search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Viduthalai Sirthaigal Party"

    • போலீசார் தாக்கியதாக கூறி சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை அகற்றவிடாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள செம்மாண்டபட்டி கிராமத்தில் உள்ள காலனியில் புதிதாக அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டது. உரிய அனுமதி பெறாமல் வைக்கபட்ட சிலையை அகற்ற காடையாம்பட்டி தாசில்தார் அருள்பிரகாஷ், ஓமலூர் டி.எஸ்.பி சங்கீதா மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    அப்போது அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தலித் அமைப்புகள் சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். தொடர்ந்து சிலையின் முன்பாக அமர்ந்து, சிலையை எடுத்தல் கடுமையான போராட்டம் நடத்தப்படும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

    அப்போது அங்கு வந்த சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் சம்பவ இடத்திற்கு வந்து பேசினார். ஆனால், அவரது பேச்சை யாரும் கேட்காத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்து வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிலை அகற்றி எடுத்து செல்லப்பட்டது.

    இந்தநிலையில், கைது செய்யப்பட்டவர்களை சங்ககிரி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து சென்று வைத்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் சிலை விவகாரம் பிரச்சனை ஓய்ந்ததால், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டு, ஓமலூரில் கொண்டு வந்து விடப்பட்டனர்.

    இந்தநிலையில், இளம்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பா ளர் சமுராய்குருவை மட்டும் தனியாக வாகனத்தில் அழைத்து சென்றதாகவும், இதுபற்றி அவர் கேட்டபோது, மேச்சேரி இன்ஸ்பெக்டர் அவரை தாக்கியதாகவும் கூறி ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×