என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Vajpayee dead"
புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சிதைக்கு அவரது வளர்ப்பு மகன் நமிதா கவுல் பட்டாச்சார்யா தீமூட்டி இறுதி சடங்குகளை செய்தார்.
வாஜ்பாய் திருமணம் ஆகாதவர். எனவே, நமிதா கவுலை வளர்ப்பு மகளாக எடுத்து வளர்த்து வந்தார்.
பொதுவாக இந்துக்களின் மரபுப்படி பெற்றோரின் சிதைக்கு மகன் தீ மூட்ட வேண்டும். அப்படிஇல்லாத பட்சத்தில் நெருங்கிய உறவினர்கள் குடும்பத்தில் மகன் உறவு கொண்ட ஒரு ஆண் தீ மூட்ட வேண்டும்.பெண்கள் தீ மூட்டுவதற்கு அனுமதிப்பது இல்லை.
வாஜ்பாய் குடும்பத்திலும் இதே நடைமுறைதான் இருந்து வந்தது. இறந்தவருடைய மகன் பல ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு அப்பால் இருந்து வர முடியாத நிலை இருந்தாலும், ஆண் வாரிசு இல்லை என்றாலும் உறவினரில் ஒரு ஆண்தான் தீ மூட்ட வேண்டும் என்று விதிகளை வகுத்துள்ளனர்.
ஆனால், வாஜ்பாய் சிதைக்கு அவரது வளர்ப்பு மகள் நமிதா கவுல் தீ மூட்டினார். இது, பாரம்பரிய பழக்கத்தை மீறும் செயல் என சர்ச்சை எழுந்துள்ளது.
ஆனாலும், நமிதா கவுல் செய்தது சரியானது என்று பல பெண்கள் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கூறுகிறார்கள்.
டெல்லியை சேர்ந்த பேராசிரியை கியா சவுத்ரி கூறும்போது, பெண்களை சுடுகாட்டுக்கு செல்ல அனுமதி மறுப்பது, இறுதிச்சடங்கு செய்ய அனுமதிக்காதது போன்ற பழக்கங்கள் தொடர்ந்து இருந்து வருகிறது.
எங்கள் வீட்டில் ஆண் வாரிசு இல்லை. எனது தாயார் இறந்த போது நான் தான் தீ மூட்டினேன். அடுத்து எனது தந்தைக்கும் நான் அதை செய்வேன்.
நான் அவர்களுக்கு ஒரே மகள். என்னை அவர்கள் ஒரு ஆண் மகன் போலவே வளர்த்தார்கள். ஆண் மகன் போன்ற கடமையை நான் செய்கிறேன் என்று கூறினார்.
மகள்களையும் இறுதி சடங்கு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஏற்கனவே சமூக அமைப்புகளை சேர்ந்த பெண்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். இது சம்பந்தமாக சமூக வலைதளங்களில் பெண்கள் பிரசாரமும் செய்து வருகிறார்கள்.
கேரளாவில் பத்தனம் திட்டா மாவட்டத்தில் முன்னாள் ராணுவ அதிகாரி மதுநாயர் சில ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்தார்.
அப்போது மதுநாயரின் விருப்பப்படி அவரது மகள்கள் தான் சிதைக்கு தீ மூட்டினர். இதனால் அவர்கள் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. மகள்கள் தீ மூட்டினால் இறந்தவர் மோட்சத்துக்கு செல்ல முடியாது என்று அவர்கள் வாதிட்டார்கள்.
மராட்டிய மாநிலம் குபாரி என்ற இடத்தில் இறந்தவர் ஒருவருக்கு அவரது மகள்கள் தீ மூட்ட முயற்சித்தனர். அப்போது உறவினர்கள் அவர்களை தள்ளி விட்டு விட்டு உறவினரில் ஒரு ஆண் சிதைக்கு தீ மூட்டினார்.
