search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "VO Chidambaranar"

    • ஆங்கிலேய அரசை தீரமுடன் எதிர்த்து தன் வாழ்நாள் முழுவதும் போராடிய "கப்பலோட்டிய தமிழன்" வ.உ.சிதம்பரனாரின் நினைவுதினம் இன்று.
    • வழக்கறிஞர், எழுத்தாளர், தொழிற்சங்கத் தலைவர், அரசியல்வாதி, சுதந்திர போராட்ட வீரர் என பல கோணங்களில் நாட்டிற்காக உழைத்த செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார்.

    சென்னை:

    'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    "மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ" என மகாகவி பாரதி மனம் நொந்து பாடும் அளவுக்குக் கோவைச் சிறையில் கொடுமைக்குள்ளான வீரர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள்.

    தன் இளமை, சொத்து, பாரிஸ்டர் பட்டம் என அனைத்தையும் இழந்து வாழ்நாளெல்லாம் இந்திய விடுதலைக்காகப் போராடிய தனிப்பெரும் தியாகசீலராம் கப்பலோட்டிய தமிழரை நன்றிப்பெருக்குடன் நினைவுகூர்வோம்! அவரது பன்முகப்பட்ட வாழ்வையும் பணிகளையும் போற்றுவோம்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆங்கிலேய அரசை தீரமுடன் எதிர்த்து தன் வாழ்நாள் முழுவதும் போராடிய "கப்பலோட்டிய தமிழன்" வ.உ.சிதம்பரனாரின் நினைவுதினம் இன்று.
    • வழக்கறிஞர், எழுத்தாளர், தொழிற்சங்கத் தலைவர், அரசியல்வாதி, சுதந்திர போராட்ட வீரர் என பல கோணங்களில் நாட்டிற்காக உழைத்த செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    சுதேசி இயக்கத்தை தொடங்கி இந்திய மக்களிடையே சுதந்திர போராட்ட உணர்வை அதிகரிக்கச் செய்வதோடு ஆங்கிலேய அரசை தீரமுடன் எதிர்த்து தன் வாழ்நாள் முழுவதும் போராடிய "கப்பலோட்டிய தமிழன்" வ.உ.சிதம்பரனாரின் நினைவுதினம் இன்று.

    வழக்கறிஞர், எழுத்தாளர், தொழிற்சங்கத் தலைவர், அரசியல்வாதி, சுதந்திர போராட்ட வீரர் என பல கோணங்களில் நாட்டிற்காக உழைத்த செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் தியாகத்தையும், கடின உழைப்பையும் என்றென்றும் நினைவில் வைத்து போற்றுவோம்.

    இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

    • கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 150-வது பிறந்தநாளான 5-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
    • அ.தி.மு.க. சார்பில் என்.தளவாய்சுந்தரம், பா.வளர்மதி, ப.மோகன், கடம்பூர் ராஜூ, சண்முகநாதன், செல்லப்பாண்டியன், சின்னத்துரை, சரவண பெருமாள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களில் முக்கியமான ஒருவராகத் திகழ்ந்தவரும், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என பன்முகத் தன்மை பெற்றவருமான, கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 150-வது பிறந்தநாளான 5-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் என்.தளவாய்சுந்தரம், பா.வளர்மதி, ப.மோகன், கடம்பூர் ராஜூ, சண்முகநாதன், செல்லப்பாண்டியன், சின்னத்துரை, சரவண பெருமாள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.

    அ.தி.மு.க. அமைப்புச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ, தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன் ஆகியோர் இணைந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகளும், முன்னாள் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×