search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "West Bengal MP"

    • ராஜினாமா கடிதத்தை, மேற்குவங்க முதல்வரிடம் வழங்கியுள்ளார்.
    • தனது தொகுதிக்குட்பட்ட கட்சித் தலைமை மீது அதிருப்தி.

    மேற்குவங்க எம்.பியும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த மிமி சக்ரபோர்த்தி, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

    தனது ராஜினாமா கடிதத்தை, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

    தனது தொகுதிக்குட்பட்ட கட்சித் தலைமை மீது அதிருப்தி தெரிவித்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

    ஆனால் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை மேலிடம் இன்னும் ஏற்கவில்லை எனவும் மிமி சக்ரபோர்த்தி தெரிவித்துள்ளார்.

    தனது ராஜினாமா கடிதத்தை முறைப்படி மக்களவை சபாநாயகரிடம் வழங்காமல், மம்தாவிடம் வழங்கியதற்கான காரணம் குறித்து மிமி சக்ரபோர்த்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதிலளித்த மிமி, " கட்சி மேலிடத்தில் இருந்து ஒப்புதல் கிடைத்ததும், ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பிப்பேன்" என்றார்.

    • மசோதாவிற்கு 2 எம்.பி.க்களை தவிர அனைவரும் ஆதரவு தெரிவித்தனர்
    • தே.ஜ.க. கூட்டணி ஆளும் 16 மாநிலங்களில் ஒரு பெண் முதல்வர் கூட இல்லை

    மேற்கு வங்காளத்திலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் (62). பல சந்தர்ப்பங்களில் பா.ஜ.க.விற்கு எதிராக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வருபவர்.

    இந்தியாவின் பாராளுமன்ற தொகுதிகளிலும், மாநிலங்களின் சட்டசபை தொகுதிகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வருவதற்கான மசோதாவை நேற்று மக்களவையில் பா.ஜ.க. தாக்கல் செய்தது. இந்திய பாராளுமன்றத்திற்கான புதிய கட்டிடத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் மசோதா இது என்பது குறிப்பிடத்தக்கது.

    மக்கள் தொகை கணக்கெடுப்பும், பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை மறுசீரமைப்பும் முடிந்ததும்தான் இந்த ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும். 2024 பொதுத்தேர்தலுக்கு பிறகு இதற்கான பணிகள் தொடங்கும் என அரசு தெரிவித்துள்ளது.

    மக்களவையில் 2 உறுப்பினர்கள் நீங்கலாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த மசோதாவிற்கு ஆதரவு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவிற்கு ஒப்புதல் அளித்த எதிர்கட்சிகள் அதன் சில அம்சங்களை குறித்து விமர்சித்தனர்.

    இது குறித்த விவாதத்தின் போது மாநிலங்களவையில் பேசிய டெரிக் ஓ பிரியன் தெரிவித்ததாவது:

    பெண்களுக்கு அதிகாரம் அளிக்க பா.ஜ.க. உண்மையில் விரும்பவில்லை. தேர்தலில் போட்டியிட தொகுதி ஒதுக்குவது வேறு; வெல்லும் வாய்ப்புள்ள தொகுதிகளை ஒதுக்குவது என்பது வேறு. மேற்கு வங்காளத்தில் சுகாதாரம், நிதி, நில சீர்திருத்தம், தொழில் துறை மற்றும் வர்த்தகம் ஆகியவற்றிற்கு பெண்கள்தான் அமைச்சர்களாக உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் 16 மாநிலங்களில் ஒரு பெண் முதல்வர் கூட இல்லை. நீங்கள் பழைய பாராளுமன்ற கட்டிடத்திலிருந்து புது பாராளுமன்றத்திற்கு மாறலாம். ஆனால் முதலில் உங்கள் கண்ணோட்டத்தை நீங்கள் மாற்றி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டெரிக் ஓ பிரையன் அரசியலில் நிழைவதற்கு முன் தொலைக்காட்சிகளில் புகழ் பெற்ற போர்ன்விட்டா கேள்வி-பதில் நிகழ்ச்சியில் கேள்வியாளராக பிரபலம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×