search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vellodu Bird Sanctuary"

    • பறவைகள் கூட்டம் கூட்டமாக கூடு கட்டி, குஞ்சுகளுடன் கூச்சலிட்டுக் கொஞ்சி மகிழும்.
    • 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

    சென்னிமலை:

    தீபாவளி பண்டிகை என்றாலே ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாட்டத்தை தொடங்கி விடுவர். ஆங்காங்கே, பட்டாசு ஒலிகளும் தீபாவளிக்கு முன்பே கேட்கும்.

    இப்படி தீபாவளி பண்டிகையை விமரிசையாக கொண்டாடும் மக்களும், ஊர்களும் இருக்கும் நிலையில், தீபாவளிப் பண்டிகையை பட்டாசு வெடித்து கொண்டாடாத வித்தியாசமான பல கிராமங்களும் இருக்கின்றன.

    அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள 10 -க்கும் மேற்பட்ட கிராமங்கள் தீபாவளி பண்டிகை பண்டிகையை 20 ஆண்டுகளாக தவிர்த்து வருகின்றனர். இதற்கு காரணம் சென்னிமலை அருகே வெள்ளோட்டில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயம் தான்.

    ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அருகே 'வெள்ளோடு பறவைகள் சரணாலயம்' அமைந்துள்ளது. சுமார் 240 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்தப் பறவைகள் சரணாலயத்தில் 50 ஏக்கர் அளவில் 30 அடி ஆழத்தில் தண்ணீர் தேங்கும் வகையில் குளம் அமைக்கப்பட்டுள்ளன.

    கீழ்பவானி வாய்க்காலின் கசிவுநீர், மழைக்காலங்களில் ஓடைகளில் நிரம்பி வரும் நீர் ஆகியவற்றின் மூல ஆதாரமாகக்கொண்டு விளங்குகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காகப் பட்டாம் பூச்சி பூங்கா, செல்பி பாயிண்ட் என அமைக்கப்பட்டு சரணாலயமே எழில் மிகுந்து காட்சியளிக்கின்றது.

    பெரும்பான்மையாக இனப்பெருக்கத்திற்காக இங்கு வரும் ஆயிரக்கணக்கான பறவைகள், இங்குள்ள குளத்தில் உள்ள மீன்களை உண்ணுகின்றன.

    ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையில் இங்கு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வருவதால், அச்சமயம் சீசன் தொடங்குகிறது.

    பறவைகள் இனப்பெருக்க காலங்களில் மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, வெள்ளை அரிவால் மூக்கன், பொறி உள்ளான், நீலவால், இரைக்கோழி, சிறிய நீர் காகம், சாம்பல் நாரை, பஞ்சுருட்டான் உள்ளிட்ட உள்நாட்டுப் பறவைகள் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தை நோக்கி வருகின்றன.

    மேலும் சைபீரியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து சுழைக்கடா, வண்ண நாரை, நெடுங்கால உள்ளான், செம்பருந்து, பூ நாரை, வால் காக்கை, காஸ்பியன் ஆலா, வெண்புருவ சின்னான், கருங்கழுத்து நாரை உள்ளிட்ட வெளிநாட்டுப் பறவைகளும் கூட்டம் கூட்டமாக வெள்ளோடு சரணாலயத்திற்கு வருகின்றன.

    இப்பறவைகள் அனைத்தும் இங்குள்ள குளத்தில் குளித்து கும்மாளமிடுவதோடு, அதிலுள்ள மீன்களை உணவாக உண்டு தங்களின் பசியைத் தணிக்கின்றன.

    இனப்பெருக்கத்தைத் தொடர்ந்து மரங்களில் கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சுகள் வளர்ந்தவுடன் மீண்டும் இங்கிருந்து பறந்து செல்வதை அவைகளின் வழக்கமாகக் கொண்டுள்ளன.

    இவ்வாறு பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து மரங்களில் கூடு கட்டி, குஞ்சுகளுடன் கூச்சலிட்டுக் கொஞ்சி மகிழும் இந்த பறவைகளின் கீச்சொலிகளை கேட்கும்போது காதுகளுக்கு மட்டுமில்லாது மனதுக்கும் ஒரு அமைதியை அளிக்கின்றது.

