search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water release from"

    • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதார மாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசன த்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    அதே நேரம் மழை பொழிவு இல்லாத தால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வருகிறது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    மேலும் கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து நீர்மின் உற்பத்திக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரண மாகவும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 67. 72 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,056 கன அடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது.

    கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 400 கன அடியாக நீர் திறந்து விட்ட நிலையில் இன்று முதல் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

    • முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
    • 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்க ன்கோட்டை பாசன வாய்கால்கள் மூலம் கோபி, அந்தியூர், பவானி உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    இந்த நிலையில் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்பேரில் கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி வாய்க்காலில் வினாடிக்கு 300 கன அடி தண்ணீரும், அரக்கன்கோட்டை வாய்க்காலில் வினாடிக்கு 200 அடி கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    முதல் போக பாசனத்திற்கான தண்ணீரை பொதுப்பணித்துறை பொறியாளர் சதீஸ், டி.என்.பாளையம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் எம்.சிவபாலன் மற்றும் விவசாயிகள் திறந்து வைத்தனர்.

    மேலும் முதல் போக பாசனத்திற்கு இன்று முதல் ஆகஸ்ட் மாதம் 18-ந் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நீர் திறக்கப்பட்டதையொட்டி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி வணங்கினர். இந்த முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தடப்பள்ளி அரக்கன்கோட்டை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

    ×