என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Water Project Works"
- நகர மன்ற தலைவர் சவுந்தரராஜன் ஆய்வு
- 6 மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும்
குடியாத்தம்:
குடியாத்தம் நகராட்சியில் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்திற்கு மாற்றாக அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.13 கோடி மதிப்பீட்டில் கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த அம்ருத் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடியாத்தம் விநாயகபுரம் பயணியர் விடுதி அருகே 23 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைதள குடிநீர் தேக்க தொட்டியும், எம்.பி.எஸ்.நகரில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவும், அசோக்நகர் பகுதியில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது.
மேலும் ஐதர்புரம் பாலாற்று பகுதியில் உள்ள குடியாத்தம் நகராட்சிக்கு சொந்தமான 9 குடிநீர் சப்ளை செய்யப்படும் கிணறுகளில் இருந்து அம்ருத் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு குடிநீர் பைப்புகள் இணைக்கப்பட உள்ளது இந்த குடிநீர் பைப்புகள் இணைக்கும் பாதையை குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், நகராட்சி ஆணையாளர் மங்கையர்க்கரசன், நகராட்சி பொறியாளர், சிசில்தாமஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது நகரமன்ற உறுப்பினர்கள் என்.கோவிந்தராஜ், ரேணுகாபாபு ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது நகர மன்ற தலைவர் சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
குடியாத்தம் நகராட்சியில் உள்ள பொது மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க ரூ.13 கோடி மதிப்பீட்டில் அம்ருத் திட்டத்தின் கீழ் கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த குடிநீர் பணிகள் ஓரிரு மாதங்களில் நிறைவு பெறும் இதனால் குடியாத்தம் நகராட்சி பொது மக்களுக்கு விரைவில் தினந்தோறும் குடிநீர் கிடைக்கும்.மேலும் தரைதள மற்றும் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டிகள் கட்டும் பணிகள் 6 மாதத்திற்குள் முடிக்கப்படும் இதனால் குடியாத்தம் நகராட்சியில் குடிநீர் பஞ்சம் என்பது இருக்காது என்றார்.
- பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
- 15 வார்டுகளிலும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் விநியோகம்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பேரூராட்சியில் ஒவ்வொரு மாதமும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் கட்டமைப்புகள் மேற்கொள்வது தொடர்பாக கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, ஒடுகத்தூர் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சத்யாவதி பாஸ்கரன் தலைமை தாங்கினார், செயல் அலுவலர் ராமு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேரூராட்சி பணியாளர் மதன் தீர்மானங்களை வாசித்தார்.
இதில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ஒடுகத்தூர் பேரூராட்சியில் ரூ.25.30 கோடி மதிப்பில் குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் 15 வார்டுகளிலும் புதிய குடிநீர் பைப்லைன் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் பேரூராட்சி பணியாளர்கள் உட்பட அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.
- அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்
- ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது .
கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சுபபிரியா குமரன் தலைமை தாங்கினார், செயல் அலுவலர் உமாராணி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் சதிஷ்குமார் முக்கிய தீர்மானங்களை வாசித்தார்.
அதில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் பள்ளிகொண்டா பேரூராட்சியில் புதிய குடிநீர் பைப்லைன் அமைப்பது அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு ஒட்டுமொத்தமாக இந்த பணிகளை ரூ.30.90 கோடியில் நீதி ஒதுக்கீட்டில் ஒப்பந்ததாரருக்கு பணி உத்தரவு வழங்க 18 வார்டு கவுன்சிலர்களின் ஒப்புதலுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் பேரூ ராட்சி பணியாளர்கள் உட்பட அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்