    இந்த பறவைகளின் கூட்டத்தைக் காண, ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் இங்கு வருவதுண்டு.

    இவ்வாறு இனப்பெருக்கம் செய்ய வரும் பறவைகளுக்கு எந்த விதமான இடையூறும் வந்து விடக்கூடாது என அப்பகுதியிலுள்ள கிராமத்தினர் முடிவெடுத்துள்ளனர்.

    இதன் ஒருபகுதியாக, இந்த பறவைகள் சரணாலயத்தைச் சுற்றியுள்ள பி.மேட்டுப்பாளையம், பூங்கம்பாடி, தலையன்காட்டு வலசு, தச்சன்கரைவழி, செம்மாம்பாளையம், எல்லப்பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

    அதன் அடிப்படையில், இந்த வருடமும் தொடர்ந்து 20-வது ஆண்டாக பட்டாசு வெடிக்காமல் அமைதியான முறையில் தீபாவளியை கொண்டாடினர்.

    இந்த கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் மட்டும் இரவு நேரத்தில் கம்பி மத்தாப்பு, சக்கரம் புஷ்பானம் போன்ற பட்டாசுகளை கொளுத்தி மகிழ்ந்து வருகின்றனர்.

    • கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வறட்சியின் காரணமாக குளம் மற்றும் மரங்கள் வரண்டு போனது.
    • அயல் நாடுகளில் இருந்து கூட்டம் கூட்டமாக பறவைகள் வருவதும் அதனை பார்க்க பொது மக்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே அமைந்துள்ளது வெள்ளோடு பறவைகள் சரணாலயம். சுமார் 240 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பறவைகள் சரணாலயத்தில் 50 ஏக்கர் அளவில் 30 அடிக்கு தண்ணீர் தேக்கும் வகையில் குளம் அமைக்கபட்டுள்ளது.

    கீழ்பவானி வாய்க்காலின் கசிவு நீர் மற்றும் மழை காலத்தில் நீர் வழி ஓடையின் மூலமாக வரும் தண்ணீரையே ஆதாரமாக கொண்டுள்ளது இந்த பறவைகள் சரணாலயம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வறட்சியின் காரணமாக குளம் மற்றும் மரங்கள் வரண்டு போனது.

    இதனையடுத்து ரூ.2 கோடியே 35 லட்சம் மதிப்பில் பறவைகள் சரணாலயம் புதுப்பிக்கபட்டு சரணாலயத்தை சுற்றி கரைகள் பலப்படுத்தப்பட்டு சிறு பாலங்கள், நடை பாதைகள், பறவைகளின் வண்ண ஓவியங்கள், பட்டாம்பூச்சி பூங்கா, செல்பி பாயின்ட் என பல்வேறு மேம்பாட்டு பணிகள் முடிவுற்று எழில்மிகு ரம்மியமாக காட்சியளிக்கின்றது வெள்ளோடு பறவைகள் சரணாலயம்.

    இந்த சரணாயத்தில் உள்ள குளத்தில் உள்ள மீன்களை உண்டு இனப்பெருக்கம் செய்ய பறவைகள் அதிகம் வருவதுண்டு. ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரையில் பறவைகளுக்காக சீசன் தொடங்கும்.

    இந்த காலத்தில உள்நாட்டு பறவைகளான மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, வெள்ளை அரிவால் மூக்கன், பொறி உள்ளான், நீலவால் இரைக்கோழி, சிறிய நீர் காகம், சாம்பல் நாரை, பஞ்சுருட்டான் போன்ற உள்நாட்டு பறவைகளும் சைபீரியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து சுழைக்கடா, வண்ண நாரை, நெடுங்கல் உள்ளான், செம்பருந்துபூ நாரை, வால் காக்கை, காஸ்பியன் ஆலா, வெண்புருவ சின்னான், கருங்கழுத்து நாரை போன்ற வெளிநாட்டு பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து இந்த சரணாலய குளத்தில் குளித்து கும்மாலமிட்டு மீன்களை உணவாக உண்டு மரங்களில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து குஞ்சுகள் வளர்ந்தவுடன் பறந்து சென்று விடுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.