இது சம்பந்தமாக அந்த பெண்கள் கூறும்போது, வாஜ்பாய் உடலுக்கு அவரது வளர்ப்பு மகள் தீ மூட்டியதை நாங்கள் பார்த்தோம். இது, பெண்களுக்கு கிடைத்த உரிமையாக கருதுகிறோம் என்று கூறினார்கள்.
ராஜஸ்தான் மாநிலத்தில் புன்டி மாவட்டத்தில் இறந்த ஒருவருக்கு அவரது மகள் தீ வைத்ததற்காக கிராம பஞ்சாயத்தார் அந்த குடும்பத்தையே ஒதுக்கி வைத்தனர். அவர்களுக்கு யாரும் உணவு மற்றும் எந்த பொருளும் வழங்க கூடாது என்று தடை விதிக்கப்பட்டது.
மராட்டிய பாரதிய ஜனதா தலைவர கோபிநாத் முண்டே 2014-ல் மரணம் அடைந்தார். அப்போது கூட அவரது மகள் பங்கஜ் முண்டேதான் சிதைக்கு தீ மூட்டியது குறிப்பிடத்தக்கது.
அதே போல் வாஜ்பாய் உடலுக்கு நமிதா கவுல் தீ மூட்டி பெண்களுக்கும் உரிமை உள்ளது என்பதை நிலைநாட்டி உள்ளார்.
இதற்கிடையே வாஜ்பாய் அஸ்தியை கங்கையில் கரைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இது சம்பந்தமாக வாஜ்பாய் குடும்ப பூசாரிகளுக்குள் பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது.
வாஜ்பாயின் பூர்வீக ஊர் பதேஸ்வர் ஆகும். ஆனால், வாஜ்பாய் குடும்பத்தினர் நீண்ட காலமாக குவாலியரில் வசித்து வந்தனர். அங்கு தான் வாஜ்பாய் பிறந்தார்.
இப்போது பதேஸ்வர் மற்றும் குவாலியரில் இருந்து 3 பூசாரிகள் டெல்லி வந்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் நான்தான் வாஜ்பாய் அஸ்திக்கு சடங்கு செய்யும் அதிகாரம் கொண்டவன் என்று வாதிட்டு வருகிறார்கள்.
இது சம்பந்தமாக கங்கா சபா என்ற அமைப்பு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
மயிலாடுதுறை:
பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால் டெல்லியில் நேற்று காலமானார்.
வாஜ்பாயின் மறைவுக்கு மத்திய அரசு சார்பில் 7 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழக அரசு சார்பிலும் இன்று ஒருநாள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வாஜ்பாய் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இன்று வியாபாரிகள் கடைகளை அடைத்து இரங்கல் தெரிவித்தனர். இதனால் நகரில் முக்கிய வீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டதால் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.
மயிலாடுதுறையில் இன்று மாலை பா.ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் மவுன ஊர்வலம் நடக்கிறது. இதில் அனைத்து கட்சியினர், வணிக சங்கத்தினர் கலந்து கொள்கின்றனர். இதன்பிறகு கிட்டப்பா அங்காடி முன்பு வாஜ்பாய் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
இதேபோல் சீர்காழி பகுதிகளிலும் இன்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
புதுச்சேரி:
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று மாலை 5.30 மணியளவில் காலமானார். இந்த தகவல் புதுவை முழுவதும் பரவியது.
இதனால் வியாபாரிகள் அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடந்து விடுமோ? என்ற அச்சத்துடன் கடைகளை தொடர்ந்து நடத்தலாமா? அல்லது மூடி விடலாமா? என்ற நிலையில் இருந்தனர்.
இன்று காலை 10 மணி வரை நகர பகுதியில் பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை.
கடை ஊழியர்களும், பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களும் கடை முன்பு காத்து இருந்தனர். அதன் பிறகு ஒருசில கடைகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் கடைகளை அடைக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
அதன்படி வியாபாரிகள் கடைகளை அடைத்து விட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்