என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Vallalar festival"
- சேலம் அம்மாப்பேட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் சார்பாக வள்ளலார் 201- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.
- சன்மார்க்க கொடியை ராஜகோபால் ஏற்றி வைத்தார்.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் சார்பாக வள்ளலார் 201- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. காலை 6 மணிக்கு ஜோதிகண்ணன் தலைமையில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெற்றது. சன்மார்க்க கொடியை ராஜகோபால் ஏற்றி வைத்தார்.
இதையடுத்து சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு சேலம் சிட்டிபாபு தலைமை தாங்கினார். கலைமதியழகன் வரவேற்புரை ஆற்றினார். கணபதி, பழனியப்பன், மகாபாண்டியன், அங்கப்பன், முரளி, ஞானசேகரன் மற்றும் பலர் சொற்பொழிவு ஆற்றினார்கள். குமார், ஸ்ரீராமன் ஆகியோர் அன்னதானத்தை தொடங்கி வைத்தனர். முடிவில் லோகநாதன் நன்றி கூறினார்.
- விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ், விருதுகள் வழங்கப்பட்டது.
- முப்பெரும் விழா இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கொண்டாட ப்பட்டது.
தேனி:
தேனி மாவட்டம் அல்லி நகரம் நகராட்சிக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், வள்ளலார் முப்பெரும் விழா நடை பெற்றது.
விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ், விருதுகளை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி வழங்கினார். வள்ளலார் இவ்வுலகிற்கு வருவிக்க உற்ற 200 வது ஆண்டு தொடக்கமும், தருமச்சாலை தொடங்கி 156-வது ஆண்டு தொடக்கமும், ஜோதி தரிசனம் காட்டுவித்த 152-வது ஆண்டும் சேர்ந்து நினைவுகூறும் விதமாக முப்பெரும் விழா இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கொண்டாட ப்பட்டது.
இவ்விழாவில், இந்து சமய அறநிலை யத்துறை இணை ஆணையர் பாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அருட்பிரகாச வள்ளலாரின் 200-வது பிறந்த முன்னிட்டு புதுவை தமிழ் சங்கத்தில் சிறப்பு வில்லிசை இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
- எதிர்க்கட்சி தலைவர் சிவா வில்லுப்பாட்டு இசை நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
அருட்பிரகாச வள்ளலாரின் 200-வது பிறந்த முன்னிட்டு புதுவை தமிழ் சங்கத்தில் சிறப்பு வில்லிசை இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ் சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலாளர் சீனு மோகன் தாசு வரவேற்றார். துணைத் தலைவர் ஆதிகேசவன், துணைச்செயலாளர் அருள் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் தொடக்க உரையாற்றி கவிதை வாசித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் சிவா வில்லுப்பாட்டு இசை நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து எல்லாம் தந்த வள்ளல் என்ற தலைப்பில் வில்லிசை வேந்தர் பட்டாபிராமன் குழுவினரின் சிறப்பு வில்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
புலவர் துரை மாலிறையன் , போலீஸ் சூப்பிரண்டு வீர. பாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் பொருளாளர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.
விழாவில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உசேன், சீனு.கந்தகுமார்,, தினகரன், சிவேந்திரன், கணேசுபாபு மற்றும் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்