search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Village Vigilance Committee"

    • பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் வில்லேஜ் விசிலன்ஸ் கமிட்டி கலந்தாய்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஊராட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    டி.என்.பாளையம்:

    பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் 3 பேரூராட்சி மற்றும் 8 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கு ஊரில் நடக்கும் குற்ற நிகழ்வு குறித்து "வில்லேஜ் விசிலன்ஸ் கமிட்டி" கலந்தாய்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி பங்களாப்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வாணிப்புத்தூர், கே.என்.பாளையம், பெரிய கொடிவேரி பேரூராட்சிகள் மற்றும் அரக்கன்கோட்டை, புஞ்சை துறையம்பாளையம், கொண்டையம்பாளையம், கணக்கம்பாளையம், பெருமுகை உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த வேண்டும். புதிய நபர்களின் நடமாட்டம் இருந்தாலோ, சந்தேகத்தின் பேரில் புதிய நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டாலோ சம்பந்த ப்பட்ட போலீஸ் நிலை யத்தில் தகவல் கொடுக்கு மாறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேரூராட்சி, ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்க ளுக்கு போலீசார் அறிவுறுத்தி பேசினர்.

    தடை செய்யப்பட்ட புகையிலை, கஞ்சா மற்றும் சட்ட விரோதமாக மதுபான பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருப்போர் குறித்து தகவல் தெரியும் பட்சத்தில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ள ப்பட்டது. மது போதையில் பொதுமக்களிடத்திலோ, பொது இடங்களிலோ இடையூறு மற்றும் தகராறில் ஈடுபடும் நபர்கள் குறித்து போலீசில் தலைவர்கள் தகவல் கொடுக்க வேண்டுமாறு நிகழ்ச்சியில் போலிசார் பேசினர்.

    இந்த குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது பங்களாப்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், தனிப்பிரிவு போலீசார் உடன் இருந்தனர்.

    ×