என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "without electricity connection"
- ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் மின்சக்தி 2047 மின்சார பெருவிழா கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
- இதுபோன்று மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வரும் மின் சார்ந்த திட்டங்களைக் கொண்டு தங்களது வாழ்வாதாரத்தினையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
தேனி:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே நல்லகருப்பன்பட்டி தனியார் கல்லூரியில் கிராமப்புற மின்மயமாக்கல் நிறுவனம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஆகியவற்றின் சார்பில், ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் மின்சக்தி 2047 மின்சார பெருவிழா கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட கலெக்டர் பேசும் போது தெரிவித்ததாவது:-
மத்திய அரசு நாடு முழுவதும் மின் கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு மின்சார்ந்த திட்டங்களை வகுத்து மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறது. அவற்றில் முக்கியமானவைகள் சவுபாக்கியா, ஒருங்கிணைந்த மின் விநியோக திட்டம் மற்றும் தீனதயாள் உபாத்யாயா கிராமின் ஜோதி யோஜனா திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டம் மற்றும் செயல்பாடுகளால் மின் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு, அதன் மூலம் மின் நுகர்வோர்கள் பெற்று வரும் பலன்களை நாடு முழுவதும் உள்ள மின் நுகர்வோர்களுக்கு தெரிவிக்கும் பொருட்டு, ஜூலை மாதம் 25 முதல் 30 வரையிலான நாட்களில் நாட்டிலுள்ள 773 மாவட்டங்களில் ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் மின்சக்தி, 2047 மின்சார பெருவிழா நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, மின்சார பெருவிழா கிராமப்புற மின்மயமாக்கல் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஆகியவற்றின் சார்பில் மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் சிறிய புகைப்படங்கள், நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் மூலம் நுகர்வோர்களுக்கு அரசின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் விளக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இவற்றில் தேனி மாவட்டத்தில் சவுபாக்கியா, ஒருங்கிணைந்த மின் விநியோக திட்டத்தின் கீழ் புதிய மின்பாதைகள் அமைத்தல், புதிய மின்மாற்றிகள் அமைத்தல், மேம்படுத்தப்பட்ட மின்அளவிகள் பொருத்துதல், அதிக குறுக்களவு கொண்ட கம்பிகளாக மாற்றுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அவற்றில் திட்ட மதிப்பீடு ரூபாய் 36 கோடி. இவற்றின் மூலம் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 22 நகர பஞ்சாயத்துகளில் உள்ள நுகர்வோர்களுக்கு மேம்படுத்தப்பட்ட மின் அழுத்தம், மின்தடை குறைதல், மின் தடை ஏற்பட்டால் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
தீனதயாள் உபாத்யாயா கிராமின் ஜோதி யோஜனா திட்டத்தின் மூலம் தேனி மாவட்டத்தில் 8 கிராமப்புறங்களில் மின் கம்பிகள் புதிதாக அமைக்கப்பட்டு 421 மின் நுகர்வோர்கள் பயன்பெற்றுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் ரூ.135.84 லட்சம் மதிப்பீட்டில் மின் நுகர்வோர்களுக்கு மேற்குறிப்பிட்டவாறு சீரான மின் அழுத்தம், மின் தடை குறைப்பு ஆகிய நன்மைகள் கிடைத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவற்றில் தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மின் விநியோக திட்டம் மற்றும் தீனதயாள் உபாத்யாயா கிராமின் ஜோதி யோஜனா திட்டம் போன்ற திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு தேனி மின்பகிர்மான வட்டத்தில் மின்னிணைப்பு இல்லாத கிராமங்கள் இல்லை என்று மின்வாரியத்தால் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்று மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வரும் மின் சார்ந்த திட்டங்களைக் கொண்டு, மின் நுகர்வோர்கள் தங்களது பகுதியினையும், தங்களது வாழ்வாதாரத்தினையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்