search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vocational training center"

    • ஏராளமான மாணவர்கள் ஆர்வத்தோடு சேர்ந்து படித்து வருகின்றனர்.
    • போதை ஆசாமிகள் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    உடுமலை :

    தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உடுமலை அருகே எலையமுத்தூர் சாலையில் செயல்பட்டு வருகிறது.

    இங்கு மின்சார பணியாளர், பொருத்துநர், கம்மியார் மோட்டார் வாகனம், கம்பியாள், பற்ற வைப்பவர் உள்ளிட்ட பிரிவுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் நடப்பாண்டில் புதிதாக இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் - டிஜிட்டல் மேணுபேக்ச்சரிங் டெக்னீசியன், மேணுபேக்ச்சரிங் பிராசஸ் கண்ட்ரோல் - ஆட்டோமேஷன், அட்வான்ஸ் சி .என் .சி மெஷின் - டெக்னீசியன் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி அரசு உதவிகளுடன் பயிற்சியின்போது தொழில் நிறுவனங்களில் உதவித்தொகையுடன் பயிற்சி, பயிற்சி முடித்தவுடன் மத்திய மாநில அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு, மாதாந்திர உதவித் தொகையும் வழங்கப்படுவதால் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்தோடு சேர்ந்து படித்து வருகின்றனர். ஆனால் இந்தத் தொழில் பயிற்சி நிலையத்தை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் கட்டப்படவில்லை. இதனால் போதை ஆசாமிகள் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குடிபோதையில் பாட்டில்களை உடைத்து தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் பரவலாக வீசியும் வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் காம்பவுண்ட் சுவர் இல்லாத காரணத்தினால் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. எனவே உடுமலை எலையமுத்தூர் சாலையில் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    • கடலூர் மாவட்டத்தில் தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
    • அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலைங்களில் உள்ள தொழிற் பிரிவு விபரங்கள் இணையதளத்தில் பார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

     கடலூர்:                               

    கடலூர் மாவட்டத்தில், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கடலூர் (மகளிர்), சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் நெய்வேலி தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2022 ஆம் ஆண்டு பயிற்சியாளர்கள் சேர்க்கை இணையவழிக் கலந்தாய்வு மூலம் நடைபெற உள்ளது.

    இதற்காக இணையதளம் வாயிலாக கடந்த 24- ந்தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவ, மாணவியர் இந்ந வாய்ப்பினை பயன்படுத்தி அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர்ந்து பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேலும் அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலைங்களில் உள்ள தொழிற் பிரிவு விபரங்கள் இணையதளத்தில் பார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாணவர்களின் விண்ணப்பங்கள் அடிப்படையில் மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை இதே இணையதளத்தில் வெளியிடப்படும். தொழிற் பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோரும் ரூ.750 - உதவித்தொகை மற்றும் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, புத்தகம், காலணி, சீருடை, வரைபடக் கருவிகள் ஆகியவை வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்து தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு (மின்சாரப்பணியாளர் மற்றும் பொருத்துனர் பிரிவு) சுய வேலை வாய்ப்பு செய்திடும் பொருட்டு கைக்கருவிகள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது.

    மேலும் பயிற்சியின் போதே பிரபல தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் டிரெய்னிங் உதவித் தொகையுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய ஜூலை 20 ந்தேதி கடைசி நாளாகும்.

    இந்த இணையதள வழியிலான கலந்தாய்வில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.மேலும் விபரங்களுக்கு 04142 - 290273 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் 50 ரூபாயை விண்ணப்பதாரர் செலுத்தலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    ஆலங்குடியில் தொழிற்பயிற்சி நிலைய மாணவிகள் 2 பேர் ஒரே நாளில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகினறனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி இந்திராநகரை சேர்ந்தவர் பழனியப்பன். இவருடைய மகள் நதியா(வயது 19). இவர் ஆலங்குடியில் உள்ள ஒரு தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வந்தார். கடந்த 10-ந் தேதி எலி மருந்தை தின்று விட்டு வீட்டில மயங்கி கிடந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் நதியாவை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று நதியா இறந்தார்.

    இதே போல் அதேதொழிற் பயிற்சி நிலையத்தில் படித்து வந்த கரும்பிரான்கோட்டையை சேர்ந்த கருப்பையா என்பவரின் மகள் சண்முக பிரியா (18) என்பவரும் கடந்த 10-ந் தேதி எலி மருந்தை தின்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து நதியாவின் தந்தை பழனியப்பன், தனது மகள் வயிற்றுவலி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக ஆலங்குடி போலீசில் புகார் தெரிவித்தார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், நதியாவும், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவியும் தோழிகள் என்பதும், இவர்கள் 2 பேரும் செல்போனில் நீண்ட நேரமாக பேசி வந்ததும் தெரிய வந்தது. இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த சம்பவத்திற்கு காதல் விவகாரம் காரணமா? 2 மாணவிகளும் ஒரே நாளில் ஏன் வி‌ஷமருந்தை சாப்பிட்டார்கள்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×