search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vadakkankulam"

    • 64 - வது மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடை யிலான தடகள போட்டி செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.
    • இதில் வடக்கன்குளம் எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா பள்ளி மாணவ-மாணவிகள் 6 தங்கம் 3 வெள்ளி, 3 வெண்கல பதக்கம் பெற்றனர்.

    வள்ளியூர்:

    64 - வது மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடை யிலான தடகள போட்டி செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. இதில் வடக்கன்குளம் எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா பள்ளி மாணவ-மாணவிகள் 6 தங்கம் 3 வெள்ளி, 3 வெண்கல பதக்கம் பெற்றனர். மாணவர் பிரிவில் லனிஷ் ஜோஷுவா 17 வயது பிரிவில் வட்டு எறிதல் மற்றும் குண்டு எறிதலில் முதல் இடமும், 19 வயது பிரிவில் ஆரிஷ் மும்முறை தாண்டுதலில் முதலிடமும், அஸ்வின் வட்டு எறிதல் 3-ம் இடமும், பத்ம தேஜேஷ் குண்டு எறிதலில் 2-ம் இடமும் பெற்றனர்.

    மாணவிகள் பிரிவில் 14 வயது பிரிவில் சஸ்விகா உயரம் தாண்டுதலில் முதலிடமும், ஷாலினி 400 மீட்டர் ஒட்ட பந்தயத்தில் 3-ம் இடமும், 17 வயது பிரிவில் 4×100 மீட்டர் தொடர் ஒட்ட போட்டியில் 2-ம் இடமும், 19 வயது பிரிவில் ரோஷ்மா நீளம் தாண்டுதலில் 2-ம் இடமும், நாகேஸ்வரி குண்டு எறிதலில் 3-ம் இடமும், 4×100 மீட்டர் தொடர் ஒட்ட போட்டியில் முதலிடமும், 4×400 மீட்டர் தொடர் ஒட்ட போட்டியில் முதலிடமும் பெற்றனர்.

    இதில் 17 வயது பிரிவில் லனிஷ் ஜோஷீவா வட்டு எறிதல் போட்டியில் புதிய மாநில சாதனை படைத்து பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளையும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளி தலைவர் கிரகாம்பெல், தாளாளர் திவாகரன், முதல்வர் சுடலை யாண்டி மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

    • நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தில் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் நலன் கருதி புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.
    • குற்ற சம்பவங்கள் தலை தூக்கி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தில் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் நலன் கருதி புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.

    இங்கு போலீசார் பணியில் அமர்த்தப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதன் தொடர்ச்சியாக சமூக குற்ற சம்பவங்களுக்கு எதிராக போலீசாரின் பணிகள் மக்கள் மத்தியில் வெகுவான பாராட்டுகளை பெற்று தந்தது.

    இந்நிலையில் சுமார் 6 மாத காலமாக புறக்காவல் நிலையம் செயல்படாமல் பூட்டப்பட்ட நிலையில் காணப்படுகிறது.

    சம்பவங்கள் தலை தூக்கி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், பொதுமக்களின் புகார் குறித்து நடவடிக்கை எடுத்து புறக்காவல் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×