவதன் மூலம் வாக்காளர் பங்கேற்பையும் அதிகரிக்கிறது.
இதனால் அமெரிக்காவில் ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலின்போதும் முன்கூட்டியே வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவே இருக்கும். கோடிக்கணக்கான மக்கள் தேர்தல் நாளுக்கு முன்பே வாக்களிப்பார்கள்.
அந்த வகையில் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பே முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை தொடங்கியது. பெரும்பாலான மாகாணங்களில் மக்கள் நேரடியாக வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். மற்ற மாகாணங்களில் மக்கள் தபால் மூலம் வாக்களிக்கின்றனர்.
அமெரிக்காவில் தற்போது 16 கோடியே 10 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என தேர்தல் கமிஷன் தரவுகள் கூறுகின்றன.
இந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் இதுவரை 2 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமானோர் முன்கூட்டியே வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
70 லட்சத்து 80 ஆயிரம் பேர் நேரடியாகவும், 1 கோடியே 30 லட்சத்து 30 ஆயிரம் பேர் தபால் மூலமும் வாக்களித்துள்ளதாக புளோரிடா பல்கலைக்கழகத்தின் தேர்தல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
வெற்றியாளரை தீர்மானிக்கும் 7 மாகாணங்களில் ஒன்றான ஜார்ஜியா மாகாணத்தில் நான்கில் ஒரு பங்கு வாக்காளர்கள் (சுமார் 10 லட்சத்து 84 ஆயிரம் பேர்) ஏற்கனவே வாக்களித்துவிட்டதாக அந்த மாகாணத்தின் தேர்தல் அதிகாரிகள் தெரிவிததனர்.
முன்கூட்டியே வாக்களிப்பதில் குடியரசு கட்சியினர் மிகுந்த ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. நேரடியாக வாக்களித்தவர்களில் 41.3 சதவீதம் பேர் குடியரசு கட்சியினர் என்றும், 33.6 சதவீதம் பேர் ஜனநாயக கட்சியினர் என்றும் தெரியவந்துள்ளது.
அதே போல் தபால் மூலம் வாக்களித்தவர்களில் 21.2 சதவீதம் பேர் குடியரசு கட்சியினர், 20.4 சதவீதம் பேர் ஜனநாயக கட்சியினர் ஆவர்.
முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறையில் ஆசிய அமெரிக்கர்களில் வெறும் 1.7 சதவீதம் மட்டுமே வாக்களித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பல இடங்களில் இந்திய வம்சாவளியினர் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த மற்றொரு தரப்பு தகவல்கள்கூறுகின்றன.
- 532 நாட்கள் என்பது பைடனின் பதிவிக்காலத்தில் 40% ஆகும்.
- கடந்த ஆண்டு பைடனுக்கு எதிராக குடியரசுக் கட்சியினர் இதேபோன்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது 4 ஆண்டு பதவிக்காலத்தில் 532 நாட்கள் விடுமுறை எடுத்துள்ளார் என்று குடியரசுக் கட்சியின் RNC ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
532 நாட்கள் என்பது பைடனின் பதிவிக்காலத்தில் 40% ஆகும். ஒரு சராசரி அமெரிக்க அரசு ஊழியர் 48 வருடத்திற்கு எடுக்கக்கூடிய விடுமுறையை பைடன் 4 ஆண்டுகளில் எடுத்துள்ளார் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஒரு அரசு ஊழியர் வருடத்திற்கு 10 முதல் 14 நாட்கள் மட்டும் தான் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு பைடனுக்கு எதிராக குடியரசுக் கட்சியினர் இதேபோன்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். அப்போது பதில் அளித்த வெள்ளை மாளிகை விடுமுறையின் போதும் பைடன் தனது ஜனாதிபதி கடமைகளில் தீவிரமாக ஈடுபடுவதாகக் கூறியது.
- ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி என கோர்ட்டு அறிவித்தது.
- நீதிபதி ஜுவான் மெர்ச்சனை டிரம்ப், சந்தித்து தேர்தலுக்குப் பிறகு தண்டனை வழங்கும் வகையில் தேதியைத் தள்ளி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடக்கிறது.
இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள்.
இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிஸ் முன்னிலையில் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த மாதம் கமலா ஹாரிசின் பிரசார குழுவுக்கு டிரம்பை விட கிட்டத்தட்ட3 மடங்கு அதிக நன்கொடை வந்துள்ளது. கமலா ஹாரிசுக்கு 361 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி குவிந்துள்ளது.
டிரம்புக்கு 130 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை கிடைத்துள்ளது. கமலா ஹாரிசுக்கு கிடைத்த தொகை, இந்த அமெரிக்க தேர்தலில் ஒரு மாதத்தில் ஒரு கட்சிக்கு கிடைத்த அதிகபட்ச தொகையாகும்.
தேர்தலில் முதலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் தனது உடல்நிலை காரணமாக தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோபைடன் கடந்த ஜூலை 21-ந்தேதி அறிவித்தார்.
அதன்பின் கமலா ஹாரிஸ் தேர்தல் களத்தில் குதித்தார். அன்றில் இருந்து கமலா ஹாரிசின் பிரசார குழு 615 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
இதுகுறித்து கமலா ஹாரிஸ் பிரசார மேலாளர் ஜூலி சாவேஸ் ரோட்ரிக்ஸ் கூறும்போது, குறுகிய காலத்தில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஒரு வரலாற்றை உருவாக்கி உள்ளார். இது தேர்தலில் நெருங்கிய வெற்றி தரும் என்றார். தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த நிதி ஆதாயம் ஹாரிசுக்கு சாதகமாக உள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி என கோர்ட்டு அறிவித்தது. இதில் வருகிற செப்டம்பர் 18-ந்தேதி டிரம்புக்கு தண்டனை விதிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நீதிபதி ஜுவான் மெர்ச்சனை டிரம்ப், சந்தித்து தேர்தலுக்குப் பிறகு தண்டனை வழங்கும் வகையில் தேதியைத் தள்ளி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். இதை ஏற்ற நீதிபதி, அதிபர் தேர்தல் முடியும் வரை, டிரம்ப் மீதான தண்டனை அறிவிப்பதை ஒத்தி வைக்க உத்தரவிட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்