search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "will be constructed"

    • சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவிலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பண்ணாரியம்மன் கோவிலில் தினமும் அன்ன பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
    • மேலும் கோவிலில் முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் ரூ.1.92 கோடி செலவில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி யம்மன் கோவிலுக்கு அமைச்சர் சேகர்பாபு வந்ததார். தொடர்ந்து அங்கு சாமி தரிசனம் செய்து ஆய்வு செய்தார்.

    இதில் ஏ.ஜி.வெங்கடா சலம் எம்.எல்.ஏ, கூடுதல் ஆணையர் (இந்துசமயம் மற்றும் அறநிலையத்துறை) கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மதுபாலன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    அப்போது அைமச்சர் சேகர்பாபு பேசியதாவது:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த புதிய அரசு பல்வேறு திருப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. பல ஆண்டுகளாக நிலுவை யில் இருந்த திருப்பணிகளை நிறைவு செய்து குடமுழுக்கு நடத்துவது, 12 ஆண்டுகள் கடந்து திருப்பணிகள் மேற்கொள்ளாத கோவில் களில் திருப்பணிகள் மேற்கொண்டு வருகிறது.

    மேலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோவில்களில் பழமை மாறாமல் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஆணையிட்டு உள்ளார். இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் தமிழகத்தில் தற்போது ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் வைப்பு நிதியாக ரூ.1 லட்சம் என சுமார் 11,959 கோவில்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்த வைப்பு நிதி ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது.

    மேலும் குளங்கள், தேர்கள், நந்தவனங்கள் பராமரிப்பு, பழைய தேர்கள் புது ப்பிப்பது, புதுத்தேர்களை உருவாக்குவது என பல் வேறு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    இதே போல் தற்போது சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவிலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பண்ணாரியம்மன் கோவிலில் தினமும் அன்ன பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கோவிலில் முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் ரூ.1.92 கோடி செலவில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதேபோல் கோவில் மகா மண்டபம் மற்றும் சோபனமண்டபத்தில் கைப்பிடிகள் பித்தளையாக அமைக்க உத்தர விடப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.87 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    ராஜ கோபுரம் கட்டுமான பணி ரூ.11.50 கோடி செலவில் 9 நிலை ராஜ கோபுரம் அமைக்க ப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாகத்தில் மருத்துவமனையை அமைக்கப்படும். அந்த மருத்துவ மனையை முதல்-அமைச்சர் திறந்து வைப்பார்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலைய த்துறை இணைஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணை யர்திரு.அன்னக்கொடி, ஓய்வு பெற்ற தொல்பொருள் துறை உதவி இயக்குநர் சுப்பிரமணியன், இந்து சமயஅற நிலையத்துறை தாசில்தார் தாமோதரன் மற்றும் கோவில் செயல் அலுவலர்கள் அருள்குமார், கயல்விழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×