என் மலர்
நீங்கள் தேடியது "worker threat"
நாகர்கோவில்:
குலசேகரம் வெண்டலிக் கோடு பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கிய டெல்லின் (வயது 30). தொழிலாளி.
இவர் நாகர்கோவிலுக்கு வேலைக்காக வந்திருந்தார். பின்னர் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக கோட்டார் கம்பளம் வழியாக பஸ் நிறுத்தத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் அவரை தடுத்து நிறுத்தி குடிப்பதற்கு பணம் கேட்டார். ஆனால் தன்னிடம் பணம் எதுவும் இல்லை என ஆரோக்கிய டெல்லின் கூறினார்.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி அவரை மிரட்டினார். இதைப் பார்த்த அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் வருவதைப்பார்த்ததும் அந்த வாலிபர் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்துச் சென்றார்.
இதுகுறித்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் ஆரோக்கிய டெல்லினை கத்தியை காட்டி மிரட்டியது இருளப்பபுரம் பகுதியை சேர்ந்த சிவகண்டன் (36) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் சிவகண்டன் மீது கொலை மற்றும் கொலை மிரட்டல், அடிதடி வழக்குகள், உள்பட பல்வேறு வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
களக்காடு:
களக்காடு அருகில் உள்ள கீழதேவநல்லூரை சேர்ந்தவர் சுடலை (வயது 30). கட்டிட தொழிலாளி.
நேற்று முன்தினம் சுடலை நாகன்குளம் விலக்கு அருகில் வந்த போது சிங்கிகுளத்தை சேர்ந்த நம்பிராஜன் (29) அவரை மிரட்டி ரூ 100 பணம் பறித்ததாக தெரிகிறது.
இதுபற்றிய புகாரின் பேரில் களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் லிபிபால்ராஜ் வழக்கு பதிந்து நம்பிராஜனை கைது செய்தார்.






