search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WPL 2023"

    • கிரண் பேட் செய்த போது அவரது பேட்டில் எம்எஸ்டி 07 என டோனியின் பெயர் மற்றும் ஜெர்ஸி எண் பொறிக்கப்பட்டு இருந்தது.
    • உபி வாரியர்ஸ் அணி வீராங்கனை கிரன் நேவ்கிர் அரைசதம் அடித்தார்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 3-வது லீக் போட்டியில் உபி வாரியர்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 170 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய உபி வாரியர்ஸ் அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் உபி வாரியர்ஸ் அணி வீராங்கனை கிரன் நேவ்கிர் அரைசதத்தை கடந்து 53 (43) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். இவர் பயன்படுத்தும் பேட்டில் எம்எஸ்டி 07 என்ற எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. இது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் பெயர் மற்றும் அவரது ஜெர்ஸி எண்ணை குறிப்பிடும் வகையில் உள்ளது. அதை வைத்து பார்த்தால் அவரும் டோனியின் கோடான கோடி ரசிகர்களில் ஒருவராக இருப்பார் எனத் தெரிகிறது.

    இந்தப் போட்டியில் கிரண் பேட் செய்த போது அவரது பேட்டில் எம்எஸ்டி 07 என டோனியின் பெயர் மற்றும் ஜெர்ஸி எண் பொறிக்கப்பட்டு இருந்தது பெரும்பாலான பார்வையாளர்களின் கவனத்தை பெற்றது. அது சமூக வலைதளத்திலும் வைரலாகி வருகிறது.

    மகாராஷ்டிரா மாநிலம் சோலாபூர் பகுதியை சேர்ந்தவர் கிரண். 28 வயதான அவர் இந்திய அணிக்காக 6 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அவரை வாரியர்ஸ் அணி சுமார் 30 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது. டி20 போட்டியின் ஒரே இன்னிங்ஸில் 150+ ரன்களை எடுத்த இந்திய வீராங்கனை அவர் மட்டுமே. 2021-22 மகளிர் சீனியர் டி20 கோப்பை தொடரில் 76 பந்துகளில் 162 ரன்களை அவர் எடுத்திருந்தார். 16 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்கள் இதில் அடங்கும்.

    ×