    இந்த பறவைகளைகான ஈரோடு மாவட்டம் மட்டு மின்றி அருகிலுள்ள கோவை, சேலம், திருச்செங்கோடு என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் வருவது உண்டு. ஈரோடு மாவட்ட த்தின் சிறந்த சுற்றுலா தளமாக வெள்ளோடு பறவைகள் சரணாலயம் திகழ்ந்து வந்தது. அயல் நாடுகளில் இருந்து கூட்டம் கூட்டமாக பறவைகள் வருவதும் அதனை பார்க்க பொது மக்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.

    இந்நிலையில ஈரோடு மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து நாட்டிலேயே 2-வது இடத்தை ஈரோடு மாவட்டம் பிடித்தது. 110 டிகிரி பாரன் ஹிட் அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. பகல் நேரங்களில் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது.

    தற்போது வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் மேம்படுத்தப்பட்ட பணிகள் நிறைவடைந்து சரணாலயம் ரம்யமாக காட்சி அளித்தாலும். வெயிலின் தாக்கம் காரணமாக வெளிநாட்டு பறவைகள் வரத்து இல்லை. பறவைகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. ஒரு சில உள்நாட்டு பறவைகள் மட்டுமே வந்து செல்கின்றன.

    இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

    • வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தை பார்வையிட சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • கடந்த ஆண்டில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சரணாலயத்தை பார்வையிட்டு சென்று உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே வட முகம் வெள்ளோடு கிராம த்தில் 77.85 ஹெக்டேரில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.

    சரணாலயத்தில் தற்போது பெரிய நீர் காகம், சிறிய நீர் காகம், பாம்பு தாரா, ஆமைக்கோழி, வண்ணநாரை, குருட்டு கொக்கு, சாம்பல் நாரை, ஆள்காட்டி பறவை, அலகு புள்ளி மூக்கு வாத்து, காட நாரை, கரண்டி வாயன், அகிலான், மூக்கன், கருங்கை, வாயன் உட்பட 100-க்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளன.

    இது மட்டுமின்றி வெளிநாடு களில் இருந்து 109 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. குறிப்பாக ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா நாடுகளில் இருந்து பெலிகன் பறவை கள் அதிகம் வருகின்றன.

    இவை 4 மாதங்கள் தங்கி முட்டை யிட்டு குஞ்சு பொரித்து இன ப்பெரு க்கம் செய்து திரும்பி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன.

    இயற்கை எழிலுடன் அமை ந்த பற வைகள் சர ணால யத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணி கள் பார்வையிட அனுமதி அளி க்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மட்டும் இல்லா மல் அருகே உள்ள மாவட்ட ங்களை சேர்ந்த சுற்றுலா பயணி கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அதிகம் வந்து செல்கின்றனர்.

    விடுமுறை நாட்களில் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வாடிக்கை. சரணாலயத்துக்குள் சென்று ரசிக்க பெரியோர்களு க்கு 20 ரூபாயும், குழந்தைகளுக்கு 10 ரூபாயும் கட்டணம் வசூலி க்கப்படுகிறது.

    இந்த சரணாலயத்துக்கு மாணவர்களை அழை த்து வரும் முயற்சியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து ஈரோடு வன கோட்ட மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறியதாவது:

    பள்ளி மாணவர்களுக்கு வன பாதுகாப்பு , பறவைகள் விலங்குகள் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் முயற்சி யாக மாணவர்கள் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தை பார்வையிட சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    தனியார் பள்ளி மாணவர்களுக்கு 5 ரூபாய் கட்டணமும், அரசு பள்ளி மாணவர்களுக்கு எந்த கட்டணம் இன்றி அனுமதிக்கிறோம்.

    இது தவிர வனத்துறை அலுவலர்கள் நேரடியாக அரசு பள்ளிகளுக்கு சென்று எங்களுடைய வாகனத்தில் குழந்தைகளை அழைத்து வந்து சரணாலயத்தை சுற்றிக் காட்டுவதுடன் பறவைகள் வில ங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    வனம், விலங்குகள் பறவைகளின் அவசியத்தை எடுத்துரைக்கிறோம். ஈரோடு மாவட்டம் மாணவர்கள் மட்டுமின்றி கரூர், திருச்சி, திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

    கடந்த ஆண்டில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பறவை சரணாலயத்துக்கு வந்து சரணாலயத்தை பார்வையிட்டு சென்று உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×