என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "with veechariwala"
- யோகமூர்த்தி வீச்சரிவாளுடன் வந்து ராமச்சந்திரனை சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
- சூரம்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த கந்தன் என்கிற யோக மூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி சமயபுரம் மாரியம்மன் கோவில் பின்புறம் பகுதியை சேர்ந்தவர் குண்டு ராமு என்கிற ராமச்சந்திரன் (35). கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் கந்தன் என்கிற யோகமூர்த்தி (42). தள்ளுவண்டியில் சமோசா வியாபாரம் செய்து வந்தார். இவர்கள் இருவரும் நண்பர்கள். இவர்களுக்குள் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு ராமச்சந்திரன் சூரம்பட்டி கறிக்கடையில் தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது யோகமூர்த்தி வீச்சரிவாளுடன் அங்கு வந்து ராமச்சந்திரனின் பின்பக்க தலையிலும், வலது கையிலும் சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமச்சந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கந்தன் என்கிற யோகமூர்த்தியை தேடி வந்தனர். இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இந்த ராமச்சந்திரனுக்கு தலையில் 13 தையல்களும், இடது கையில் 7 தையல்களும் போடப்பட்டன. அவர் தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு சூரம்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த கந்தன் என்கிற யோக மூர்த்தியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு யோகமூர்த்தியின் மகனை ராமச்சந்திரன் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த யோகமூர்த்தி, ராமச்சந்திரனை பழி வாங்க திட்டம் போட்டு வந்துள்ளார்.
இதன்படி சம்பவத்தன்று ராமச்சந்திரன் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த யோகமூர்த்தி அவரை வெட்டியது விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் யோகமூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.